Lankamuslim.org

One World One Ummah

இழுபறியுடன் ஆரம்பமாகும் சிரியா பேச்சுவார்த்தை !!!

leave a comment »

rrசிரியாவில் முக்கியமான பேச்சுவார்த்தை இன்று ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ளது. எனினும் பேச்சுவார்த்தை நிகழ்ச்சி நிரல் மட்டுப்படுத்தப்பட்டதாக அமைந்துள்ளது. இது பேச்சுவார்த்தையை முறித்து விடலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறதுஇந்த பேச்சுவார்த்தையில் ஜனாதிபதி தேர்தல் ஒன்றுக்கான ஆலோசனைகள் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என்று சிரிய வெளியுறவு அமைச்சர் வலித் முஅல்லம் நிபந்தனை விதிக்கும் நிலையில் . முன்னிபந்தனை இந்த பேச்சுவார்த்தை ஆரம்பிக்கும் முன்னர் நிறுத்தப்படும் நிலையை ஏற்படுத்தும் என்று எதிர்தரப்பினர்  எச்சரித்துள்ளனர்.

ஆனால் ஜெனீவாவில் இருக்கும் சிரியாவுக்கான ஐ.நா. விசேட தூதுவர் ஸ்டபன் டி மிஸ்டுரா, புதிய அரசியலமைப்பு மற்றும் ஐ.நாவின் மேற்பார்வையிலான தேர்தல் ஆகியன உட்பட அடிப்படை பிரச்சினைகள் அவதானத்தில் கொள்ளப்படும் என்று குறிப்பட்டுள்ளார். சிரியாவில் அரசியல் தீர்வொன்றை பெற எப்போதும் இல்லாதவாறு வாய்ப்பு கிட்டியிருக்கிறது என்று மஸ்டுரா குறிப்பிட்டுள்ளார். திங்கட்கிழமை (இன்று) ஜெனீவாவில் நடைபெற உள்ள சமாதான பேச்சுக்களின் மூலம், தாம் அதிகாரத்தைப் பெற முடியும் என எதிர்த் தரப்பினர் நினைத்தால், பேச்சுவார்த்தை தோல்வியில் முடியும் என சிரிய வெளியுறவுத் துறை அமைச்சர் முஅல்லம் தெரிவித்துள்ளார்.

டமஸ்கஸில் பேசிய அவர், இந்தப் பேச்சு வார்த்தைகளில் பங்கேற்க தமது பிரதிநிதிகள் ஜெனீவாவுக்கு ஞாயிற்றுக்கிழமை (நேற்று) செல்வார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.சிரியாவில் இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைப்பது குறித்த பேச்சுக்களுக்காகவே தாங்கள் ஜெனீவா வந்துள்ளதாக எதிர்த்தரப்பு ஒன்றின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி அஸாத்தின் எதிர்காலம் குறித்த விடயமே கடந்த காலங்களில் அமைதிப் பேச்சுவார்த்தை முறிவடைய முக்கிய காரணமாக இருந்தது. சிரியாவில் கடந்த இரண்டு வாரங்களாக நீடிக்கும் பகுதியளவான யுத்த நிறுத்தம் காரணமாக அங்கு மோதல்கள் கணிசமாக குறைந்துள்ளன.

Written by lankamuslim

மார்ச் 14, 2016 இல் 7:50 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: