Lankamuslim.org

One World One Ummah

ஓய்ந்து ஒதுங்கிவிடமாட்டோம் என்கிறார் மஹிந்த

leave a comment »

mahinthaநாட்டின்  தற்போதைய பொருளாதார நிலைக்கு தனது அரசாங்கம் மீது பழிசுமத்துவதற்கு சிறிசேன அரசாங்கம் முயன்றுவருவதாக பாராளுமன்ற உறுப்பினர்  மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற   கூட்டு எதிர்கட்சியினரின் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார் .தனது அரசாங்கம் பெற்றுக்கொண்ட அளவுக்கதிகமான கடன்களே நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைக்கு காரணம் என அவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் தான் இரகசிய கடன்களை பெற்றுக் கொண்டதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர் எனவும் மகிந்தராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

தனது இன்னொரு மகனான நாமல் ராஜபக்சவை கைதுசெய்வதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாகவும் தெரிவித்துள்ள அவர் ஆனால் இவற்றின் காரணமாக அவர்கள் அரசியலில் இருந்து ஒதுங்குவார்கள் என எவரும் கனவு காணக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

‘எனது முழுகுடும்பத்தையும் ஏன் என்னையும் சிறையில் தள்ளினாலும் கூட நான் நாட்டுமக்களின் நலனிற்காக தொடர்ந்தும் அரசியலில் ஈடுபடுவேன்’ என அவர் தெரிவித்துள்ளார்-GTN

Advertisements

Written by lankamuslim

மார்ச் 17, 2016 இல் 11:41 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: