Lankamuslim.org

One World One Ummah

நாட்டில் மத­ர­ஸாக்­க­ளூ­டா­கவே இஸ்­லா­மிய அடிப்படை­வாதம் பரப்­பப்­ப­டு­கின்­றது

leave a comment »

boஇலங்­கையில் தற்­போது மத­ர­ஸாக்­க­ளூ­டா­கவே இஸ்­லா­மிய அடிப்படை­வாதம் பரப்­பப்­ப­டு­கின்­றது. இவற்றின் ஊடா­கவே ஐ.எஸ்.தீவி­ர­வாத குழுக்கள் போன்ற வேறு அமைப்­புக்கள் உருவாகலாம். என பொது­பல சேனா அமைப்பின் செய­லாளர் கல­கொட அத்தே ஞனா­சார தேரர் தெரி­வித்தார்.

கிரு­லப்­பனை பொது­பல சேனா அலு­வ­ல­கத்தில் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்திப்பின்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

பர்வீஷ் முசாரப் பாகிஸ்தான் பிர­தா­ம­ராக பத­வி­யேற்ற பின்னர் அந்­நாட்டில் இஸ்லாமிய அடிப்­ப­டை­வாதம் பர­வு­வதை தடுப்­ப­தற்கு மதா­ர­சாக்­களை மூடினார். இந்நி­லையில் ஐ.எஸ்.போன்ற அமைப்­புக்கள் இலங்­கையில் தோன்றி எமக்கு அச்­சு­றுத்தல் விடுக்­கலாம். ஆனால் பிர­பா­க­ர­னுக்கு அஞ்­சாத எமக்கு இவர்கள் ஒரு பொருட்­டல்ல எனவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

கடந்த அர­சாங்­கத்தின் காலத்தில் எமது நாட்டில் மறை­மு­க­மாக மத­ர­சாக்­க­ளி­னூ­டாக இஸ்­லா­மிய அடிப்­படை வாதங்கள் வெகு­வாக பரவத் தொடங்­கின. அந்­நே­ரத்தில் நாம் ஒரு பௌத்த அமைப்­பாக கள­மி­றங்­கியே சிங்­கள பௌத்­தர்­களை பாது­காக்க முற்­பட்டோம்.

அதன் போது சில அர­சியல் வாதி­களால் நாம் பாது­காப்பு அமைச்சின் முன்னாள் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­ப­க்ஷவின் கீழ் இயங்­கு­கின்ற இன­வாத குழு­வென அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்டோம். ஆனால் எம்மை இன­வா­தி­க­ளாக காண்­ப­வர்­க­ளுக்கு இஸ்­லா­மிய அடிப்டை வாதிகள் தலை­யெ­டுத்­தது தெரி­ய­வில்லை என்­பது வேடிக்­கை­யான விடயம்.

முஸ்லிம் மக்­களை கஷ்­டத்தில் தள்­ளி­விட நாங்கள் எண்­ண­வில்லை. எமது நாட்டில் உள்ள இஸ்­லா­மிய அடிப்­படை வாத குழுக்­களை தலை­தூக்க விட­வேண்டாம் என்றே நாம் அர­சாங்­கத்தை வலி­யு­றுத்­தினோம்.

இலங்­கையில் மட்­டு­மல்­லாது இந்­தி­யாவில் இடம் பெற்ற பல ரயில் குண்­டு­வெ­டிப்­புக்­களின் பின்­ன­ணி­யிலும் இஸ்­லா­மிய அடிப்­படை வாதி­களே உள்­ளனர். இவர்­களின் அதி­க­மா­ன­வர்கள் மத­ர­சாக்­க­ளூ­டா­கவே உரு­வா­கின்­றனர்.அதனை நாம் கூறிய போது நகைத்­த­வர்க்ள இந்­திய பொலிஸார் உறு­திப்­ப­டுத்­திய பின்னர் வாய­டைத்து போயினர்.

ஐ.எஸ்.குழுக்கள் மத­ரசா கற்கை நெறிக்கு அமை­வாக நான்கு படி­மு­றை­களின் கீழ் செயற்­ப­டு­கின்­றனர். அதன்­படி முதலில் ஒரு பிர­தே­சத்தை கைப்­பற்றி அப்­ப­கு­தி­யி­லுள்ள அனை­வ­ரையும் இஸ்­லாமை தழு­வு­மாறு வற்­பு­றுத்­து­கின்­றனர். அதனை ஏற்­காத பட்­சத்தில் கைப்­பற்­றப்­பட்ட பிர­தே­சத்தில் உள்­ள­வர்கள் தீவி­ர­வா­தி­க­ளுக்கு கப்பம் செலுத்த வேண்டும் என்பர்.

இந்­நி­பந்­த­னை­க­ளுக்கு அடிப்­ப­ணி­யா­த­வர்­களின் உயிரை பறிக்­கின்­றனர். ஆனால் இவர்கள் தம்மை புனித குர் ஆன் இனால் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட தூய்­மை­யான இஸ்­லா­மி­யர்­க­ளாக அடை­யா­ளப்­ப­டுத்­திக்­கொள்­கின்­றனர்.

இவ்­வா­றான அடிப்­படை வாத குழுக்கள் மத­ர­சாக்­க­ளூ­டாக உரு­வா­வதை தடுப்­ப­தற்­காக பாகிஸ்தான் முன்னாள் பிர­தமர் பர்வீஷ் முசாரப் தனது ஆட்­சிக்­ங­கா­லத்தில் அந்­நாட்டில் 2000 ஆயிரம் மத­ர­சாக்­களை மூடினார். ஆனால் அதற்கு மாறாக இலங்­கையில் மத­ர­சாக்கள் அதி­க­ரித்துச் செல்­கின்­றன. தற்­போது எமது நாட்டில் 3000 ற்கும் அதி­க­மான மத­ர­சாக்கள் உள்­ளன.

அதேபோல் மாவ­த­கம, பர­க­ஹ­தெ­னிய, அக்­கு­றணை , நீர்­கொ­ழும்பு உள்­ளிட்ட பகு­தி­களில் உள்ள இஸ்­லா­மி­யர்கள் சிலர் எந்த நாட்டை சேர்ந்­த­வர்கள் என்றே தெரி­ய­வில்லை. இவ்­வா­றான நிலைப்­பாட்­டிலும் பொறுமை காக்கும் சிங்­கள மக்கள் குறித்து பெரு­மிதம் அடை­கின்றோம்.

இந்­நி­லையில் ஐ.எஸ்.குழு­வினர் அவர்­களை தாக்கி பேசு­பர்­க­ளுக்கு எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளனர். கடந்த காலங்­களில் நாமும் அவர்­களை அதிகம் தாக்கி பேசி­யுள்ளோம்.எனவே எம்மீதும் தாக்குதல்கள் இடம் பெறலாம். அவ்வாறு இடம்பெற்றாலும் ஐ.எஸ்.தீவிராத அமைப்பினரால் தாக்கபடுவதை விட எமது நாட்டில் உருவாகும் இஸ்லாமிய அடிப்படை வாத குழுக்களினால் தாக்கப்படும் சாத்தியமே அதிகம் உள்ளது.

எவ்வாறாயினும் பிரபாகரனை வெற்றிகொண்ட எமது நாட்டு இராணுவத்தினர் இருக்கையில் நாம் அஞ்சப்போவதில்லை. அதனால் இவர்களின் அச்சுறுத்தல்களை ஒரு பொருட்டாக கொள்ளவில்லை என்றார்.-TC

Written by lankamuslim

மார்ச் 25, 2016 இல் 10:02 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: