Lankamuslim.org

One World One Ummah

புலிகளின் கனவுக்கு உதவி புரியும் தேசிய அரசாங்கம்! மஹிந்த குற்றச்சாட்டு

with one comment

mahinda_monks_001மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க இடமளிப்பதானது ஈழத்திற்கு வழியை ஏற்படுத்திக்கொடுப்பதாகும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.தங்காலை கௌதம விகாரையில் நடைபெற்ற புண்ணியதான நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க இடமளிப்பது ஈழத்திற்கு வழியை ஏற்படுத்திக்கொடுப்பது போல், புலிகளின் கனவுக்கு உதவி செய்வதாகும். இதற்கு உதவுவதையே அரசாங்கம் செய்து வருகிறது.

தடை செய்யப்பட்ட அமைப்புகள் மற்றும் நபர்களுக்கு தடை நீக்கப்பட்டுள்ளது. புலிச் சந்தேக நபர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

நாங்கள் ஊர்வலம் சென்றால் தடை செய்கின்றனர். நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துகின்றனர். நாட்டில் இரண்டு சட்டங்கள். என்ன செய்ய போகிறார்கள் என்பது எனக்கு புரியவில்லை.

அதேவேளை வரவு செலவுத் திட்டத்திற்கு நாங்கள் அழுத்தங்களை கொடுக்கவில்லை.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவானர்களும் இருக்கின்றனர். எதிரானவர்களும் இருக்கின்றனர். அவர்கள் விரும்பியவாறு வாக்களிப்பாளர்கள். கட்சிக்கு அந்த சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.

வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு சுமை அதிகம். அதிகரித்தவைகளை குறைத்து வருகின்றனர். எதிர்காலத்தில் மேலும் குறையும் எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

Written by lankamuslim

நவம்பர் 25, 2015 இல் 4:51 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஒரு பதில்

Subscribe to comments with RSS.

  1. கொலைவெறி பிடித்தாடி இரத்தம் குடித்த பாசிச புலிகளை மாவீரர்களாக கொண்டாடும் தமிழினம் இன்னும் தங்கள் பழைய மனநிலையிலிருந்து மாறவில்லை என்பது புலனாகின்றது. எனவே மீண்டுமொருமுறை நரபலி நாடகம் அரங்கேற்ற விளைகிறார்கள் போலும். மகிந்தவின் எச்சரிக்கையை பொடுபோக்காக மைத்திரி கண்டுகொள்ளாமல் விடுவாராக இருந்தால்….. 2005 க்கு முன்னரான நிலைமைதான்!

    Risniy

    நவம்பர் 26, 2015 at 11:43 பிப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: