Lankamuslim.org

One World One Ummah

போதைப்பொருள் அற்ற நாடு : 5ஆவது கட்ட செயல்திட்டம்

leave a comment »

miபோதைப்பொருள் அற்ற நாடு என்ற தொனிப்பொருளிலான போதைப்பொருள் ஒழிப்பு தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் 5வது கட்டம் குருநாகல் மாவட்டத்தை மையப்படுத்தியதாக நடைமுறைப் படுத்தப்படுகின்றது.

அதன் பிரதான நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணிக்கு குருநாகல் மாளிகாப்பிட்டிய விளையாட்டரங்கில் நடைபெறும்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ‘மைத்திரி ஆட்சி – நிலையான நாடு’ கொள்கைப் பிரகடனத்திற்கேற்ப போதைப்பொருள் அற்ற ஒரு இலங்கையை உருவாக்குவதனூடாக சமூக, பொருளாதார, கலாசார அபிவிருத்திக்கான பின்புலத்தை அமைப்பதே ‘போதைப்பொருள் அற்ற நாடு’ தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கமாகும்.

போதைப்பொருள் ஒழிப்பு ஜனாதிபதி செயலணியினால் நடைமுறைப்படுத்தப்படும் இந்நிகழ்ச்சித் திட்டத்தினூடாக மதுபானம், புகையிலை மற்றும் சட்டவிரோத போதைப்பொருள் பாவனையை படிப்படியாகக் குறைத்து அதனை பாவிப்பதனால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதனூடாக எல்லா இலங்கையர்களினதும் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கும் உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்கும் வறுமையை ஒழிப்பதற்கும் நேரடிப் பங்களிப்பை பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கப்படுகின்றது.

பாடசாலைப் பிள்ளைகள், சிவில் நிறுவனங்கள் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில் செயற்படும் பிரஜைகள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட சிவில் மற்றும் அரச துறையைப் பிரதிநிதித்துவப் படுத்தும் எல்லோரினதும் பங்கு பற்றுகையுடன் நடைபெறும், போதைப்பொருள் அற்ற நாடு’ தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் முதலாவது கட்டம் கம்பஹா மாவட்டத்தை மையப்படுத்தியதாக நடைபெற்றதுடன், இரண்டாவது கட்டம் காலி மாவட்டத்தை மையப்படுத்தியதாகவும், மூன்றாவது கட்டம் கேகாலை மாவட்டத்தை மையப்படுத்தியதாகவும், நான்காவது கட்டம் கொழும்பு மாவட்டத்தை மையப் படுத்தியதாகவும் நடைபெற்றன.

இந்நிகழ்ச்சித் திட்டத்தின் 5ஆவது கட்டம் குருநாகல் மாவட்டத்தை மையப்படுத்தியதாக நடைபெறுவதுடன், இத்தோடு இணைந்ததாக சட்டவிரோத போதைப்பொருள் சுற்றிவளைப்பு உள்ளிட்ட பல விசேட நிகழ்ச்சித்திட்டங்களும் கடந்த சில நாட்களில் மாவட்டம் எங்கிலும் நடைமுறைப்படுத்தப்பட்டன.-TC

Advertisements

Written by lankamuslim

ஏப்ரல் 4, 2016 இல் 6:31 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: