பாரம்பரிய உரிமைகளை பாதுகாக்குமாறு பிரதமர் ஆலோசனை
பாரம்பரிய உரிமைகளை பாதுகாக்க நாடு முழுவதும் வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, மாவட்ட செயலாளர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
பாரம்பரிய நாட்டு புற பாடல்கள், நாட்டு புற நடனங்கள், நாட்டு புற கதைகள், பழக்க வழக்கங்கள் தொடர்பான தகவல்களை திரட்டும் வேலைத்திட்டம் ஒன்றை செயற்படுத்த தீர்மானித்துள்ளதாக பிரதமர், மாவட்ட செயலாளர்களுக்கு அறிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்களுடனான மாதாந்த சந்திப்பில் பிரதமர் இதனை கூறியுள்ளார். பாரம்பரிய உரிமைகள் இல்லாதொழிந்து வருவதால், அவற்றை பாதுக்க வேண்டியது தேசிய கடமை எனவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Advertisements
மறுமொழியொன்றை இடுங்கள்