Lankamuslim.org

One World One Ummah

ஊழல் ,மோசடி ஆணைக்குழுவுக்கு மேலும் அதிகாரங்கள்

leave a comment »

150210investigationஊழல் ,மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஆணைக்குழுவுக்கு, மேலும் அதிகாரம் வழங்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த 05 வருடங்களாக இடம்பெற்ற ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக, கடந்த ஜனவரி 08ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

ஜனவரி மாதம் 08ஆம் திகதியின் பின்னர் இடம்பெற்றுள்ள ஊழல் மற்றும் மோசடி தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் அதிகாரத்தை ஆணைக்குழுவிடம் வழங்குவதற்கான காரணம், ஊழல் மற்றும் முறைகேடு தொடர்பிலான விசாரணைகள் மிகவும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்படுவதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உட்பட அரசியல் பிரதிநிதிகள் இந்த ஆணைக்குழுவிற்கு பல முறை அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் இம்மாதம் 29 மற்றும் 30ஆம் திகதி மஹிந்த ராஜபக்ச அழைக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் வரம்பிற்குற்படாமையின் காரணமாக ஆணைக்குழுவினால் நிராகரிக்கப்பட்ட பல மனுக்கு தொடர்பில் விசாரணை மேற்கொள்ள, ஜனாதிபதியினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான விசாரணை நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Written by lankamuslim

மார்ச் 16, 2016 இல் 9:51 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: