Lankamuslim.org

One World One Ummah

வாஸ் மற்றும் அவரின் மகன் உள்ளிட்ட அறுவருக்கு மரணதண்டனை

with 2 comments

guவர்த்தகர்  மொஹமட் சியாம் கொலை வழக்கில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன, அவருடைய மகன் மற்றும் ஏனைய நால்வருக்கும் கொழும்பு மேல் நீதிமன்றம் சற்று முன்னர் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கொழும்பு உயர் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன, அவருடைய மகன் மற்றும் நான்கு  பேருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

லலித் ஜயசூரிய, சரோஜினி வீரவர்தன மற்றும் அமேந்திர செனவிரட்ன ஆகிய மூவர் அடங்கிய நீதிபதிகள் குழாம் இந்த தீர்ப்பை வழங்கி உத்தரவிட்டுள்ளனர்.

 குறித்த தீர்ப்பு 802 பக்கங்களைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும், இலங்கை வரலாற்றில், DIG ஒருவருக்கு கொலைக் குற்றச்சாட்டு ஒன்றில் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
gggi

Written by lankamuslim

நவம்பர் 27, 2015 இல் 4:19 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

2 பதில்கள்

Subscribe to comments with RSS.

  1. நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தன மீது தனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை என்று கொலை செய்யப்பட்ட மொஹமட் சியாமின் தந்தை தெரிவித்துள்ளார்.

    வாஸ் குணவர்தன மேல் முறையீடு செய்தால் தான் அவருக்கு ஆதரவாக சாட்சி வழங்க தயாராகவுள்ளதாக மொஹமட் சியாமின் தந்தை தெரிவித்துள்ளார்.

    எவ்வாறாயினும் இந்தக் கொலைக்கு காரணமானவர்கள் மொஹமட் பௌசுதீன் மற்றும் கிரிசாந்த கோரலகே ஆகிய இருவருமே என அவர் தெரிவித்துள்ளார்.

    மொஹமட் பௌசுதீன், தனது மகன் சியாமிற்கு வழங்கிய கடன் தொகையை எவ்வாறாயினும் மீளப் பெறுவதற்கு அவரின் நண்பர் கிரிசாந்த கோரலகேவின் உதவியை நாடியதாக தெரிவித்துள்ளார்.

    பிரபல வர்த்தகர் முஹமட் ஷியாம் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் நீதிமன்றத்தினால் குற்றவாளியாக இணங்காணப்பட்ட முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தன உட்பட்ட 06 பேருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

    இதன்பின்னர் நீதிமன்ற வளாகத்தில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே மொஹமட் சியாமின் தந்தை இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    எவ்வாறாயினும் இந்தக் கொலையுடன் தனது மகன் சம்பந்தமில்லை என்பதுடன் தான் உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் இந்தக் கொலையை செய்யவில்லை என்றும் வாஸ் குணவர்தன நீதிமன்றில் இன்று தெரிவித்திருந்தார்.

    அத்துடன் தனது தந்தை பொலிஸ் அதிகாரியாக நாட்டிற்கு பாரிய சேவையாற்றியவர் என்பதில் தான் பெருமையடைவதாக வாஸ் குணவர்தனவின் மகன் ரவிந்த்ரு குணவர்தன நீதிமன்றில் தெரிவித்திருந்தார்.

    cm

    நவம்பர் 27, 2015 at 8:31 பிப

  2. மொஹமட் ஷியாம் கொலை வழக்கில் முன்னாள் பிரதிக் காவற்துறை மா அதிபர் வாஸ் குணவர்தனவுக்கு தொடர்பில்லை என்று தான் நேற்று கூறியதை கருத்தை வாபஸ் பெற்றுக்கொள்வதாக ஷியாமின் தந்தை கூறியுள்ளார்.

    பௌஸ்டீன் மற்றும் கிரிஷாந்த ஆகியோர் இந்த கொலையில் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

    வர்த்தகர் மொஹமட் ஷியாம் கொலை வழக்கில் முன்னாள் பிரதிக் காவற்துறை மா அதிபர் வாஸ் குணவர்தன, அவரது மகன் உட்பட 6 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

    இந்த தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர் ஊடகங்களிடம் பேசிய ஷியாமின் தந்தை, தனது மகன் கொலையுடன் வாஸ் குணவர்தனவுக்கு எந்த தொடர்பும் இல்லை எனவும் தான் அவரை சந்தேகிக்கவில்லை எனவும் கூறியிருந்தார்.

    அத்துடன் மேன்முறையீடு செய்தால், அவருக்காக சாட்சியமளிக்க தான் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

    cm

    நவம்பர் 29, 2015 at 10:38 முப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: