Lankamuslim.org

One World One Ummah

முஸ்லிம்காங்கிரஸின் நிலைப்பாடோ சிவில் சமூகத்தின் கோரிக்கைக்கு நேர்மாறானதாக

leave a comment »

ஜுனைட் நளீமி
slmc 9கடந்த வருடம் நவம்பர் 07ம் திகதி இடம்பெற்ற ஸ்ரீPலங்கா முஸ்லிம் காங்கிரசின் பேராளர் மாநாட்டின் சு10டு  ஆறுவதற்குள் எதிர்வரும் 19ம் திகதி பாலமுனையில் கட்சியின் தேசிய மாநாட்டிற்கான ஏற்பாடுகளை தலைவர்

மேற்கொண்டுள்ளமை பல கேள்விகளையும் சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது. பேராளர் மாநாட்டின் பின்னர் கட்சிக்குள் எழுந்துள்ள உற்கட்சி பூசல்கள் ஒருபுறம்ää தேசியப்பட்டியல் தொடர்பாக பிராந்தியங்களில்

போராளிகளுக்கு ஏற்பட்டுள்ள மன உளைச்சல்கள்ää கட்சித்தலைமைக்கு விரிந்து செல்லும் வலைகள் என பல்வேறு அம்சங்கள் இவÊவுடனடித்தீர்வுக்கு காரணம் என கருதப்படுகின்றது. இவற்றுக்கெல்லாம் அப்பால் அண்மையில்

காத்தான்குடியில் ஒன்றுபட்ட கிழக்கு  சிவில் சமூக பிரதிநிதிகளின் அரசியல் தீர்வு குறித்த தீர்மானங்கள் கட்சியின் எதிர்காலம் குறித்த கேள்வியினை ஏற்படுத்தியிருந்தது. இத்தகைய பல்முனை

நெருக்குவாரங்களுக்குள் இம்மாநாடு குறித்து அலசுவது சிறந்ததாக அமையும்.அரசியல் மருசீரமைப்பும் கட்சியின் மௌனம் களைதலும் இலங்கை முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றில் கட்சிகளும்ää கோசங்கலுமே சிவில் சமூகத்தை வழிநடாத்தி வந்துள்ளன. ஸ்ரீPலங்கா முஸ்லிம் காக்ங்கிரஸின் ஏகபோக உரிமை சில்லறைக்கட்சிகளின் தோற்றத்தினால் கேள்விக்குற்படுத்தப்பட்ட நிலையில் சிவில் சமூகம் கட்சிகளில் நம்பிக்கையீனத்தை நோக்கி

நகர்வடையத்தொடங்கியுள்ளன. இதன் வெளிப்பாடே புதிய அரசின் அரசியல் மருசீரமைப்பு முன்னேற்பாடுகளில் முஸ்லிம் கட்சிகள் மௌனம் சாதித்த வேளை பொறுமையிழந்த சிவில் சமூகம் தமக்கான தீர்வு குறித்து தீர்மானம் செய்ய முற்பட்டன. இதனிடையே வடகிழக்கு இணைப்புää தென்கிழக்கு அழகுää கரையோர மாவட்டம்

என்ற சொல்லாடல்கள் முஸ்லிம் காங்கிரஸ் தரப்பிலிருந்து கசியவிடப்பட்டு வடகிழக்கு முஸ்லிம்களிடத்தில் பெருத்த சந்தேகங்களை ஏற்படுத்தியது. எனவே கிழக்கு கிழக்காவே ஏனைய மாகானங்களைப்போல் அனைத்து அதிகாரம் கொண்டதாக தனித்து இருக்க வேண்டும் என்ற கோரிக்கை கிழக்கு சிவில் சமூகத்தினால் முன்வைக்கப்பட்டது.

அத்தோடு நில்லாமல் குறித்த தீர்மானத்தை கிழக்கின் ஒவ்வொரு மூலை முடுக்குகளுக்கும் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். நிலைமையின் பாரதூரங்களை அனுமானித்த வடக்கின் புத்திஜீவிகளும் சிவில் சமூக பிரதிநிதிகளும் வடக்கு வடக்காகவே இருக்கட்டும் என கோரிக்கையினை முன்வைத்தனர்.

இத்தகைய சிவில் சமூக தீர்மான சக்தியானது கட்சியின் எதிர்கால அரசியல் பயணத்தை பாதிக்கும் என்பதனை தலைமை நன்கு விளங்கிகொன்டது. ஏனெனில் ஸ்ரீ;லங்கா முஸ்லிம்காங்கிரஸின் நிலைப்பாடோ சிவில் சமூகத்தின் கோரிக்கைக்கு நேர்மாறானதாக அமைந்து காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இணைந்த வடகிழக்கில் முஸ்லிம் அழகு குறித்தே கட்சி தனது நிலைப்பாட்டினை கொண்டிருந்தது. இந்தியாவின் பாண்டிச்சேரி முறைமையிலான நிலத்தொடர்பற்ற முஸ்லிம் அழகு குறித்து கட்சி வட்டாரங்கள் பிரஸ்தாபிக்கத்தொடங்கின.

அனைத்து அதிகாரங்களும் கொண்ட முஸ்லிம் மாகாணம் என்ற முன்மொளிவுகளுக்கப்பால் முஸ்லிம் அழகு என்ற பதம் கட்சி தவிசாளர் உள்ளிட்ட முக்கியஸ்த்தர்களால் முன்மொளியப்பட்டமை சந்தேகங்களை தோற்றுவித்தது. பாண்டிச்சேரி முறையிலான ஒரு அழகு என்பது வெருமனே சுவரில்லா சித்திரமாகவே அமைந்துவிடும் என்ற எதார்த்த கருத்து

சிவில் சமூகத்தில் முன்வைக்கப்பட்டது. அத்தோடு நிலத்தொடர்பற்ற முஸ்லிம் மாகாணம் என்பதில் காணிää வள பகிர்வுகள் நடைமுறைச்சாத்தியப்பாடாக அமையாது என்ற உண்மையும் முன்வைக்கப்பட்டது. கரையோர மாவட்டம் கூட எவ்வித சாத்தியப்பாடற்ற ஒரு கோரிக்கை என்ற கருத்து அம்பாறை சிவில் சமூகப்பிரதினிதிகளால் முன்வைக்கப்பட்டு வருகின்றது. இத்தகைய சாத்தியப்பாடற்ற நிலைமையினை மர்ஹ_ம் அ~Êரப் அவர்கள் இறுதியாக பெந்தோட்டை ஹோட்டலில் இடம்பெற்ற மட்டக்களப்பு மாவட்ட சிவில் பிரதிநிதிகளுடன் மேற்கொண்ட கலந்தாலோசனையின் பின்னர் ஏற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. எனவே இடம்பெறவுள்ள தேசிய மாநாட்டில் இணைந்த வடகிழக்கில் நிலத்தொடர்பற்ற நியாயபூர்வ வலப்பகிர்வு கொண்ட அனைத்து அதிகாரங்களும் கொண்ட முஸ்லிம் மாகாணம் குறித்து உறுதிப்பாட்டினை எவ்வாறு தலைவர் முன்வைக்கப்போகிறார் என்பதே கேள்விக்குறியாகியுள்ளது.

இடம்பெற்ற யுத்தத்தில் தமிழ் தரப்பினை போன்றே முஸ்லிம் தரப்பு சமமான சில போது விகிதாசாரத்தில்  கூடுதலான இழப்புக்களை சந்தித்துள்ள சமூகம் என்ற ரீதியில் நியாயப்பாடற்ற எத்தகைய முன்மொழிவுகளையும் முஸ்லிம் சமூகத்தினுள் திணிக்க முற்படுவது வரலாற்று துரோகமாக அமையும் என்பதனை கட்சியின் தலைமை நன்கு விளங்கியிருக்கும் என சிவில் சமூகம் நம்பிக்கை தெரிவிக்கின்றது. கடந்த காலங்களில் மூன்றாந்தரப்பு

என்ற பூச்சாண்டிகலும்ää பல்வேறு பிழையான அரசியல் தீர்மானங்களும் முஸ்லிம் சமூகத்தின் இருப்புக்கே வேட்டாக அமைந்தமையை மறந்துவிட்டு பிழையான தீர்மானங்களை எட்டிவிட்டு நிர்பந்தத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் என அறிக்கை விடுவதும் பொருத்தப்பாடாக அமையாது.

உற்கட்சி மோதலுக்கான தீர்வு

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலையடுத்து தலைமைத்துவத்திற்கான உர்கட்சி நெருக்குவாரங்கள் அதிகரித்துள்ளமை அவதானிக்க முடியுமாக உள்ளது. குறிப்பாக தேசியப்பட்டியல் விவகாரம் கட்சி தவிசாளர்ää செயலாளர் உள்ளிட்ட சிலரை வெகுவாக பாதித்திருந்தது. கட்சி செயலர் தான் கட்சியில் இருந்து இராஜினாமா செய்யவுள்ளதாக மாறுபட்ட கருத்துக்கள் ஊடகங்கள்  வாயிலாக வெளிவந்தன. ஆனால் கட்சிப்போராளிகள் மத்தியில் கடந்தகாலத்தில் பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்த தவிசாளர் நடவடிக்கைகளினால் தலைமை பல்வேறு நெருக்குவாரங்களை சந்தித்தது.

இந்நிலையில் களைபிடுங்கும் சந்தர்ப்பமாக கடந்த பாராளுமன்ற தேர்தல் அமைந்ததினால் தவிசாளர் தாம் கட்சியில் தனித்துவிடப்பட்ட மனோநிலையில் அறிக்கைகளை விட்டிருந்தார். இச்சந்தர்ப்பத்தில் செயலாளர் நாயகமும் இராஜினாமா மேற்கொள்ளும் சந்தர்ப்பத்தில் தலைமைக்கு ஏகபோக அதிகாரம் கைக்கு வந்துவிடும் என்ற நோக்கில் கட்சிக்குள் இருந்தே சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை ஊட்டப்பட்டதாக அறிக்கைகள் வெளிவந்தன.

இணைந்த வடகிழக்கில் முஸ்லிம் தனியழகுää கரையோர மாவட்டம் என்ற இலகுவில் அடைந்துகொள்வதற்கான சாத்தியப்பாடற்ற  முன்மொழிவுகளை அவிழ்த்து விட்டு தலைமையை சங்கடத்திற்குள் தள்ளிவிட்டு காலைவாருவதற்கான சந்தர்ப்பங்களை

எதிர்பார்ப்பதாக்வே விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இத்தகைய அறிக்கைகளின் மூலம் தென்கிழக்கில் தமது அரசியல் நல்லபிப்பிராயங்களை போராளிகள் மத்தியில் தக்க வைத்து பிராந்திய பற்றாளர்கள் என்ற சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள முனைவதாக அமைகின்றது. மறுபுறம் கட்சியின் தலைவர் இப்பொறியில் இருந்து

மீழுவதாக இருந்தால் இக்கோரிக்கையினை சாத்தியமானதாக மாற்றியமைக்க வேண்டிய அரசியல் தேவை காணப்படுகின்றது. முடியாதபட்சத்தில் தலைமை ஆசனம் கேள்விக்குள்ளாக்கப்படும் வாய்ப்பும் காணப்படுகின்றது.

சிலபோது முஸ்லிம் மாகாணம் அமையும்பட்சத்தில் காலத்தின் நீட்சியில் கிழக்கினுல்லேதான் தலைமைத்துவம்  பகிரப்படவேண்டும் என்ற கோஷம் மேலெல வாய்ப்பாக அமையும். இத்தகைய நிலை கட்சியினை முற்றாக அளித்து பெரும்பான்மைக்கட்சிகளை முஸ்லிம்கள் சார்ந்தொலுக வேண்டிய கால சு10ழ்னிலை ஏற்பட  வாய்ப்பாக அமையும்.

எனவே இத்தகைய முரண் நகைகளுக்குள் கட்சியின் அபிலாசைகளா  சிவில் சமூக அபிலாசைகளா ää தலைமையா சந்தர்ப்ப வாதமாää ஸ்ரீ;ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய கட்சியா அல்லது பிராந்தியக்கட்சியா தக்கன பிழைத்தலா அல்லது வரலாற்றுத்துரோகமா என்ற கேள்விகளுக்கு விடையாகவே இடம்பெறவுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாடு இடம்பெறவுள்ளது என்பது யதார்த்தமாகும்.

Advertisements

Written by lankamuslim

மார்ச் 17, 2016 இல் 2:20 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: