Lankamuslim.org

One World One Ummah

அரசில்யாப்பு உருவாக்க அறிக்கை தயாராகிறது ஆனால் முஸ்லிம் கட்சிகள் !!!?

with one comment

sri lanka muslim congress 04புதிய அரசியல் யாப்பு உருவாக்குவதற்காக பொதுமக்களிடம் பெற்றுக் கொள்ளப்பட்ட கருத்துக்களை ஆய்வுக்கு உட்படுத்தி அறிக்கை ஒன்றை தயாரிப்பதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்திருப்பதாக அரசியலமைப்பு குறித்து பொது மக்களின் கருத்துக்களை பெறும் குழு தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கையை தயாரிப்பதற்கு ஒருமாத காலம் தேவைப்படும் என்று அந்த குழுவின் செயலாளர் லால் விஜேயநாயக்க கூறியுள்ளார் எவ்வாறாயின் பல்வேறு நிறுவனங்களின் கோரிக்கைகளுக்கு அமைவாக மேலும் சில நாட்கள் கருத்துக்களை உள்வாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக லால் விஜேயநாயக்க மேலும் கூறியுள்ளார்

ஆலோசனை பெற்றுக்கொள்ளும் ஆணைக்குழுவின் காலக்கெடு முடிவடையும் நிலைக்கு வந்திருக்கும் நிலையில் ஒருசில முஸ்லிம் அமைப்புகள் தமது யோசனைகளை முன்வைத்திருக்கின்றன. ஆனால் முஸ்லிம் அரசியல் கட்சிகளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸோ, அகில இலங்கை மக்கள் காங்கிரஸோ ஏனைய அரசியல் தரப்புகளோ இதுவரையில் மௌனம் கலையாமலேயே இயங்கிக் கொண்டிருக்கின்றன என குற்றசாட்டு முன்வைக்கப்படுகிறது

எஞ்சிஇருக்கும்  குறுகிய காலத்துக்குள் இக்கட்சிகள் துரிதமாகச் செயற்பட வேண்டியதன் அவசியத்தை அக்கட்சிகளின் தலைமைகள் உணர்ந்து செயற்படுவார்களா என்ற எதிர்பார்ப்புடன் முஸ்லிம் சமூகம் காத்துக் கொண்டிருப்பதாக முஸ்லிம் சமூக ,அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்

Written by lankamuslim

ஏப்ரல் 2, 2016 இல் 11:32 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஒரு பதில்

Subscribe to comments with RSS.

  1. தமக்கு கிடைந்துள்ள இலாபங்களை .வரப்பிரசாதங்களை பங்கிடுவதில் அடிபட்டுகொண்டுள்ளன !!!!!

    Imran -MC

    ஏப்ரல் 3, 2016 at 6:17 பிப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: