Lankamuslim.org

One World One Ummah

ஹெரோயின் : சுமுது , பண்டார , முவாஸ் ஆகிய மூன்று பிரதான சந்தேக நபர்கள் கைது !

leave a comment »

hiroஹெரோயின் வர்த்தகத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் மேலும் மூன்று   பிரதான சந்தேகநபர்கள் நீர்கொழும்பு பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

சுமுது தரங்க பிரணாந்து எனப்படும் தலாஹேன பகுதியைச் சேர்ந்த 38 வயதான ஒருவரும் பண்டார அனில் ரோஹான் எனப்படும் கொச்சிக்கடை பகுதியைச் சேர்ந்த 39 வயதான ஒருவருமே இவ்வாறு கைதாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் சட்டத்தரணியுடன் பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவில் ஆஜராகியதன் பின்னரே கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதேவேளை 110 கிலோகிராம் ஹெரோயின் மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இலங்கையர் ஒருவர் இன்று அதிகாலை இந்தியாவில் இருந்து நாட்டுக்கு வந்த போது கைதுசெய்யப்பட்டார்.இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து முவாஸ் முஹம்மத்   கைதாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அண்மையில் இலங்கையின் தெற்கு கடற்பகுதியில் வைத்து 101 கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டதுடன், 14 வௌிநாட்டுப் பிரஜைகளும் கைதுசெய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

யாழ். கொடிகாமம் பகுதியில் ஒரு கோடியே 40 இலட்சம் ரூபா பெறுமதியான கேரளா கஞ்சா

இதேவேளை யாழ். கொடிகாமம் பகுதியில் ஒரு கோடியே 40 இலட்சம் ரூபா பெறுமதியான கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக, கொழும்பு விஷேட போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் இன்று தெரிவித்துள்ளனர்.

பருத்தித்துறையில் இருந்து கொழும்பிற்கு 95 கிலோ 865 கிராம் நிறையுடைய சுமார் ஒரு கோடியே 40 இலட்சம் ரூபா பெறுமதியான கஞ்சா பொதிகளை கடத்த முயற்சித்த, நிலையில் அந்தக் கடத்தல் முறியடிக்கப்பட்டு, கஞ்சா பொதிகள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

கொழும்பு விஷேட போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 1.00 மணியளவில் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கஞ்சாவினை கொழும்பிற்கு கடத்த முற்பட்ட நபர் கஞ்சா பொதியினை விட்டுவிட்டு, தப்பி ஓடியுள்ளார். எனினும் அவர் பயணித்த மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், மோட்டார் சைக்கிளின் இலக்கத்தினை வைத்து தப்பி ஓடிய நபரை கைதுசெய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், மீட்கப்பட்ட கஞ்சா பொதிகளை சாவகச்சேரி நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றதாகவும் கொழும்பு விஷேட போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

Written by lankamuslim

ஏப்ரல் 4, 2016 இல் 11:42 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: