Lankamuslim.org

One World One Ummah

மிருகத்தனமான மனிதர்கள் வாழும் ஒரு சமூகத்தில் பாடசாலைகளின் வகிபாகம்

leave a comment »

mi 33பிள்ளைகளினதும் , தாய்மார்களினதும் உயிர்களுக்கு விலைபேசும் ஒரு காலகட்டத்தில் அப்பாவி மிருகங்களின் தோல்களை கொடூரமாக உயிருடன் அகற்றும் மிருகத்தனமான மனிதர்கள் வாழும் ஒரு சமூகத்தில் பண்பாடுள்ள எதிர்கால சந்ததியினரை உருவாக்குவதற்கு பாடசாலைகள் முன்னின்று செயற்பட வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கேகாலை புனித ஜோசப் மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் நேற்று முற்பகல் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

பௌதீக வளங்களில் நாடு எவ்வளவுதான் அபிவிருத்தி அடைந்த போதும் அங்கு வாழும் மனிதர்கள் பண்பாடற்றவர்களாக இருக்குமிடத்து அந்த அபிவிருத்திகளின் பயனை அடைய முடியாதென ஜனாதிபதி குறிப்பிட்டார்.

நாட்டின் இலவசக் கல்வியை பலப்படுத்துவதற்கு அரசு நடைமுறைப்படுத்தியுள்ள வேலைத்திட்டத்தின் கீழ் இன்று மாணவர்கள் பரீட்சைகளில் அதி சிறந்த பெறுபேறுகளை பெறுகின்றனர் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி,

தொழிற்கல்வி மற்றும் மூன்றாம் நிலை கல்வி ஆகிய துறைகளின் அபிவிருத்திக்காக தேசிய மட்டத்தில் பல கல்வி நிறுவனங்கள் இவ்வாண்டில் ஆரம்பிக்கப்படுமெனவும் தெரிவித்தார்.

இன்று எமது தேசிய பொருளாதாரத்திற்கு அதிகபட்ச பங்களிப்பினையும் ஆகக்கூடிய அந்நிய செலாவணியையும் எமது நாட்டு பெண்களே ஈட்டித் தருவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிகழ்வில் அமைச்சர்களான கபீர் ஹசிம், ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, இராஜாங்க அமைச்சர் சம்பிக்க பிரேமதாச, சப்பிரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் பாடசாலையின் அதிபர், ஆசிரியர் குழாம், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.-TC

Written by lankamuslim

மார்ச் 25, 2016 இல் 5:37 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: