Lankamuslim.org

One World One Ummah

மீள்குடியேற்றத்திற்காக பிரித்தானியா 6.6 மில்லியன் யூரோ வழங்க இணக்கம்

leave a comment »

guஇலங்கையின் உள்நாட்டு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை மீள்குடியேற்றுவதற்காக பிரித்தானியா 6.6 மில்லியன் யூரோவை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது. மால்டாவில் இடம்பெறுகின்ற பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரோனுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அபிவிருத்தி அடையும் நாடுகளில் வர்த்தக மற்றும் முதலீடுகளை ஊக்குவிப்பதற்கான பொதுநலவாய அமைப்பின் பிரகடனத்திலும் இலங்கை கைச்சாத்திட்டுள்ளது.

இதற்கான கடன் நிதியம் 20 மில்லியன் டொலர் முதலீட்டடில் ஆரம்பிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பொதுநலவாய அமைப்பின் புதிய செயலாளர் நாயகமாக பெட்ரீஷியா ஸ்கொட்லாந்து சீமாட்டி தெரிவு செய்யப்பட்டுள்ளார். (Baroness Patricia Scotland )

66 வருடகால பொதுநலவாய அமைப்பின் வரலாற்றில் இந்தப் பதவியை ஏற்கும் முதலாவது பெண்மணி இவரென்பது குறிப்பிடத்தக்கது.

டொமினிக்கன் நாட்டில் பிறந்து பிரித்தானியாவில் குடியேறிய இவர் சட்டத்தரணியாகவும், பிரித்தானிய பாராளுமன்றத்தில் அமைச்சராகவும் செயற்பட்டுள்ளார் பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாடு நாளையுடன் நிறைவடைகின்றது.

மாநாட்டில் கலந்துகொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காலநிலை மாற்றம் தொடர்பிலான சர்வதேச மாநாட்டில் கலந்துகொள்வதற்காக நாளை பிரான்ஸ் செல்லவுள்ளார்.

Written by lankamuslim

நவம்பர் 29, 2015 இல் 6:45 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: