Lankamuslim.org

One World One Ummah

சிந்தனை மாற்றீடுகளும் உள்முரண்பாடுகளும் – இஹ்வான்கள் ஒர் உதாரணமாக …..

with 6 comments

எஸ் .எம் .மஸாஹிம்

mind2

இஸ்லாமிய உலகில் வேகமான சிந்தனா ரீதியிலும் ,செயல்பாட்டு ரீதியிலும் மாற்றங்கள் இடம்பெற்று வருகின்றன. இவைகளில் பெரும்பாலானவை புதிய சிந்தனைகள் என்பதை விட ஒரு மாற்றீடான சிந்தனை மற்றும் செயல்பாடு எனக் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். குறிப்பாக அரபு வசந்தத்துடன் இந்த மாற்றீடான கருத்துக்கள் கூடிய   அவதானத்தை பெற்றுள்ளது , பெரும்பாலும் இவை அரசியல் மற்றும் சமூகம்   சார்ந்த இஸ்லாமிய கருத்தியல் மாற்றீடுகளாகவே முன்வைக்கப்பட்டிருந்தன.

அத்தகைய மாற்றீடான கருத்தியல்கள் கொண்டிருக்கும் நன்மை ,தீமை என்பதை விடவும்  முதலில் அவை சமூக வெளியில் ஏற்படுத்தும் , சாதகமான ,பாதகமான தாக்கங்கள் என்ற கோணத்தில் அவற்றை ஆராய்வது முக்கியமானதாகும். மாற்றீடான சிந்தனைகளை ஒரு சமூக வெளியில்   முன்வைக்கப்பட்டு அது தாக்கம் செலுத்தும் ஒரு கருத்தியலாக மாறும்போது ,அதற்கு ஆதரவும் ,எதிர்ப்பும் உருவாகின்றது அல்லது குறித்த ஒரு புதிய கருத்து தொடர்பில் ஏற்பும் , நிராகரிப்பும் சமூகத்தில் வெளிப்படுத்தப்படுகிறது. இந்த   ஏற்பு அல்லது நிராகரிப்பு என்ற சமூகவெளிப்படுதல், ஒன்றில் குறித்த   சமூகத்தில் இருக்கும் அனுகூலங்களை   ஊக்கப்படும் அல்லது   அதில் இருக்கும் பிரதிகூலங்களை ஊக்கப்படுத்தும். ஒரு கருத்தியல்  நன்மைகளை கொண்டிருந்தாலும் அது ஏற்படுத்தும் தாக்கம் காரணமாக ஒரு சமூகத்தில் இருக்கும் பிரதிகூலங்களை ஊக்கப்படுத்துமாக இருந்தால் குறித்த சமூகம் அதன்  சமூகத் தளத்தில் பிளவையும் பின்னடைவுகளையும் சந்திக்கும்   .   குறைந்த பட்சம் சமூகத்தின் இயக்கச்சக்தியான இருக்கும் துடிப்பான வாலிபர்களின் மத்தியில் இஸ்லாமிய களத்தில் நிரந்தர மந்தபோக்கை ஏற்படுத்தி விடவும் முடியும் , அப்படி நிகழ்ந்தால் அந்த மாற்றீடுகளை ஒரு இஸ்லாமிய சமூகத்தின் முன்னேற்றத்துக்கு துணைபுரிவதாக எப்படி ஏற்றுக் கொள்ளமுடியும் ?,

மாற்றீடான சிந்தனை கருத்தாடல்கள், விவாதங்கள்

ஒரு மாற்றீடான அல்லது புதிய ஒர் சிந்தனை ஒரு சமூக மட்டத்தில் முன்வைத்து அதை ஜனரஞ்சகப்படுத்துவதற்கு முன்னர் மாற்றீடான கருத்தியல் தொடர்பில் புத்திஜீவிகள் மத்தியில் உள்ளக கருத்தாடல்கள், விவாதங்கள் மேற்கொள்ளப்படல் வேண்டும் ,அவை குறித்த கருத்தியல்களின் சாதகமான ,பாதகமான தாக்கங்களை அளவீடு செய்யக் கூடியதாக இருக்க வேண்டும் இப்படிச் செய்யப்படும்போது குறித்த கருத்தியல் சமூக மட்டத்தில் , ஒரு ஜமாஅத் மட்டத்தில்   ,ஜமாஅத்துக்களின் மத்தியில் ஏற்படுத்தப்போகும் தாக்கம் தொடர்பில் ஒரு முறைசார் கணிப்பீட்டை அந்த கருத்துக்களின் முகவர்கள் பெற்றுக்கொள்ள முடியும் ,இதன் மூலம் எமது முஸ்லிம் சமூகத்திற்கு பொருத்தமான கருத்துக்களையும் ,முன்னேற்றகரமான கருத்துகளையும் ஊக்கிவிக்கவும் ,பொருத்த மற்ற கருத்துக்களை விலக்கி கொள்ளவும் முடியுமாக அமையும்,   அப்படி செய்யப்படாது போனால் மாற்றீடான அல்லது புதிய சிந்தனைக் கருக்கள் பாதகமான தாக்க விளைவுகளை வெளிப்படுத்தி வளர்ச்சி அடைவதை தடுக்கமுடியாது போய்விடும்.

முழுஅளவிலான கருத்து சுதந்திரம் ,சிந்தனா ரீதியான ,செயல்பாடு ரீதியான மாற்றீடுகள் இன்றைய முஸ்லிம் உம்மாவுக்கு மிகவும் அவசியமானது என்பதை மறுக்க முடியாது. ஆனால் ஒரு சமூகம் உள்வாங்கும் கருத்துக்கள் ஏற்படுத்தப்போகும் தாக்கவீச்சின் (Range of affect ) மீதான முறையான கணிப்பீடு நியாயாதிக்கம் கொண்டதாக ஏற்றுக்கொள்ளப்படல் வேண்டும் , குறிப்பாக ஒரு இயக்கம் புதிய கருத்துக்களை உள்வாங்க முயற்சிக்கும்போதும் அதன் தாக்க வீச்சின் மீதான முறையான அளவீடு அவசியப்படுகிறது , நாம் ஒரு ‘’ஜனநாயக’’ இயக்கம் பல்வேறு கருத்துக்களை எப்போதும் வரவேற்கிறோம் என கூறுவதால் அல்லது நாங்கள் எங்கள் கருத்துகளுக்கு மட்டுமே பொறுப்புக் கூட முடியும் அதை மற்றவர்கள் பல்வேறுவிதமாக புரிந்துகொள்வதற்கு எல்லாம் எம்மால் பொறுப்பாக முடியாது என கூறுவதன் மூலமும் அது ஏற்படுத்தும் பாதகமான விளைவுகளில் இருந்து சமூகத்தை பாதுகாக்க முடியாது

இஹ்வான்-உள்ளகமுரண்பாடுகள்

மாற்றங்கள் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் பரவலாக இடம்பெற்றாலும் அவற்றை வரையறைகள் மூலமாக நெறிப்படுத்துவது முழுமையாக  சாத்தியப்பாடு அற்றதாக இருந்தாலும் ஒரு பாரிய இஸ்லாமிய இயக்கமாக கருதப்படும் இஹ்வான்கள் மத்தியிலும் இடம்பெற்று வருகிறது , குறிப்பாக எகிப்து இஹ்வான்கள் மத்தியில் உள்ளகமுரண்பாடுகள் மிக ஆழமாக சென்றுள்ளதை கடந்த பல மாதங்களாக இரு குழுக்களாக பிரிந்து அறிக்கை ,மற்றும் தகவல் வெளியிடுவதில் இருந்து கண்டுகொள்ள முடியுமாக உள்ளது , புதிய இந்த உள்முரண்பாடுகள் கடந்த 2013 ஆம் ஆண்டு தொடக்கம் ஏற்பட்டு வருகிறது . புதிய , மாற்றீடான கருத்துக்கள் , அதை தொடர்ந்து கருத்துவேறுபாடுகள், அதன்பின்னர் கருத்தியல் ,செயல்பாட்டியல் முரண்பாடுகள் அதன்பின்னர் பிளவுகள் என்ற பாதகமான தாக்கங்கள் நோக்கி இஹ்வான்கள் இழுத்துச்செல்லப் படுவதை அவதானிக்க முடிகிறது.

எகிப்து இஹ்வான்களின் உள்முரண்பாடு தொடர்பில் பல கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன , தற்போதைய முரண்பாடுகள் சிந்தனாரீதியானது எனவும் இன்னும் சிலர் இல்லை இது   நிர்வாக செயல்பாடுகள் சார்ந்தது எனவும் மற்றும்சிலர் இது எகிப்தின் மக்கள் எழுச்சி தோல்வியை சந்தித்தன் பின்னர் மக்கள் எழுச்சியை வழிநடாத்திய புதிய தலைமுறைக்கும் , கடந்த 20 ஆண்டுகளாக நிர்வாக   இருக்கும் தலைமுறைக்கும் இடையில் தோன்றியுள்ள சிந்தனா , மற்றும் செயல்பாட்டு கருத்தியல் சார்த்த முரண்பாடுகள் எனவும் வேறுபட்ட கருத்துக்களை கூறினாலும் அனைவரும் குறித்த முரண்பாடுகள் இஹ்வான்களை குழுக்களாக பிரிந்து தமக்குள் கடுமையான கருத்து மோதலில் ஈடுபடும் மோசமான நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது. பிளவையும் இரண்டு தலைமைகளையும் உருவாக்கி விட்டுள்ளது என்று குறிப்பிடுவதில் உடன் படுகிறார்கள் . .

கலீல் அனானி, அஹமட் தாஹா , அப்துல்லாஹ் அல் கரியூனி

இது தொடர்பில்   அமெரிக்க பல்கலை கழகம் ஒன்றின் அரசியல் துறை பேராசிரியர் கலீல் அனானி குறிப்பிடும்போது இஹ்வானுள் முஸ்லிம் அமைப்பின் அதன் நிர்வாகத்தில் கடந்த 20 ஆண்டுகளாக அதிகாரம் செலுத்தும் அதன் பழைய பாதுகாவலர்களுக்கும் , நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் புரட்சியை ஏற்படுத்திய புரட்சியின் தலைமுறைக்கும் இடையில் ஆழமான பிரச்சினை ஏற்பட்டுள்ளது . புரட்சி தலைமுறை அதனிடத்தில் முற்றிலும் வேறுபட்ட கனவை கொண்டுள்ளது என குறிப்பிடுகிறார் .

இன்னும் எகிப்திய எழுத்தாளரும் ஆய்வாளர்களில் ஒருவருமான அஹமட் தாஹா இந்த முரண்பாட்டை கூர்மையான மற்றும் ஒரு பெரிய நெருக்கடி, என   குறிப்பிடுவதுடன் இந்த முரண்பாட்டை இளைஞர் தலைமை மற்றும் வரலாற்று தலைமை ஆகியவற்றுக்கு இடையிலான நெருக்கடியாக அவர் பார்ப்பதுடன் இஹ்வான்களின்   வரலாற்றில் நிகழ்த்த மிகப் பெரிய நெருக்கடியாக இது இருக்கலாம் என குறிப்பிடுகிறார் . மேலும் இந்த முரண்பாடு அந்த அமைப்பை செயலிழக்க மற்றும் உடைத்துவிடக் கூடியதாக கருதுகிறார் .

இதற்கு முன்னரும் இதுபோன்ற முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தாலும் அவை நிர்வாக பிரச்சினை சார்ந்த இருதுள்ளது ஆனால் தற்போதைய முரண்பாடுகள் சிந்தனை சார்ந்ததாக உள்ளதாக   அப்துல்லாஹ் அல் கரியூனி என்ற அரபு ஊடகவியலாளர் அவரின் கட்டுரை ஒன்றில் குறிப்பிடுகிறார்.

பொதுவாக அரபுலகின் இது தொடர்பில் எழுதும் ஊடகவியாளர்கள் இந்த உள்முரன்பாட்டை மிகப் பெரிய பிரச்சினையாகவும், இஹ்வான்கள் இதுவரை சந்தித்த உள்முரன்பாடுகளில் தற்போது தோன்றியுள்ள முரண்பாடு மிகவும் ஆழமானது, இது இஹ்வான்களை இரண்டு முகாம்களாக உடைக்கும் அளவுக்கு சென்றுள்ளது என குறிப்பிடுகின்றனர். .இந்த உள்முரண்பாடு அமைப்பின் பெரிய ஒரு நோயின் அடையாளமாக கலீல் அனானி மற்றுமொரு ஆக்கத்தில் குறிப்பிடுகிறார். அதேவேளை ஜோர்டான் இஹ்வான்கள் மத்தியிலும் உள்முரண்பாடுகள் உச்சம் பெற்றுள்ளன என தகவல்கள் குறிப்பிடுகின்றன .

உள்முரண்பாட்டுக்கான காரணம்- காலித் ஜஹ்பரானி

 இஹ்வாங்களின் தலைமை யின் ஒரு பகுதினர் 70 களிலும் பிற்பகுதிலும் , 80 களிலும் ஓரம்கட்ட முயற்சித்த செய்யித் குத்துப் சிந்தனையின் தாக்கம் இளைஞர்களுக்கு மீண்டும் ஏற்பட்டுள்ளதாகவும் செல்லப்படுகிறது. இஹ்வான் அமைப்பை விட்டும் தூரமாகி இருக்கும் அணியின் தலைவர்  இஹ்வான்களின் காலித் ஜஹ்பரானி குறிப்பிடும்போது , இஹ்வான்களுக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள முரண்பாடு நிர்வாகம் சார்ந்து அல்ல சிந்தனை சார்ந்தது என குறிப்பிடுகிறார் . மேலும் சற்று ஆழமாக இந்த ஆராய்ந்தால் இப்போது உச்சம் பெற்றுள்ள உள்முரண்பாட்டை இப்படி அடையாளப்படுத்த முடியும் அதாவது தற்போது மத்திய கிழக்கு எதிர்கொள்ளும் சூழ்நிலை இஹ்வாங்களின் பெரும்பானான  இளைஞர்களை  இஹ்வான் அமைப்புக்குள் இருக்கும் செய்யித் குத்துப்   சிந்தனை வட்டத்தை நோக்கி திருப்பிவிட்டுள்ளது, இதன் காரணமாக புதிய தலைமுறையினர்   செய்யித் குத்துப் சிந்தனை வட்டத்தை ஆதரிக்கும் வேகம் அதிகரித்துள்ளது இது சிந்தனை மாற்றீட்லாளர்களை அச்சமடைய செய்துள்ளது அல்லது அவர்களை தூரப்படுத்தியுள்ளது எனக் கூறலாம் ,

யூஸுப்  கர்ழாவியின்  ஐந்து அம்ச ஒற்றுமை  முன்மொழிவு

கலாநிதி யூஸுப் அல் கர்ழாவி எகிப்து இஹ்வான்கள் மத்தியில் சிந்தனையிலும் ,செயல்பாட்டிலும் , வேறுபாடுகளும் , வித்தியாசங்களும் தோன்றியுள்ளமையையும் அது அனைவரையம் காயப்படுத்தி ,வேதனைப்படுத்துவதாகவும் குறிப்பிடுகிறார். .இஹ்வான்களை ஒன்றுமைப்படுத்தி ஒன்றுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்ட யூஸுப் அல் கர் ழாவி கடந்த மாதம் ஐந்து அம்சங்கள் கொண்ட முன்மொழிவு ஒன்றை முன்வைத்து இஹ்வான்களை ஒருமைப்பாடு மற்றும் ஒன்றுமை நோக்கி அழைத்தார். இதன்போதே அவர் இஹ்வான்கள் மத்தியில் சிந்தனையிலும் ,செயல்பாட்டிலும், வேறுபாடுகளும், வித்தியாசங்களும் தோன்றியுள்ளமையையும் குறிப்பிட்டிருந்தார் .

அவர் முன்வைத்த ஐந்து முன்மொழிவுகளில்   முக்கியமாக குறிப்பிடப்பட்டுள்ள முழு அளவிலான உள்ளக தேர்தல்: அத்தகைய வாக்கெடுப்புக்கு  செல்லும் வரை இஹ்வான்கள் அறிக்கைப் போர் புரிவதையும் , பிளவை ஆழமாக்கக் கூடிய கருத்துக்களை, தீர்மாங்களை வெளியிடுவதில் இருந்து தவிந்து இருக்குமாறும் ஒருவருக்கொருவர் பொறுமையை கடை பிடிக்குமாறும் வேண்டியிருந்தார். அவரின் இந்த வேண்டுகோள் இஹ்வாங்களின் பிளவில் ஆழத்தை காட்ட போதுமானதாக உள்ளது.

ஏற்பும் மறுப்பும்

யூஸுப் அல் கர்ழாயின்  அழைப்பை இஹ்வான்களின் உத்தியோகபூர்வ ஊடக பேச்சாளர் முஹம்மது முன்தசிர் ஏற்றுகொண்தாக அறிவித்தார்,  கடந்த மாதம் 3 February 2016 இஹ்வான் அமைப்பு அந்த அமைப்பின் பொது ஒழுங்கு விதிகளின் மாற்றத்தை  ஏற்படுத்த இணங்கியதுடன் அதற்கான வேலைகள் தொடக்கப்பட்டுள்ளதாக அறிவித்தது, தற்போது பொது ஒழுங்கு விதிகளில்  முன்மொழிவுகளை பரிமாறி வருகின்றது  உத்தியோகபூர்வமாக அறிக்கை ஒன்றில் அதன் நிர்வாக கட்டமைப்பில் மாற்ற முன்மொழிவுகளை வெளியிட்டிருந்தது .ஆனால் மறு பக்கதில் சில அதன் தலைவர்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிழம்பியது ,யூஸுப் அல் கர்ழாவி தனது வேலையைப் பார்க்க வேண்டும், ஜமாஅத்தின் உள்விவகாரங்களில் அவர் தலையிடக் கூடாது  ஜமாஅத்துக்குல் அவருக்குஎந்த  அதிகாரமும் இல்லை என கூறும் அளவுக்கு அறிக்கைகளை வெளியிட்டனர் , ஆனால் இஹ்வான்களின் உத்தியோகபூர்வ அறிக்கைகள் யூஸுப் அல் கர்ழாவியை தமது ஒரு அங்கமாகவே உறுதிப்படுத்துவது போன்று இருந்தது , இங்கு முரண்பாட்டாளர்கள் தமது முரண்பாடுகள் ஒரு ஜனநாயக தளத்தில் இருந்து வெளியிடப்படும் கருத்துகள் என்றே அவற்றை அடையாளப்படுத்த முற்படுகின்றனர்,  இந்த கட்டுரையின் நோக்கம் முரண்பாடுகளை எடுத்து ஆராய்வது அல்ல என்பதால் அதை விளக்கமாக பார்க்க வேண்டிய தேவை இங்கு இல்லை.

எந்தவொரு அமைப்பின்  பிளவும்  பின்விளைவுகளை கொண்டது

இங்கு புதிய கருத்துக்களையும் மாற்றீடுகளையும் வரவேற்கும் நிலையில் உள்ள அமைப்புக்கள் , அதன் உள்புறமும் ,வெளிப்புறமும் கருத்துக்களையும் மாற்றீடுகளையும்   எப்படி அளவீடு செய்வது , அதன் அளவீட்டு கருவியாக எதை பயன்படுத்துவது ,அவற்றை எப்படி உள்வாங்குவது, அல்லது நிராகரிப்பது போன்ற கேள்விகளுக்கு தெளிவான தீர்வை கொண்டிருக்க வேண்டும் என்பதுதான் .

இன்று மத்திய கிழக்கில் முஸ்லிம் உம்மா அனுபவித்து வரும் மிக மோசமான சூழ்நிலையில் இஹ்வான்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பிளவுகள் மட்டுமல்ல எந்தவொரு அமைப்பின் மத்தியிலும் ஏற்படும் பிளவு  முஸ்லிம் உம்மா அனுபவிக்கும் தோல்வியிலும் , வெற்றியிலும் பாரிய தாக்கம் கொண்டதாகவே அமையும் என்ற புரிதலுடன் கட்டுரையில் மேற்கண்ட கருத்துக்கள் ஒப்பிட்டு எமது நாட்டு சூழலுடன் உரசி பார்த்து  சமூக ,மற்றும் ஜமாஅத்துக்களின் தேவைகளின் ஊடக விளங்கிக் கொள்வது தான் இங்கு வேண்டப்படுகிறது.

 ஒரு சதாப்பத்துக்கு முன்பு மேற்கின் பல்வேறு சிந்தனைகளை இஸ்லாமிய மயப்படுத்தும் செயல்பாடுகளை முஸ்லிம் உலகில் அவதானிக்க கூடியதாக இருந்த அதேவேளை தற்போது இஸ்லாமிய சிந்தனைகளை மேற்குமயப்படுத்தும் தீவிர முயற்சிகள் இடம்பெறுகிறதோ ? என   இளம் சமூகம் சிந்திக்கும் நிலையை உருவாக்கி இருக்கிறது, என்ற உண்மையை விளங்கிக் கொண்டு இதை அணுக வேண்டும், முஸ்லிம் உம்மாவின் 700 மில்லியனாக இருக்கும் இளைஞர்கள்    அரசியல் ,சமூகம் சார்ந்த ஒவ்வொரு புதிய கருத்துக்களையும் ,மாற்றீடுகளையும் எப்படி அணுகுகிறார்கள் என்பதை புரிந்து கொள்வது செயல்பாட்டாளர்களுக்கு  மிகவும் அவசியமானது.

நடைபெறும் சம்பவங்கள் -எனது உம்மத்தின் கருத்து வேறுபாடு ஒரு அருளாகும் (”இஹ்திலாபுல் உம்மதி ரஹ்மதுன்”) என இறுதித் தூதர் மீது இட்டுக்கட்டப்பட்ட ஒரு ஹதீஸின் உண்மைநிலையை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.

Written by lankamuslim

மார்ச் 17, 2016 இல் 10:24 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

6 பதில்கள்

Subscribe to comments with RSS.

  1. very informative article

    Abdul Rasheed

    மார்ச் 19, 2016 at 8:30 பிப

  2. very good article,,, Lankamuslim should publish such items

    Hisam Ahmed

    மார்ச் 25, 2016 at 5:56 பிப

  3. //இங்கு புதிய கருத்துக்களையும் மாற்றீடுகளையும் வரவேற்கும் நிலையில் உள்ள அமைப்புக்கள் , அதன் உள்புறமும் ,வெளிப்புறமும் கருத்துக்களையும் மாற்றீடுகளையும் எப்படி அளவீடு செய்வது , அதன் அளவீட்டு கருவியாக எதை பயன்படுத்துவது ,அவற்றை எப்படி உள்வாங்குவது, அல்லது நிராகரிப்பது போன்ற கேள்விகளுக்கு தெளிவான தீர்வை கொண்டிருக்க வேண்டும் என்பதுதான் .//// good point of view

    Mohamed Nizam

    மார்ச் 26, 2016 at 9:36 முப

  4. very objective and facts based , ……insightful….

    M.D. Faris

    மார்ச் 26, 2016 at 6:38 பிப

  5. well bethought , but I think you should add the JI in Pakistan !!

    Ameerdeen -QC

    மார்ச் 26, 2016 at 6:43 பிப

  6. இஹ்வாங்களின் தலைமை யின் ஒரு பகுதினர் 70 களிலும் பிற்பகுதிலும் , 80 களிலும் ஓரம்கட்ட முயற்சித்த செய்யித் குத்துப் சிந்தனையின் தாக்கம் இளைஞர்களுக்கு மீண்டும் ///ஏற்பட்டுள்ளதாகவும் செல்லப்படுகிறது. இஹ்வான் அமைப்பை விட்டும் தூரமாகி இருக்கும் அணியின் தலைவர் இஹ்வான்களின் காலித் ஜஹ்பரானி குறிப்பிடும்போது , இஹ்வான்களுக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள முரண்பாடு நிர்வாகம் சார்ந்து அல்ல சிந்தனை சார்ந்தது என குறிப்பிடுகிறார் . மேலும் இதை சற்று ஆழமாக ஆராய்ந்தால் இப்போது உச்சம் பெற்றுள்ள உள்முரண்பாட்டை இப்படி அடையாளப்படுத்த முடியும் அதாவது தற்போது மத்திய கிழக்கு எதிர்கொள்ளும் சூழ்நிலை இஹ்வாங்களின் பெரும்பானான இளைஞர்களை இஹ்வான் அமைப்புக்குள் இருக்கும் செய்யித் குத்துப் சிந்தனை வட்டத்தை நோக்கி திருப்பிவிட்டுள்ளது, இதன் காரணமாக புதிய தலைமுறையினர் செய்யித் குத்துப் சிந்தனை வட்டத்தை ஆதரிக்கும் வேகம் அதிகரித்துள்ளது இது சிந்தனை மாற்றீட்லாளர்களை அச்சமடைய செய்துள்ளது அல்லது அவர்களை தூரப்படுத்தியுள்ளது எனக் கூறலாம் ,//

    Dear writer mazahim could you please give more detail on above subject, I’m interested to hear more even if it not the main subject mater of the article ,if i’m correct I think you collected all those information from Arabic source .

    Ameer Ali

    மார்ச் 28, 2016 at 1:25 பிப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: