Lankamuslim.org

One World One Ummah

கோட்டாவின் எச்சரிக்கையும் ,கைதானவரின் காரணமும்

with one comment

gotaசாவகச்சேரியில்  இருந்து மீட்கப்பட்ட வெடிபொருட்கள் தொடர்பில் விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட போதிலும் இராணுவத்தினரிடம் சரணடையாத பலர் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.எனவே, இவ்வாறானவர்கள், நாட்டிற்கு பாரதூரமான அச்சுறுத்தலாக மாறக்கூடும்”  என கோத்தபாய ராஜபக்ச எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதேவேளை வட பகுதியில் எவ்வாறான அவசர நிலையையும் சமாளிக்கும் வகையில் இராணுவத்தினர் தயார் நிலையில் இருப்பதாக, யாழ். படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

யாழ். சாவகச்சேரி பகுதியிலிருந்து மீட்கப்பட்ட வெடிபொருட்கள் தொடர்பில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறியுள்ளார். இந்நிலையில், முழுமையான விசாரணைகளின் பின்னரே, கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் நோக்கங்கள் குறித்து அறிந்து கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, எந்தவொரு அவசர நிலையையும் எதிர்கொள்ளும் வகையில், இராணுவத்தினர் மூலோபாய ரீதியாக தயார் நிலையில் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சாவகச்சேரி பகுதியில் இருந்து மீட்கப்பட்ட தற்கொலை அங்கிகள்

சாவகச்சேரி பகுதியில் இருந்து மீட்கப்பட்ட தற்கொலை அங்கிகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் தொடர்பிலான விசாரணைகள் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பதில் பொலிஸ் மா அதிபர் எஸ்.எம்.விக்ரமசிங்கவினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

சாவகச்சேரி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த வெடிபொருட்கள் நேற்று அதிகாலை கைப்பற்றப்பட்டன.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த வீட்டின் உரிமையாளர் கிளிநொச்சி – அக்கராயன்குளம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதன்படி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கண்காணிப்பின் கீழ் பயங்கரவாத புலானய்வுப் பிரிவினரால் குறித்த விடயம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணையில் சில விடயங்கள் வெளியாகியுள்ளது.

அதன்படி, குறிப்பிட்ட அனைத்து வெடிபொருட்களும் மீன் கொண்டு செல்லும் லொறி ஒன்றிலேயே அந்த வீட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

கைதான நபர் வீட்டின் உரிமையாளரும், லாரியின் சாரதியுமாவார். குறிப்பிட்ட தற்கொலை அங்கி, மற்றும் வெடிபொருட்கள்  முல்லைத்தீவில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது.

மீன்பிடி நடவடிக்கைகளுக்கு அவற்றை பயன்படுத்த முடியும் என்பதால் தான் அவற்றை கொண்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

எட்வட் எனப்படும் குறிப்பிட்ட நபர் புனருத்தாரணம் வழங்கப்படாத முன்னாள் விடுதலை புலி உறுப்பினர் என தெரிவிக்கப்டுள்ளது.

Written by lankamuslim

மார்ச் 31, 2016 இல் 10:50 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஒரு பதில்

Subscribe to comments with RSS.

  1. தாக்குதல் நடத்தும் நோக்கில் வெடிபொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக வடக்கைச் சேர்ந்த இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக திவயின செய்தி வெளியிட்டு உள்ளது.

    குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டுள்ள மீன்கள் சமைப்பதற்காக அன்றி வெறுமனே வைத்திருக்க, குளிர்சாதனப் பெட்டியிலிருந்து எடுக்கப்படுவதில்லை என அந்த இராணுவ அதிகாரிகள் கூறி உள்ளார்களாம்.

    இதேபோன்றே, சாவகச்சேரியிலிருந்து மீட்கப்பட்ட தற்கொலை அங்கி மற்றும் வெடிபொருட்கள் தாக்குதல் நோக்கிலானது என தெரிவித்துள்ளனர்.

    வடக்கில் அல்லது தெற்கில் பாரிய தாக்குதல் நடத்தும் நோக்கிலேயே நிச்சயம் இந்த வெடிபொருட்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

    பெயர் குறிப்பிட விரும்பாத வடக்கு இராணுவ உயர் அதிகாரிகள் இவ்வாறு கூறியுள்ளனர் என திவயின தகவல் வெளியிட்டுள்ளது.

    சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைதானவர் புனர்வாழ்வு அளிக்கப்படாத தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி எனக் கூறும் திவயின, இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினரின் விசாரணைக்கு மேலதிமாக இராணுவத்தினர் தனியான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

    இதேவேளை, வெடிபொருட்கள் மீட்கப்பட்ட சம்பவம் குறித்து பீதியடைய வேண்டியதில்லை எனவும் யுத்த காலத்தில் மறைத்து வைக்கப்பட்டுள்ள ஆயுதங்கள் வெடிபொருட்கள் இவ்வாறு மீட்கப்படுவது வழமையான நிலைமை எனவும் பாதுகாப்புச் செலயாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

    A.Azeez

    மார்ச் 31, 2016 at 9:04 பிப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: