Lankamuslim.org

One World One Ummah

தேசிய நல்லிணக்கத்தை எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும் தெரியுமா ?

leave a comment »

miநாங்கள் தேசிய  நல்லிணக்கம் பற்றிப் பேசுகின்றோம், எல்லோரும் தேசிய நல்லிணக்கம் என்றவுடன் அது பற்றிப் பேச வடக்கிற்கே வருகின்றார்கள், முதலில் நல்லிணக்கம் பற்றி தென்னிலங்கை மக்களுக்கு புரியவைக்க வேண்டும் அது அங்கிருந்தே தொடங்க வேண்டும் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கை மக்களின் மனங்களை சில கடும்போக்குவாதிகள் மாற்ற முற்படுவதாகவும் இதன்போது அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த 700 ஏக்கர் காணிகள் மற்றும் நடேஸ்வராக் கல்லூரி, நடேஸ்வரா கனிஸ்ட வித்தியாலயம் ஆகியன, ஜனாதிபதியால் பொதுமக்களிடம் மீளக் கையளிக்கும் நிகழ்வு காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரியில் நேற்று (12) நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

கடந்த மாதம் சாரணர்களிற்கான ஜம்போறி நிகழ்விற்காக யாழ்ப்பாணம் வந்திருந்தேன். அங்கு தென்பகுதி மாணவர்களும் வடபகுதி மாணவர்களும் ஒன்றாக மகிழ்வோடு இருந்ததைக் கண்டேன்.

வடபகுதி மக்கள் துன்பங்களோடு வாழ்வதை உணர்கிறேன். ஆனால் இப்பகுதி மக்கள் கஷ்டப்பட்டு உழைக்கிறார்கள். எமது நாட்டின் ஒன்பது மாகாணங்களும் ஒரே மாதிரியாக அபிவிருத்தி செய்யப்படவேண்டும். 26 வருட யுத்தத்தால் வடக்கு கிழக்கு, மாகாணங்கள் அபிவிருத்தியில் பின்தங்கிய நிலையிலேயே காணப்பட்டன. யுத்தத்தால் உயிரிழப்புக்கள் ஏற்பட்டதோடு ஏழ்மை நிலையும் ஏற்பட்டது. நாடெங்கிலும் யுத்தத்தால் உயிரிழப்புக்கள் ஏற்பட்டன. யுத்தத்தின் வலியை இப்போதும் உணர முடிகிறது. யுத்தத்தின் விளைவுகளை எல்லோரும் புரிந்துகொண்டுள்ளனர்.

யுத்தம் நிகழ்ந்த பிரதேசங்களிற்கு நாங்கள் இன்னமும் கூடிய உதவிகள் செய்ய வேண்டியுள்ளது. அதன் ஒரு அங்கமாக 65 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டம் ஒன்றினை ஆரம்பித்துள்ளோம். தெல்லிப்பளையில் அதற்காக அமைக்கப்பட்ட மாதிரி வீட்டுத்திட்டம் ஒன்றினைப் பார்க்கப் போயிருந்தேன்.

முதலமைச்சர் விக்னேஸ்வரனும் மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதனும் வீட்டுத்திட்டம் தொடர்பாக தங்கள் கருத்துக்களைக் கூறினார்கள். அவர்களுடைய விவாதம் தேவையற்றது. இந்த வீடுகளில் நானோ, விக்னேஸ்வரனோ, சுவாமிநாதனோ தங்கப்போவதில்லை. இவ் வீடுகளில் மக்களே தங்கப்போகின்றார்கள். மக்கள் விரும்பும் வீடுகளையே நாம் கட்டிக்கொடுக்க வேண்டும்.

மாகாண அரசுடன் இணைந்து வீட்டுத்திட்டம் தெடர்பாக விரைவில் மக்களின் கருத்துக்களைப் பெற்று அவைபற்றி நாங்கள் ஆராய்வோம்.

மாதிரி வீட்டினைப் பார்க்கச் சென்றபோது பல்வேறு மக்களைச் சந்தித்தேன். தமது காணிகளைத் தருமாறே அவர்கள் கேட்கின்றார்கள். அவர்கள் வேறு ஆட்களின் காணிகளைக் கேட்கவில்லை. தமது காணிகளையே கேட்கின்றார்கள். அவர்களது காணிகளை அவர்களிற்கு வழங்கும் பொறுப்பு எமக்கு இருக்கிறது. எதிர்வரும் மாதங்களில் காணிகளை வழங்கும் வேலையை பூர்த்திசெய்ய வேண்டியிருக்கிறது.

நத்தாரிற்கு யாழ்ப்பாணம் வந்தபோது 2016 ஜூன் மாதத்திற்குள் மக்களது காணிகளை வழங்குவேன் எனக் கூறினேன். எனது வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்ற இன்னும் மூன்று நான்கு மாதங்கள் தேவை. இதற்காக அனைவரது ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கின்றேன்.

ஐ.நா மனித உரிமைப் பேரவைத் தலைவர் என்னுடன் பேச்சுவார்த்தை நடத்தும்போது அவரது முதல் கோரிக்கை மக்களது மீள்குடியேற்றம் பற்றியதாகவே இருந்தது. எனவே இந்த முக்கிய விடயத்திற்கு முன்னுரிமை அளிப்பேன்.

இதனை தென்னிலங்கையில் சிலர் தவறாக சித்தரித்து தவறாகப் பேசுகின்றார்கள். இப்படியானவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். நான் முன்னர் கூறியது போலவே கூறுகின்றேன். இங்கு வந்து இந்த மக்களின் துயரங்களைப் பாருங்கள்.

நாங்கள் தேசிய நல்லிணக்கம் பற்றிப் பேசுகின்றோம். எல்லோரும் தேசிய நல்லிணக்கம் என்றவுடன் அது பற்றிப் பேச வடக்கிற்கே வருகின்றார்கள். முதலில் நல்லிணக்கம் பற்றி தென்னிலங்கை மக்களிற்கே புரியவைக்க வேண்டும். தென்னிலங்கை மக்களின் மனங்களை சில கடும்போக்குவாதிகள் மாற்ற முற்படுகின்றார்கள்.

நாங்கள் சமத்துவமாக எல்லோரும் வாழும் நாட்டை உருவாக்க வேண்டும். விமர்சனங்கள் செய்துவிட யாராலும் முடியும். ஆனால் ஒவ்வொருவருடைய பொறுப்பையும் அவர்கள் உணர வேண்டும். அரசு என்ற வகையில் வடக்கு மக்களிற்கு எமது முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவோம். வடக்கு மாகாண சபைக்கும் ஒத்துழைப்பு வழங்குவோம்.

முதலமைச்சர் தனது உரையில் கூறியவற்றை நான் மனதில் உள்வாங்கினேன். அவர் பல விடயங்களைக் கூறினார். அவை தொடர்பில் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தும் என்றார்.-ad

வடக்கு ,கிழக்கு முஸ்லிம் காணி பிரச்சினை : 15 கண்டங்கள் கொண்ட ஆவணத்தை கையளித்து காத்திருக்கிறோம்

Advertisements

Written by lankamuslim

மார்ச் 13, 2016 இல் 11:19 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: