Lankamuslim.org

One World One Ummah

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தில் ஊடகங்கள், பற்றி ஒபாமா

leave a comment »

Obama-Strategy-Syriaஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல்பிரச்சாரத்தில் தற்போது காணப்படும் நிலைக்கு ஊடகவியலாளர்கள் வேட்பாளர்களிடம் கடுமையான கேள்விகளை கேட்காததே காரணம் என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஓபாமா தெரிவித்துள்ளார்.

பத்திரிகையாளர்களிற்கு விருது வழங்கும் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ள அவர் 2016 ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தில் காணப்படும் ஆபாச உரைகள், தேர்தல் கூட்டங்களில் வன்முறைகள் இடம்பெறுவது மற்றும் யதார்த்தத்திற்கு மாறான வாக்குறுதிகள் போன்றவற்றிற்கு பத்திரிகைகள் அதிக முக்கியத்துவம் வழங்குவது குறித்து ஏமாற்றத்தையும் வெளியிட்டுள்ளார்.

குடியரசுக்கட்சியின் சர்ச்சைக்குரிய வேட்பாளர் டொனால்ட் டிரம்பபை அவர் மறைமுகமாக சாடியுள்ளார். நான் உலக நாடுகளிற்கு செல்லும்போதோ அல்லது உலக தலைவர்களை சந்திக்கும்போதோ என்னிடம் அவர்கள் கேட்கின்ற முதல் கேள்வி உங்கள் நாட்டில் என்ன நடக்கின்றது என்பது தான்.

அரசியல் கோமாளித் தனங்களும், பைத்தியக்காரத் தனங்களும் அமெரிக்காவில் இடம்பெறாது என்ற நம்பிக்கை காரணமாகவே அவர்கள் இந்த கேள்வியை கேட்கின்றனர்.

எங்கள் தேர்தல் பிரச்சாரங்களில் உண்மை எதுவோ அது தெரிவிக்கப்படாத பட்சத்தில் எங்கள் எதிர்கால தலைமுறையினரின் சார்பில் சிறந்த தீர்மானங்களை எடுக்கமுடியாது.

2008இல் நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட வேளை காணப்பட்ட ஊடக சூழல் தற்போது இல்லை. அவ்வேளை நீங்கள் சொல்வது ஒன்றாகவும் செய்வது வேறொன்றாகவும் இருந்தால் அதற்கு நீங்கள் பெரும் விலையை செலுத்தவேண்டியிருந்தது. தற்போதைய ஸ்மார்ட்போன் உலகம் மற்றும், பாரிய நிதிநெருக்கடிகளிற்கு அப்பாலும் ஊடகங்கள் விடயங்கள் குறித்து ஆழமாக ஆராயவேண்டியுள்ளது, என அவர் தெரிவித்துள்ளார்.

Written by lankamuslim

மார்ச் 29, 2016 இல் 3:39 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: