Lankamuslim.org

One World One Ummah

நாங்கள் ஏன் முல்லைத்தீவுக்கு சென்றோம் தெரியுமா ?

leave a comment »

bo3கடும்போக்கு  இனவாத அமைப்பான பொதுபலசேனாவின் பொதுச் செயலாளரும் சர்ச்சைக்குரிய பெளத்த தேரராக சித்தரிக்கப்படுபவருமாகிய கலகொட அத்தே ஞானசார தேரர், முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் பிரதேசத்திற்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

கொக்கிளாயில் அமைக்கப்படும் விகாரை மற்றும் முகத்துவாரப் பகுதியில் சிங்கள மக்களுக்காக முன்னெடுக்க முயற்சிக்கப்படும் வீட்டுத் திட்டம் தொடர்பிலேயே,  அவர் ஆராய்ந்துள்ளாராம் .

தென்பகுதியில் செயற்பட்டு வந்த சிங்கள – பெளத்த கடும் போக்கு இனவாத அமைப்பான பொதுபலசேனாவினர்,  வட பகுதியிலும் தமது செயற்பாடுகளை விஸ்தரித்துள்ளனர்.கடந்த திங்கட்கிழமை முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் பிரதேசத்துக்கு ஞானசார தேரர் தலைமையிலான குழுவினர் சென்றுள்ளனர்.கொக்கிளாய் தனியார் காணி ஒன்றில் அமைக்கப்பட்ட விகாரை தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் ஏற்கனவே இருந்து வருகின்றன.

குறித்த விகாரையை அகற்ற வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் பணித்திருந்தார். இந்தநிலையில், அந்த விகாரை தொடர்பில் ஞானசார தேரர் ஆராய்ந்துள்ளார்.

அதன் பின் முகத்துவாரம் பகுதிக்குச் சென்றுள்ளார். அங்கு 260 கிறிஸ்தவர்களும், 2 பெளத்தர்களும் வாழ்ந்து வருகின்றனர். அங்கு தனியார் காணி ஒன்றைச் சுவீகரித்து சிங்கள மக்களுக்கான வீட்டுத் திட்டம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதற்காக அந்தக் காணியை சுவீகரிப்பதற்கு 4 தடவை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாறானதொரு நிலையில் குறித்த பகுதியிலுள்ள சிங்கள மக்களுடனும் ஞானசார தேரர் கலந்துரையாடியுள்ளார்.

இந்தப் பயணம் தொடர்பில் ஞானசார தேரர் சிங்கள ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணலில், சிங்கள மக்கள் அரச அதிகாரிகளாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினாலும் தவறாக வழிநடத்தப்படுவதாகக் கிடைத்த தகவலுக்கமையவே, அதனை ஆராய்வதற்காக அங்கு சென்றோம் என தெரிவித்துள்ளார்.

அத்துடன், பாரம்பரியமாகக் குறித்த நிலங்களுக்கு உரிமையாளர்களான சிங்கள மக்களுக்கு அமைச்சர்களாலோ, அரச அதிகாரிகளாலோ இதுவரை எந்தவித உதவிகளும் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தல் தொடர்பான வழக்கில் சாட்சிகளுக்கு அச்சுறுத்தல் விடுத்தமை மற்றும் நீதிமன்றை அவமதிப்புச் செய்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களில் ஞானசார தேரர் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.-TW

Written by lankamuslim

மார்ச் 17, 2016 இல் 11:08 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: