Lankamuslim.org

One World One Ummah

ஐ.எஸ் அமைப்பின் செயல்பாடுகள் தொடர்ந்தும் கண்காணிக்கப் படுகிறது : இராணுவப் பேச்சாளர்

with one comment

arm.jpgநியூஸ்பெஸ்: ஐ.எஸ் தீவிரவாதிகளின் செயற்பாடுகள் தொடர்பில் புலனாய்வுப் பிரிவுகள் மற்றும் பாதுகாப்புப் படையினர் 24 மணித்தியாலங்களும் கண்காணித்து வருவதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்துள்ளார். பிரஸெல்ஸ் விமான நிலையம் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலின் பின்னர் ஏற்பட்டுள்ள சூழ்நிலை தொடர்பில் நியூஸ்பெஸ்ட் வினவியதை அடுத்து இராணுவப் பேச்சாளர் இதனைக் குறிப்பிட்டார்.

ஐ.எஸ். தீவிரவாதிகளால் இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லையென அவர் சுட்டிக்காட்டினார்.பிரஸெல்ஸ் விமான நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து, கட்டுநாயக்க விமான நிலையத்தின் பாதுகாப்பு ஏற்கனவே பலப்படுத்தப்பட்டுள்ளது.-நியூஸ்பெஸ்

Written by lankamuslim

மார்ச் 26, 2016 இல் 6:56 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஒரு பதில்

Subscribe to comments with RSS.

  1. இஸ்லாமிய ஜிகாத் குழு இலங்கையில் செயற்படவில்லை என்று இலங்கையை மையமாகக் கொண்ட சர்வதேச இனத்துவ கற்கை நிலையம் (International Centre for Ethnic Studies) தெரிவித்துள்ளது.

    உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் அண்மைக்காலமாக மேற்கொள்ளப்பட்டு வந்த முறைப்பாடுகளின் பின்னரே இதற்கான ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

    கிழக்கு மாகாணத்தில் ஜிகாத் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    2012ஆம் ஆண்டில் புள்ளிவிபரப்படி நாட்டின் மொத்த சனத்தொகையில் 9.67 வீதமானோர் முஸ்லிம்களாவர். அதேபோன்று கிழக்கின் சனத்தொகையில் 37 வீதமானோர் முஸ்லிம்களாவர்.

    இந்தநிலையில் இலங்கையில் தாப்லிகி ஜமாத், தாவீத் மற்றும் சுபி ஆகிய குழுக்கள் 1950ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகின்றன.

    எனினும் இவை உள்ளுர் பள்ளிவாசல்களின் கட்டுப்பாட்டிலேயே இயங்கி வருகின்றன. இதிலும் சுபி அமைப்புக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Aslam Ali

    மார்ச் 26, 2016 at 11:48 முப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: