Lankamuslim.org

One World One Ummah

புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்த தேவைப்பட்டால் சர்வஜன வாக்கெடுப்பு !!

leave a comment »

MIஇலங்கையில் புதிய அரசியலமைப்பை அறிமுகப் படுத்துவதற்காக தனதுஅரசாங்கம் தேவைப்பட்டால் சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதற்கும் தயங்காது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பாரிசில் உள்ள இலங்கை தூதுரகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாங்கள் அரசமைப்பு சீர்திருத்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளோம், அதனை பூர்த்திசெய்வதற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியம், எனது அரசாங்கம் அதற்கும் தயாராகவுள்ளது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அரசமைப்பிற்கான 19 திருத்தத்தின் மூலம் நாங்கள் பரந்துபட்ட சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த முயன்றோம் ஆனால் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு நாங்கள் கீழ்ப்பணிய வேண்டிய நிலையேற்பட்டுத. எனினும் 19 வது திருத்தத்தின் மூலம் நாங்கள் ஜனாதிபதியின் அதிகாரங்கள் சிலவற்றை பாராளுமன்றத்திற்கு வழங்கியுள்ளோம்.

கடந்த 10 மாதங்களாக அரசாங்கம் சமூக பொருளாதார சீர்திருத்தங்களை முன்னெடுப்பதிலேயே கவனமாகஉள்ளது. ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின்போது அளித்த வாக்குறுதிகள் இவை.

முன்னாள் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றிருந்தால் நாடு மேலும் பல பிரச்சினைகளை எதிர்கொண்டிருக்கும். நாங்கள் சர்வதேச அரசியலில் தனிமைப்படுத்தப்பட்டு வந்தோம், இந்த நிலையை நாங்கள் மாற்றியுள்ளளோம்.

மக்கள் மத்தியில் அச்சத்தை விதைப்பதற்கு முயலும் தங்களை தாங்களே தேசப்பற்றுள்ளவர்களாக அறிவித்துக் கொண்டவர்களை விட நான் அதிகளவிற்கு தேசத்தின் பாதுகாப்பு குறித்து கரிசனை கொண்டுள்ளேன்.

நாங்கள் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புகூறல் தொடர்பில் சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது உண்மையே. ஆனால் அதன் அர்த்தம் நாங்கள் எங்கள் படையினரின் கௌரவத்திற்கு துரோகமிழைத்துவிட்டோம் என்பதல்ல. அவர்களின் கௌரவத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.=TC

Written by lankamuslim

திசெம்பர் 1, 2015 இல் 6:12 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: