Lankamuslim.org

One World One Ummah

பாராளுமன்றம் இன்று முதல் அரசியலமைப்பு சபையாக கூடுகிறது

leave a comment »

srilanka_parliament-8இணைப்பு-3 பாராளுமன்றம் இன்று(05) முதல் முறையாக அரசியலமைப்பு சபையாக கூடுகிறது. இதன் போது அரசியலமைப்பு சபைக்கு சகல கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி 7 உப தலைவர்கள் தெரிவாக இருப்பதோடு நடவடிக்ைக குழுவுக்கு 21 உறுப்பினர்கள் தெரிவாக  உள்ளனர் .

பிற்பகல் 2.00 மணிக்கு பாராளுமன்றம் அரசியலமைப்பு சபையாக கூட இருப்பதோடு புதிய அரசியலமைப்பு சபையாக பாராளுமன்றம் கூடி புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவது தொடர்பாக சபாநாயகர் இதன் போது விளக்கமளிப்பார். அதனை தொடர்ந்து பிரதமரும் கட்சித் தலைவர்களும் உரையாற்ற இருப்பதாக அறிய வருகிறது. மே மாதம் முதல் அரசியலமைப்பு சபை தொடர்ச்சியாக கூடவுள்ளது.

இணைப்பு-2

ஏழு உப தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதிய அரசியலமைப்பை உருவாக்கும் நோக்குடன் பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக உருவாக்கியதன் பின்னர், இன்று முதல் முறையாக கூடியுள்ள அச் சபையில் ஏழு உப தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அரசியலமைப்பு சபையின் தலைவராக சபாநாயகர்

கரு ஜெயசூரிய

உப தலைவர்களாக

1.செல்வம் அடைக்கலநாதன்

2.திலங்க சுமதிபால

3.கபீர் கசீம்

4.சுதர்ஷனி பிரணாந்து பிள்ளை

5.திலக் மாரப்பன

6.மஹிந்த யாப்பா அபேவர்த்தன

7.நலிந்த ஜயதிஸ்ஸ

இணைப்பு-33

இதற்கு மேலதிகமாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் 21 உறுப்பினர்கள் அடங்கிய செயற்குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அரசியலமைப்பு சபையின் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்காக 21 பேரடங்கிய நடவடிக்கை குழுவொன்றும் இன்று நியமிக்கப்பட்டது. இந்த குழுவின் தலைவராக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பெயரை ஆளுங்கட்சியின் பிரதம கொறடா அமைச்சர் கயந்த கருணாதிலக்க பிரேரித்தார்.

நடவடிக்கை குழுவின் ஏனைய அங்கத்தவர்களாக….
01) லக்‌ஷ்மன் கிரியெல்ல
02) நிமல் சிறிபால டி சில்வா
03) ரவூப் ஹக்கீம்
04) விஜேதாச ராஜபக்ஸ
05) சுசில் பிரேமஜயந்த
06) ரிஷார்ட் பதியுதீன்
07) சம்பிக்க ரணவக்க
08) டி.எம். சுவாமிநாதன்
09) மனோ கணேசன்
10) மலிக் சமரவிக்ரம
11) எதிர்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன்
12) எதிர்கட்சியின் பிரதம கொறடா அனுரகுமார திசாநாயக்க
13) டிலான் பெரோர
14) தினேஷ் குணவர்தன
15) ஜயம்பதி விக்ரமரட்ன
16) எம்.ஏ. சுமந்திரன்
17) துசித்த விஜேமான்ன
18) பிரசன்ன ரணதுங்க
19) டக்ளஸ் தேவானந்தா
20) பிமல் ரத்னாயக்க

இவர்களின் பெயர்களும் ஆளுங்கட்சியின் பிரதம கொறடாவினால் பிரேரிக்கப்பட்டது. இந்த உறுப்பினர்களின் பெயர்களை அரசியலமைப்புச் சபை ஏகமனதாக அங்கீகரித்தது.

இதன்போது எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினராலும் இந்த பிரேரணைக்கு ஆட்சேபனை தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Written by lankamuslim

ஏப்ரல் 5, 2016 இல் 1:34 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: