Lankamuslim.org

One World One Ummah

நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தல்களும் இல்லை

leave a comment »

ministry_of_defenceநாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தல்களும் இல்லை எனவும்,அரசாங்கம் என்ற ரீதியில் நாட்டின் பாதுகாப்பு குறித்து தற்போதய அரசாங்கத்தில் அனைவரும் ஒன்றிணைந்து சேவையாற்றி வருவதாகவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும், பொறியியலாளருமான கருணாசேன ஹெட்டியாராய்ச்சி தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அமைச்சின் செயலாளர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், வடக்கிலுள்ள இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை காணி உரிமையாளர்களிடம் விடுவிப்பதானது தேசிய பாதுகாப்புக்கு எவ்விதத்திலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தப் போவதில்லை.

ஏற்கனவே இராணுவத்தின் வசமிருந்த 3,700 ஏக்கர் காணிகள் காணிகள் உரிமையாளர்களிடம் விடுவிக்கப்பட்டுள்ளது.

மேலும், காணிகள் சிலவற்றை உரிமையாளர்களிடம் கையளிக்க முடியாத நிலை காணப்படுவதாக குறிப்பிட்ட அவர், பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு முக்கிய கேந்திர நிலையங்களைத்
தொடர்ந்தும் பாதுகாக்க வேண்டிய கடப்பாடு தமக்கு இருப்பதாகவும்தெரிவித்தள்ளார்.

அத்துடன் காணிகளின் உரிமையாளர்களுக்கு உயரிய சலுகைகளையும் நஷ்ட ஈடுகளையும் வழங்கத் தாம் தயார் நிலையில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அண்மையில் நாட்டின் பல பாகங்களிலும் பதிவு செய்யப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த செயலாளர், இச்சம்பவங்களுக்கும் தேசிய பாதுகாப்புக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லை என்பதுடன், இவற்றினால் தேசிய பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தல்களும் ஏற்படாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் அச்சுறுத்தல் தொடர்பில் கருத்துக்களை, வெளியிட்ட அவர், அதுகுறித்து தாம் அவதானத்துடன் இருப்பதாகவும் இதன்பொருட்டு
தாம் உதவிகளுக்காகவோ ஆலோசனைகளுக்காகவோ இதுவரை எந்தவொரு நாட்டையும் நாடவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Written by lankamuslim

மார்ச் 31, 2016 இல் 10:29 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: