Lankamuslim.org

One World One Ummah

மத்திய கிழக்கில் ஸ்திரமில்லாத நிலை ஏற்பட்டால் இலங்கை பெரும் பொருளாதார நெருக்கடியை சந்திக்கும்

leave a comment »

Ranilஐ.எஸ்.ஐ.எஸ் செயல்பாடுகளினால்  இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்படலாம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஐ.எஸ். ஐ.எஸ். தாக்குதல்கள் அதிகரிக்கும் போது மத்திய கிழக்கில் ஸ்திரமில்லாத நிலை ஏற்படும். இதன் போது இலங்கையில் ஏற்படும் பொருளாதார நெருக்கடிக்கு நாம் இப்போதே தயாராக வேண்டும்.

பாராளுமன்றத்தில் நேற்றை தினம் இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான 8ஆம் நாள் விவாதத்தினை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர், அமெரிக்காவைத் தவிர்ந்த உலகின் பல்வேறு நாடுகளில் பொருளாதார நெருக்கடி தலைதூக்கி வருகின்றது. இவ்வாறானதொரு சூழ்நிலையில் ஐ.எஸ்.ஐ.எஸ். நடவடிக்கைகள் அதிகரிக்கும்போது மத்திய கிழக்கில் ஸ்திரமில்லாத நிலை தலைதூக்கும்.

இதனால் எமது நாட்டிலும் பாரிய பொருளாதார நெருக்கடியை சந்திக்க நேரிடும். அவ்வாறான நிலை ஏற்பட்டால் அதனை சமாளிப்பதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கையாக சர்வதேச நாணய நிதியத்துடன் சில நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு நிதியமைச்சர் தயாராகவுள்ளார்.

Written by lankamuslim

திசெம்பர் 2, 2015 இல் 6:59 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: