Lankamuslim.org

One World One Ummah

இனவாதம் , மதவாதம் ,பிரிவினை வாதம் இனி வேண்டாம் : பிரதமர்

leave a comment »

piஇலங்கையில் இனவாதம் , மதவாதம் ,பிரிவினைவாதம் மற்றும் பயங்கரவாதம் என எதுவும் இனி வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கிவரும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நடத்திய யொன்புரய இறுதி நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த நிகழ்வுகளுக்கு உங்களை அழைத்தது எங்களுடைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நல்ல செயற்பாடாகும்.

நாட்டின் அபிவிருத்தியால் ஏற்படும் பிரதிபலன்களை அனுபவிக்கப்போவது, நானோ, ஜனாதிபதியோ, முதலமைச்சர்களோ அல்லது ஆளுநர்களோ அல்ல. அந்த நன்மைகள் கிடைப்பது உங்கள் எல்லோருக்கும் என்பதை நான் நினைவு படுத்துகிறேன் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த வகையிலே யுத்தத்தின் பிறகு இன பேதம், மத பேதம் எல்லாவற்றையும் மறந்து ஒருதாய் பிள்ளைகள் போல் நாம் இலங்கையர் என்ற வகையில் ஒன்றாக இந்த நாட்டினை கட்டியெழுப்புவதற்காகவே இந்த வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இந்த இடத்தில் அனைத்து இன மக்களும் ஒன்றுகூடி இருப்பது இலங்கையர் என்ற அடிப்படையில், எதிர்காலத்தில் அனைவரும் ஐக்கியப்பட்டவர்கள் என்ற வகையில் இந்த நாட்டை வளர்ச்சி பெற வைப்பதற்காக முன்வர வேண்டும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisements

Written by lankamuslim

ஏப்ரல் 4, 2016 இல் 6:46 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: