Lankamuslim.org

One World One Ummah

பெரும்பான்மை சிங்களவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாம் !!

leave a comment »

kunமஹிந்த ராஜபக்ஸவுடன்  ஒன்றிணைந்து செயற்பட ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன முன்வந்தால் மாத்திரமே நாட்டுக்கு விடிவு காலம் பிறக்குமென்று எல்லே குணவங்ச தேரர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்றைய சிங்கள வார இதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள நேர்காணலில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இலங்கை தற்போது அரசியல், பொருளாதார, சர்வதேச நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. இவற்றில் இருந்து விடுபட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் இணைந்து செயற்பட ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன முன்வரவேண்டும். இவர்கள் இருவரையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் பிக்குமார் ஈடுபட வேண்டும்.

தற்போதுள்ள நிலையில் இலங்கையில் பெரும்பான்மை சிங்களவரின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. சிங்களவர்கள் பெரும் அச்சத்துடன் இருக்கின்றார்கள்.

சிறுபான்மை மக்கள் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொண்ட திருப்தி மற்றும் சந்தோசத்துடன் தொடர்ந்தும் எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளார்கள்.

அத்துடன் அரசாங்கத்தின் மீதான பொதுமக்களின் நம்பிக்கை சிதைந்து, தற்போது நம்பிக்கையீனம் அதிகரித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன உண்மையான பௌத்தர். அவர் ஒருபோதும் சிங்கள பௌத்தர்களுக்கு துரோகம் இழைக்க மாட்டார். எனினும் அவரைச் சுற்றிலும் இருக்கும் அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் சிங்கள மக்களின் எதிர்பார்ப்புகளை சிதைத்து, சிறுபான்மை மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் மனோநிலை கொண்டவர்கள்.

மைத்திரியை வெல்ல வைத்ததன் பின்னர் தான் எடுத்த முடிவு பிழையானது என்பதை மறைந்த சோபித தேரரும் உணர்ந்திருந்தார். அதன் காரணமாக ஒன்றிணைந்து செயற்படுவதற்கான அழைப்பை அவர் எமக்கு விடுத்திருந்தார் என்றும் எல்லே குணவங்ச தேரர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

Written by lankamuslim

மார்ச் 27, 2016 இல் 7:52 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: