Lankamuslim.org

One World One Ummah

”மாவீரர் தின” நிகழ்வுகள் மீண்டும் நாட்டில் இனவாத செயற்பாடுகளுக்கு வழிவகுக்குமோ ?

leave a comment »

LT”மாவீரர் தினம்” சட்டவிரோதமானது ,  இதனை உடனடியாக நிறுத்த வேண்டும். தனி ஈழ கோரிக்கைக்கு நேரடியாக வழிவகுக்கும் வகையில் பயங்கரவாதத்தை தோற்றுவிக்கும் செயற்பாடாக உள்ளது. என  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் .

இதனை உடனடியாக நிறுத்த வேண்டும். தனி ஈழ கோரிக்கைக்கு நேரடியாக வழிவகுக்கும் வகையில் பயங்கரவாதத்தை தோற்றுவிக்கும் செயற்பாடாக உள்ளது. இவ்வளவு காலமாக முன்னெடுக்க முடியாமல் இருந்த செயற்பாட்டை மீண்டும் இடம்பெற இடமளிக்க கூடாது. எனவும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் .

அதேவேளை தேசியவாத  சிங்கள பெளத்த அமைப்புக்கள் இப்படியான நிகழ்வுகளை காரணமாக கொண்டு தனது பிரசாரத்தை தீவிரப்படுதிவருவதாக தெரிவிக்கப்படுகிறது  ,அதேவேளை இன்று 26 ஆனையிறவு பகுதியில் தமிழ் ஈழ விடுதலைப்புலிகளின் கொடி பறக்கவிடப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன

வடக்கில் ”மாவீரர் தின” நிகழ்வுகளை நடாத்த ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்றும் செய்தி வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அரசியல்வாதிகள், அமைப்புக்கள், தனிப்பட்ட நபர்கள் இவ்வாறு ஆயத்தங்களை மேற்கொண்டு வருகின்றனர்.  விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 61ம் பிறந்த நாள் இன்று என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தினத்தில் அனைத்து உயிரிழந்த புலி உறுப்பினர்களுக்கும் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அரசியல்வாதிகளும் சில தரப்பினரும் பிரபாகரனின் உருவப்படம் அச்சிடப்பட்ட மாவீரர் தினை துண்டுப் பிரசூரங்கள் மற்றும் சுவரொட்டிகளை விநியோகம் செய்து வருகின்றனர் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

இதேவேளை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் மற்றும் வவுனியா நகரங்களின் பல இடங்களில் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன என தெரிவிக்கப்படுகிறது எனினும், மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கான சுவரொட்டிகள் ஒட்டுவதையோ துண்டு பிரசுரங்களை பகிர்வதையோ அல்லது  நிகழ்வை ஏற்பாடு செய்வதையோ தடுக்கும் செயற்பாடுளை பாதுகாப்பு தரப்பினர் முன்னெடுத்துள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் ரூவான் குணசேகர தெரிவித்துள்ளார்
Advertisements

Written by lankamuslim

நவம்பர் 26, 2015 இல் 11:28 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: