Lankamuslim.org

One World One Ummah

பனாமா ‘பேப்பர்ஸ்’ கசிவு பல நாடுகளில் அரசியல் பதற்றம் மற்றும் விசாரணை !!

leave a comment »

panaஉலகில் செல்வந்தர்கள் மற்றும் செல்வாக்கு மிக்கவர்கள்வரி ஏய்ப்பில் ஈடுபட்டது குறித்து பனாமா சட்ட நிறுவனம் ஒன்றின் ஆவணங்கள் கசிந்திருக்கும் நிலையில் உலகெங்கும் பல அரசுகள் இது குறித்து விசாரணைகளை ஆரம்பித்திருப்பதோடு அரசியல் பதற்றமும் ஏற்பட்டுள்ளது.

‘பனாமா பேப்பர்ஸ்’ என்ற பெயரில் வெளியாகியுள்ள, இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளவர்கள் பட்டியலில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் நெருங்கிய நண்பர்கள் உட்பட சீனா, பிரிட்டன், ஐஸ்லாந்து, பாகிஸ்தான் மற்றும் உக்ரைன் நாட்டு அரச தலைவர்களின் உறவினர்களும் அடங்குகின்றனர். இதில் உலகின் பெரும் புள்ளிகளின் பணத்தை பதுக்க வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

எனினும் தற்போது கசிந்திருக்கும் 11.5 மில்லியன் ஆவணங்களின் மூலம் சுமத்தப்பட்டிருக்கும் நிதி மோசடிக் குற்றச்சாட்டுகளை உலகின் பெரும் புள்ளிகள் மற்றும் நிறுவனங்கள் மறுத்துள்ளன. எனினும் இது குறித்து தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த விவகாரம் கசிந்ததை அடுத்த சீனா இது குறித்து ஊடக செய்திகளுக்கு கட்டுப்பாடுகள் விதித்திருப்பதோடு, மேற்குலகின் அறிக்கைகள் மேற்கத்தேயர் அல்லாத தலைவர்களுக்கு எதிராக பக்கச்சார்பாக இருப்பதாக சீன அரச ஊடகம் குற்றம்சாட்டியுள்ளது.

இந்த மோசடிகள் குறித்து அவுஸ்திரேலியா, பிரான்ஸ், நியூஸிலாந்து, ஆஸ்திரியா, ஸ்வீடன் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன. அமெரிக்கா உட்பட மேலும் சில நாடுகள் இந்த விவகாரம் தொடர்பில் அவதானம் செலுத்தி இருப்பதாக குறிப்பிட்டுள்ளன.

அம்பலமாகி இருக்கும் பனாமா சட்ட நிறுவனமான மொசக் பொன்செகா ஆவணங்களின்படி அந்த நிறுவனம், உலகெங்கும் இருக்கும் தமது வாடிக்கையாளர்களுக்காக 240,000க்கும் அதிகமான வெளிநாட்டு நிறுவனங்களை அமைத்துள்ளது. எனினும் தாம் எந்த தவறும் செய்யவில்லை என்று அந்த நிறுவனம் மறுத்துள்ளது. பதிலாக தமது தனியுரிமை பாதிக்கப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டிய அந்த நிறுவனம் தமது வர்த்தக செயற்பாடுகளை ஊடகங்கள் தவறாக காட்டுன்றன என்று குறிப்பிட்டுள்ளது.

இதில் குறிப்பிட்ட தொகையை செலுத்தி, போலியான பெயரில் உள்ள நிறுவனத்தின் இயக்குனராக பதிவு செய்து கொள்ளலாம். அந்த நிறுவனத்தின் பெயரில் வங்கிகளில் பணத்தை முதலீடு செய்து கொள்ளலாம். இவ்வாறு, வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் தங்களுடைய பணத்தை பதுக்கி வைத்துக் கொள்ள மொசக் பொன்செகா நிறுவனம் உதவுவதாகவே குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் குடும்பத்தினர், இங்கிலாந்து பிரதமர் டேவிட் கெமரூனின் தந்தை, ஐஸ்லாந்து நாட்டின் பிரதமர் சிக்முன்டுர் டேவிட் குன்லாக்சன் ஆகியோர் பல மில்லியன் டொலர்கள் அளவிற்கு வங்கி பத்திரங்களை பனாமா நாட்டில் வாங்கி சொத்துகளாக குவித்து இருப்பது அம்பலாமாகியுள்ளது.

சீன ஜனாதிபதி பற்றிய குற்றச்சாட்டு குறித்து அந்நாட்டு வெளியுறவு அமைச்சின் பேச்சாளரிடம் ஊடகங்கள் விளக்கம் கேட்டபோது, அவை அடிப்படை அற்ற குற்றச்சாட்டுகள் என குறிப்பிட்டுள்ளார். எனினும் இந்த சர்ச்சை குறித்த விபரங்களை பெறுவதை சீன அரசு முடக்கியிருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மறுபுறம் ஐஸ்லாந்தில் பிரதமருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் வெடித்துள்ளது. பணப்பதுக்கலில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்கு உள்ளாகி இருக்கும் பிரதமர் பதவி விலகக் கோரி பெரும் எண்ணிக்கையானோர் பாராளுமன்றத்திற்கு வெளியில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்போவதாக எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.

ஐஸ்லாந்து பிரதமர் சிக்முன்டுர் டேவிட் தனது மனைவி பிரிட்டீஷ் விர்ஜின் தீவுகளில் கடற்கரையை ஒட்டிய நிறுவனம் ஒன்றினை வாங்கியதற்கான ஆவணங்கள் ‘பனாமா பேப்பர்ஸ்’ கசிவில் இடம்பெற்றுள்ளது. எனினும், தன்மீதான குற்றச்சாட்டுகளை பிரதமர் டேவிட் மறுத்துள்ளார். மேலும் பதவி விலகும் எண்ணமே இல்லை என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். தன் கணவர் எந்தவொரு சொத்தையும், பணத்தையும் மறைக்கவில்லை என்று பிரதமர் டேவிட்டின் மனைவியும் கூறியுள்ளார்.

‘பனாமா பேப்பர்ஸ்’ கசிவில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் பெயர் நேரடியாக இடம் பெறவில்லை என்றாலும், அவர் 2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வங்கிகள் வழியாகவும், நிழல் நிறுவனங்கள் மூலமும் பதுக்கி வைத்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் ஜனாதிபதியின் கிரம்ளின் மாளிகை இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது. “இதுபோன்ற தகவல்களை வெளியிட்டதாக கூறப்படும் புலனாய்வு செய்தியாளர்கள், செய்தியாளர்களே அல்ல. இவர்கள் அமெரிக்க உளவுத்துறையின் முன்னாள் அதிகாரிகள். ரஷ்யாவின் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கும் நோக்கத்தில் இதுபோன்ற அபாண்டமான குற்றச்சாட்டை சுமத்துகின்றனர்.

குறிப்பாக, ரஷ்யாவில் விரைவில் ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் நடைபெறவுள்ள வேளையில் நமது நாட்டுக்கும் ஜனாதிபதி புடினுக்கும் அவப்பெயரை உண்டாக்கும் நோக்கத்தில் இதுபோன்ற தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன” என ரஷ்ய ஜனாதிபதி மாளிகையான கிரெம்ளினின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.

மறுபுறம் நவாஸ் ஷரீப் குடும்பத்தினரின் வெளிநாட்டு நிறுவன உரிமையை நியாயப்படுத்தி அவரது மகன் பதலளித்துள்ளார். கசிந்திருக்கும் ஆவணத்தில் நவாஸ் ஷரீபின் மூன்று குழந்தைகளுக்கு சொந்தமான வெளிநாட்டு நிறுவனங்களுக்கு லண்டனில் சொத்துகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று சில எதிர்க்கட்சிகள் அழுத்தம் கொடுத்துள்ளன.

ஆனால் தமது வர்த்தக நடவடிக்கைகள் அனைத்தும் சட்டபூர்வமானவை என்று ஷரீபின் மகன் ஹுஸைன் குறிப்பிட்டுள்ளார்.

மொசக் பொன்செகா சட்ட நிறுவனத்தின் மோசடிகள் குறித்த ஆவணங்களை அடையாளம் தெரியாத ஒருவர் மூலம் முதலில் ஜெர்மனியைச் சேர்ந்த பத்திரிகைக்கு கிடைத்தது. அதைத் தொடர்ந்து, சர்வதேச புலன் விசாரணை பத்திரிகையாளர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் இணைந்து, கடந்த எட்டு மாதங்களாக ஆய்வு செய்து பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளனர். கடந்த, 40 ஆண்டுகளாக, உலகெங்கும், 2.14 லட்சம் நிறுவனங்களில் செய்யப்பட்ட முதலீடுகள் குறித்த விபரங்களே வெளியாகியுள்ளன.-TK

Advertisements

Written by lankamuslim

ஏப்ரல் 6, 2016 இல் 8:51 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: