Lankamuslim.org

One World One Ummah

புலிகள் எப்போது தலைதூக்குவர் என்ற கனவில் ராஜபக்ஸ குடும்பம் : சுஜீவ

with one comment

mahinda_team_001விடுதலைப் புலிகள் எப்போது மீண்டும் தலைதூக்குவார்கள் என்ற எதிர்பாரப்பிலேயே ராஜபக்ச குடும்பம் வாழ்வதாக சர்வதேச முதலீட்டு அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனை அவர் கூறியுள்ளார்

தமிழீழ  விடுதலைப் புலிகள் மீண்டும் தலைதூக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு காரணமாக, அதற்கு ராஜபக்ச குடும்பம் உதவுகிறதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் இதன்போது அமைச்சர் குறிப்பிட்டுள்ளார் .

தமிழீழ விடுதலைப் புலிகளை வைத்தே நாமல் ராஜபக்சவும் அவரது குடும்பத்தினராகிய ராஜபக்சக்களும் அரசியல் செய்து வருவதாக தெரிவித்த அமைச்சர் சுஜீவ சேனசிங்க, விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் தலைதூக்கும் என்ற கனவில் அவர்கள் வாழ்வதாகவும் குறிப்பிட்டுள்ளார் ..

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் தலைதூக்க இடமில்லை என்பதில் ஜனாதிபதியும் பாதுகாப்பு செயலாளரும் உறுதியாக உள்ளனர் என்றும் இதன்போது அமைச்சர் சுஜீவ சேனசிங்க  மேலும் கூறியுள்ளார்

Written by lankamuslim

மார்ச் 31, 2016 இல் 11:58 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஒரு பதில்

Subscribe to comments with RSS.

  1. தாக்குதல் நடத்தும் நோக்கில் வெடிபொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக வடக்கைச் சேர்ந்த இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக திவயின செய்தி வெளியிட்டு உள்ளது.

    குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டுள்ள மீன்கள் சமைப்பதற்காக அன்றி வெறுமனே வைத்திருக்க, குளிர்சாதனப் பெட்டியிலிருந்து எடுக்கப்படுவதில்லை என அந்த இராணுவ அதிகாரிகள் கூறி உள்ளார்களாம்.

    இதேபோன்றே, சாவகச்சேரியிலிருந்து மீட்கப்பட்ட தற்கொலை அங்கி மற்றும் வெடிபொருட்கள் தாக்குதல் நோக்கிலானது என தெரிவித்துள்ளனர்.

    வடக்கில் அல்லது தெற்கில் பாரிய தாக்குதல் நடத்தும் நோக்கிலேயே நிச்சயம் இந்த வெடிபொருட்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

    பெயர் குறிப்பிட விரும்பாத வடக்கு இராணுவ உயர் அதிகாரிகள் இவ்வாறு கூறியுள்ளனர் என திவயின தகவல் வெளியிட்டுள்ளது.

    சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைதானவர் புனர்வாழ்வு அளிக்கப்படாத தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி எனக் கூறும் திவயின, இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினரின் விசாரணைக்கு மேலதிமாக இராணுவத்தினர் தனியான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

    இதேவேளை, வெடிபொருட்கள் மீட்கப்பட்ட சம்பவம் குறித்து பீதியடைய வேண்டியதில்லை எனவும் யுத்த காலத்தில் மறைத்து வைக்கப்பட்டுள்ள ஆயுதங்கள் வெடிபொருட்கள் இவ்வாறு மீட்கப்படுவது வழமையான நிலைமை எனவும் பாதுகாப்புச் செலயாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

    A.Azeez

    மார்ச் 31, 2016 at 9:03 பிப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: