Lankamuslim.org

One World One Ummah

பணிப்பெண்:இலங்கைத் தூதர் அஸ்மி தாசிம் என்ன கூறியுள்ளார் ?

leave a comment »

saudi-arabiaஇலங்கைப் பணிப் பெண் ஒருவருக்கு கணவரல்லாத வேறு ஒரு ஆணுடன் தகாத உறவு வைத்துக் கொண்ட குற்றச்சாட்டில்  சவுதி நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

இதுகுறித்து இலங்கையின்  ஊடகங்களும் கண்டனங்களை வெளியிட்டு வருகின்றன. எனினும் அதனை சவுதிக்கான தூதர் கண்டித்துள்ளதுடன், அவ்வாறான விமர்சனங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார்.

சவுதிக்கான இலங்கைத் தூதர் அஸ்மி தாசிம், சவுதியிலுள்ள இலங்கையரின் சர்வதேசப் பாடசாலை நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள தூதுவர் அஸ்மி தாசிம்,

இலங்கைப் பணிப்பெண் மீதான தண்டனை குறித்து இலங்கை ஊடகங்கள் விசமக் கருத்துக்களை பரப்பி வருகின்றன. இவ்வாறான கருத்துக்கள் இலங்கை-சவுதி அரேபியா நட்புறவில் பாதிப்பை ஏற்படுத்தி விடும்.

சவுதிக்கு உழைப்பதற்காக வருகின்றவர்கள் இந்நாட்டு சட்டதிட்டங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியாதவர்கள் சவுதி அரேபியாவிற்கு வராமல் இருந்து கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.-TC

Advertisements

Written by lankamuslim

நவம்பர் 29, 2015 இல் 10:08 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: