Lankamuslim.org

One World One Ummah

தனது சொந்த நாட்டில் கொள்ளையில் ஈடுபட்டதாக 72 பேரது விபரங்கள் ?

leave a comment »

ggggggஉலகின் பெரும் செல்வந்தர்கள் மற்றும் அதிகாரம் மிக்கவர்கள் தமது செல்வதை மறைந்து வரி ஏய்ப்பில் ஈடுபடுபடுவதை காட்டும்  ரகசிய ஆவணங்கள் கசிந்துள்ளன. உலகின் இரகசிய சட்ட நிறுவனங்களில் ஒன்றான பனாமா நாட்டின் மொஸ்ஸாக் போன்செகாவின் பதினொரு மில்லியனுக்கும் அதிகமான ஆவணங்களே தற்போது கசிந்துள்ளன. இதில் மொஸ்ஸாக் போன்செகா தனது வாடிக்கையாளர்களுக்கு பணமோசடி, பொருளாதார தடைகளை தவிர்ப்பதற்கு மற்றும் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதற்கு உதவிய விபரங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளது

எனினும் தமது நிறுவனம் எந்த ஒரு குற்றச்சாட்டும் இன்றி 40 ஆண்டுகளுக்கு மேல் இயங்கி வருவதாகவும் எந்த ஒரு குற்றச்செயலிலும் ஈடுபடவில்லை என்றும் மொஸ்ஸாக் போன்செகா குறிப்பிட்டுள்ளது.

மொஸ்ஸாக் போன்செகா உலகின் 4ஆவது பெரிய பல்வேறு சேவைகளை வழங்கும் நிறுவனமாகும்.இது 3 லட்சம் நிறுவனங்களுடன் செயல்படுகிறது. மேலும் ஒரு வலுவான இங்கிலாந்து இணைப்பும் உள்ளது.

இதில் தனது சொந்த நாட்டில் கொள்ளையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட சார்வாதிகாரிகள் உட்பட முன்னாள் மற்றும் இந்நாள் அரச தலைவர்கள் 72 பேரது விபரங்கள் தொடர்புடைய ஆவணங்கள் உள்ளடங்கியுள்ளன.

மொஸ்ஸாக் போன்செகா கடந்த 40 ஆண்டுகளில் தனது நாளாந்த வர்த்தக செயற்பாடுகளை உள்ளடக்கியதாக இந்த ஆவணம் இருப்பதாக புலனாய்வு ஊடகவியலாளர்களின் சர்வதேச கூட்டமைப்பின் இயக்குனர் கெரார்ட் ரைல் குறிப்பிட்டுள்ளார்.

எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக், லிபியாவின் முன்னாள் தலைவர் முஅம்மர் கடாபி, சிரிய ஜனாதிபதி பஷர் அல் அஸாத் ஆகியோரது குடும்பத்தினர் மற்றும் நெருக்கமானவர்களோடு தொடர்புடைய ரகசிய வெளிநாட்டு நிறுவனங்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளியான ஆவணங்களில் இருக்கின்றன.

தவிர, சவூதி அரேபிய மன்னர் சல்மான், ஐக்கிய அரபு இராச்சிய தலைவர் மற்றும் கட்டார் நாட்டு முன்னாள் எமீர் ஹமத் பின் ஜெஸீம் பின் ஜபர் அல் தானி, பார்சிலோனா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி ஆகியோரின் பெயர்களும் இந்த ஆவணங்களில் உள்ளன.

அதேபோன்று ரஷ்ய வங்கி ஒன்று பில்லியன் டொலர்கள் அளவுக்கு பணத்தை முறைகேடு செய்ததில் ஈடுபட்டிருந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாகவும், அதில் அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு நெருக்கமானவர்கள் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்றும் இந்த ஆவணங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

புடினின் நெருங்கிய நண்பர்கள் பனாமா, சுவிட்சர்லாந்து, சைப்ரஸ் நாடுகளில் சொத்துக்களை வாங்கி குவித்திருப்பதாக ஆவணங்களில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் புடினின் குடும்பத்தினர் பயன்பெற்றுள்ளதாக ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீபின் குடும்பத்தினர் பிரிட்டனில் நான்கு நிறுவனங்களை நடத்தி வருவதாகவும், இந்த நிறுவனங்களின் மூலம் அதிகமான சொத்துக்கள் வாங்கி வைத்துள்ளதாகவும் ஆவணங்களில் கூறப்பட்டுள்ளன.

ஜெர்மனியிலிருந்து வெளியாகும் செய்தித் தாளுக்கு முதலில் இந்த ஆவணங்கள் கிடைத்தன. அவை பின்னர் புலனாய்வு ஊடகவியலாளர்களின் சர்வதேச கூட்டமைப்புடன் பகிர்ந்துகொள்ளப்பட்டன. தொடர்ந்து 78 நாடுகளில் உள்ள 107 ஊடக நிறுனங்கள் தற்போது இந்த ஆவணங்களை ஆராய்ந்துவருகின்றன.

வெளிநாட்டு வங்கிகளில் பெருமளவில் பணம் முதலீடு செய்பவர்கள் விபரங்களை சம்பந்தப்பட்ட வங்கிகள் உச்சபட்ச ரகசியமாக பேணும் நிலையில் பிரபலங்கள் பலரை இப்படி அம்பலப்படுத்தும் வகையில் தகவல் எப்படி கசிந்தது என்பது சுவாரஸ்யமானது.

இது குறித்து முனிச் நகரில் இருந்து செயல்படும் சுடட்சே ஜெய்துங் என்ற நாளிதழின் செய்தியாளர் பாஸ்டியன் ஓபர்மேயர் கூறும்போது, “அடையாளத்தை வெளியிடாத உள்வட்டாரம் ஒன்று எங்களுக்கு இத்தகவலை வழங்கியது. அவர்கள் இதற்காக பண பலன் ஏதும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், தங்கள் அடையாளம் எவ்விதத்திலும் வெளியாகிவிடக்கூடாது என்பதை மட்டும் வலியுறுத்தினர்” என்றார்.

இந்நிலையில் பனாமா நாட்டு ஜனாதிபதி ஜூவான் கார்லஸ் வெரெலா விடுத்துள்ள அறிக்கையில், “பனாமா நிதித் துறையில் எவ்வித முறைகேட்டுக்கும் இடமில்லை என்பதில் உறுதியாக இருக்கிறோம். தற்போது கசிந்துள்ள ஆவணங்கள் தொடர்பாக முழுமையான நீதி விசாரணைக்கு ஒத்துழைக்க தயாராக இருக்கிறோம்” என்றார்.-TK

ddd

Written by lankamuslim

ஏப்ரல் 6, 2016 இல் 7:40 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: