Lankamuslim.org

One World One Ummah

திருமணத்துக்கு முன் கர்பமாதல் , கருக்கலைப்பு ஆகிய சமூக சீர்கேடுகள் பற்றியும் பேசுவார்களா ?

leave a comment »

ggஇலங்கையில்  முஸ்லிம் சமூகத்தில் பெண்கள் குறைந்த வயதில் திருமணம் செய்து வைக்கப்படுவதை தடுப்பது மகளிர் மற்றும் சிறுவர் விவகாரங்களுக்கான அமைச்சால் மட்டுமே இயலாது என அமைச்சர் சந்திராணி பண்டார பிபிசியிடம் தெரிவித்தார்.

18 வயதுக்குட்பட்ட முஸ்லிம் பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பது தொடர்பில் அந்த சமூகத்திலிருந்தே எதிர்ப்புகள் வருகின்றன என்று அவர் கூறுகிறார்.இது மதம் சார்ந்த விஷயம் என்பதால் முஸ்லிம் தரப்பினருடன் பேசிய பின்னரே தீர்மானத்திற்கு வர முடியும் எனவும் அமைச்சர் சந்திராணி சுட்டக்காட்டியுள்ளார்.

முஸ்லிம் அமைச்சர்கள், சமூகப் பிரதிநிதிகள், நீதி அமைச்சு என பல்தரப்புடன் கலந்துரையாடிய பின்னரே, தன்னால் அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்க முடியும் என அவர் கூறுகிறார்.

தானும் ஒரு தாய் என்ற வகையில், 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பதை எதிர்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.இலங்கையின் பொதுசட்டங்களின் அடிப்படையில் 18 வயதுக்குட்பட்ட பெண்கள் திருமணம் செய்வது சட்டவிரோதமாகும். ஆனால் மத அடிப்படையில் முஸ்லிம் சமூகத்திற்கு இச்சட்டம் பொருந்தாததாக இருக்கிறது.

முஸ்லிம் பெண்களுக்கு 18 வயதுக்கு முன்னர் திருமணம் செய்வதை மதப் பிரச்சினையாக பார்க்காமல், சிறுவர் நலன் மற்றும் சமூகப் பிரச்சினையாகப் பார்க்க வேண்டும் என, புதிய அரசியல் சாசனக் குழுவினர் முன்னர் ஆலோசனை வைக்கப்பட்டுள்ளது. -BBC

அதேவேளை இந்த கருத்துக்களை முன்வைப்பவர்கள் முஸ்லிம் சமூகத்தை குறிவைத்தாலும் , சிறுவர் பாலியல் , பாலில் வன்புணர்வு ,சிறுவயதில் கண்ணித்தன்மையை இழத்தல், திருமணத்துக்கு முன்னர் ஆண் ,பெண் தகாத பாலியல் உறவு , திருமணத்துக்கு முன்னர் கற்பமாதல் , கருக்கலைப்பு ஆகிய சமூக சீர்கேடுகள் முஸ்லிம் சமூகத்தில் மிகவும் குறைவாக இருப்பதை அவர்கள் கண்டுகொள்ள தவறியுள்ளனர் என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்

Written by lankamuslim

ஏப்ரல் 4, 2016 இல் 4:24 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: