Lankamuslim.org

One World One Ummah

2016 வரவு செலவுத் திட்டம் 107 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

leave a comment »

buதேசிய அரசாங்கத்தின் 2016 ஆம் ஆண்டிற்கான  வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் தற்போது நிறைவுற்றுள்ளது.

2016 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் 107 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 159 வாக்குகளும் எதிராக 52 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. 13 பேர் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

மக்கள் விடுதலை முன்னணி இதற்கு எதிராக வாக்களித்ததோடு, முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 13 பேர் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.

இதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஆறுமுகன் தொண்டமான் மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் இம்முறை வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த வரவு செலவுத்திட்ட யோசனையை கடந்த மாதம் 20ம் திகதி நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Written by lankamuslim

திசெம்பர் 2, 2015 இல் 6:20 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: