Lankamuslim.org

One World One Ummah

இன ,மத அடிப்படையில் பாடசாலைகள் இயங்குவது நிறுத்தப்பட வேண்டும் என்றகிறார் ஜனாதிபதி

with one comment

maithri_sir_sahira_009எதிர்வரும் காலத்தில் இலங்கையில் , இன,மத அடிப்படையில்  பாடசாலைகள் இயங்குவது நிறுத்தப்பட வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார்.கொழும்பு சாஹிராக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு வைபவம் இன்று நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்திரி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி,நாட்டில் அனைத்து இன மக்களிடையேயும் சகோதரத்துவத்தையும், நம்பிக்கையையும் கட்டியெழுப்ப இந்த அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

இந்த முயற்சியை வெற்றிகரமாக பூர்த்தி செய்வதற்கு அடிப்படையில் இருந்தே மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். அதன் ஒரு கட்டமாக இன, மத அடிப்படையில் பிரித்து பாடசாலைகள் நிறுவப்படவோ, இயங்கவோ கூடாது.

எதிர்காலத்தில் சிங்கள, தமிழ், முஸ்லிம் பிள்ளைகள் ஒன்றாக கல்வி கற்கும் நிலை உருவாக வேண்டும். அதன் மூலமாக மட்டுமே நாட்டில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்பக் கூடியதாக இருக்கும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

குறித்த வைபவத்தில் அமைச்சர் பௌசி, கொழும்பு மேயர் முஸம்மில், பலஸ்தீனத்துக்கான இலங்கைத் தூதுவர் பௌசான் அன்வர் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்

maithri_sir_sahira_002maithri_sir_sahira_005maithri_sir_sahira_006maithri_sir_sahira_011maithri_sir_sahira_012maithri_sir_sahira_014
maithri_sir_sahira_007
maithri_sir_sahira_009maithri_sir_sahira_001

Written by lankamuslim

நவம்பர் 24, 2015 இல் 9:38 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஒரு பதில்

Subscribe to comments with RSS.

  1. இணக்கப்பாடு என்ற பெயரில் ஒவ்வொருவருக்கும் உள்ள தனிப்பட்ட சமய, கலாச்சார, ஒழுக்க விழுமியங்களை பேணும் உரிமைகளை இல்லாமல் செய்து தற்போதுள்ள ஒழுக்க மீறல்களையும் பாலியல் குற்றங்களையும் அதிகரிக்கச்செய்யும் முயற்சியாகவே மைத்திரியின் இந்த செயற்பாடு அமையும். ஏனெனில் முஸ்லிம்களுக்கு (அதாவது இஸ்லாத்திற்கு) ஒழுக்கம் உயிர்நாடி. அது அதிகம் போதிக்கப்படுவதும், பிரயோகிக்கப்படுவதும் பாடசாலையில்தான் என்பதை மைத்திரிக்கு உணர்த்துங்கள்.

    Risniy

    நவம்பர் 25, 2015 at 10:25 முப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: