Lankamuslim.org

One World One Ummah

ஹைட் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் கட்சியை விட்டு நீக்கப்படுவர்: சந்திரிக்கா

leave a comment »

Mahindaஹைட் மைதானக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் கட்சியை விட்டு நீக்கப்படுவர் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். கூட்டு எதிர்க்கட்சியினால் கடந்த 17ம் திகதி கொழும்பு ஹைட் மைதானத்தில் நடத்தப்பட்ட கூட்டத்தில் பங்கேற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் கட்சியை விட்டு நீக்கப்படுவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கம்பஹாவில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.ஹைட் மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு 12000 பேர் பங்கேற்றிருந்தனர் எனவும் அவர்களுக்கு மதுபானம் மற்றும் உணவு வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

யாரும் கூட்டங்களை நடத்த முடியும் என்ற போதிலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைவர்கள் அவற்றில் பங்கேற்றால் அதற்கான விளக்கம் அளிக்கப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மக்கள் சொத்துக்களை திருடியவர்கள் இணைந்து கொண்டு கூட்டு எதிர்க்கட்சியை உருவாக்கி உள்ளதாகத் தெரிவித்துள்ளார். கூட்டு எதிர்க்கட்சியில் சில கொலையாளிகளும் உள்ளடங்குவதாகத் தெரிவித்துள்ளார்.

அதேவேளை கூட்டு எதிர்க்கட்சியின் கூட்டத்தில் பங்கேற்ற காரணத்திற்காக எம்மை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட்ட நீக்கிவிட முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். எம்மை கட்சியை விட்டு நீக்கினால் நாம் புதிய கட்சியொன்றை அமைத்துக் கொள்வோம் என சிலர் அஞ்சுகின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.-TC

Written by lankamuslim

மார்ச் 21, 2016 இல் 8:28 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: