Lankamuslim.org

One World One Ummah

யாழ் ஒஸ்மானிய கலூரியில் சமந்தா பவர் இப்படி தெரிவித்தாராம்

leave a comment »

samantha_power_osmaniya_010வடக்கு முஸ்­லிம்­களின் விட­யங்­களை நாம் நீண்ட கால­மாக அவதாத்து­வ­ரு­கின்றோம். “இனச்­சுத்­தி­க­ரிப்பு” என்ற பதப்­பி­ர­யோகம்  அர­சியல் தளத்தில் அறி­மு­க­மா­வ­தற்கு முன்­னமே வடக்கு முஸ்­லிம்கள் அதனை அனு­ப­வித்­தி­ருக்­கின்­றார்கள். இலங்­கையில் அமை­தியும் சமா­தா­னமும் ஏற்­ப­ட­வேண்டும் என்­பது எமது விருப்­ப­மாகும் என  ஐக்­கிய நாடுகள் சபைக்­கான அமெ­ரிக்­காவின் நிரந்­தரப் பிர­தி­நிதி சமந்தா பவர் தெரி­வித்தார்.

நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை யாழ்ப்­பா­ணத்­திற்­கான தனது உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யத்தை மேற்­கொண்­டி­ருந்தார். இதன்­போது அமெ­ரிக்க அர­சாங்­கத்­தினால் யாழ்ப்­பாணம் ஒஸ்­மா­னியா கல்­லூ­ரியில் நிர்­மாணிக்­கப்­பட்­டி­ருந்த விஞ்­ஞான ஆய்­வூ­கூ­டத்தை உத்­தி­யோ­க­பூர்­வ­மாக ஒஸ்­மா­னியா கல்­லூரிக்கு கைய­ளிக்கும் நிகழ்­விலும் சமந்தா பவர் கலந்­து­கொண்டார்.

நிகழ்வில் இலங்­கைக்­கான அமெ­ரிக்க தூதுவர் அதுல் கேஷாப், வடக்கு மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஷ்­வரன், வடக்கு மாகா­ண­சபை கல்வி அமைச்சர் த.குரு­கு­ல­ராஜா, மற்றும் வடக்கு மாகா­ண­சபை உறுப்­பினர் அய்யூப் அஸ்மின் ஆகி­யோரும் கலந்­து­கொண்­டனர். கட்­டி­டத்தை திறந்­து­வைப்­ப­தற்கு முன்னர் சமந்தா பவர் ஆற்­றிய உரை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில், இந்த நாட்­டிலே அமை­தி­யையும் சமா­தா­னத்­தையும் ஏற்­ப­டுத்­து­வதில் நாம் எமது பங்­க­ளிப்­பு­களை வழங்­கி­வ­ரு­கின்றோம்.

யுத்தம் பல பின்­ன­டை­வு­களை ஏற்­ப­டுத்­தி­விட்­டது. அது சீர் செய்­யப்­ப­ட­வேண்டும் என்­பது எமது விருப்­ப­மாகும்.

அண்­மையில் ஏற்­பட்ட மழை வெள்­ளத்தில் பலர் பாதிக்­கப்­பட்­டார்கள், இந்த பாட­சா­லை­யிலே பலரும் அக­தி­க­ளாக தஞ்சம் அடைந்­தார்கள், இன, மத வேறு­பா­டு­க­ளுக்கு அப்பால் நீங்கள் அனை­வ­ரையும் அர­வ­ணைத்து அவர்­க­ளுக்கு உத­வி­யி­ருக்­கின்­றீர்கள், அதனால் உங்­க­ளுக்கு சில அசௌ­க­ரி­யங்கள் ஏற்­பட்­டி­ருந்­தாலும் அத­னையும் பொருட்­ப­டுத்­தாது நீங்கள் செயற்­பட்­டி­ருக்­கின்­றீர்கள்.

இதுதான் எமதும் நோக்­க­மாகும், அதற்­காக பாட­சாலை சமூ­கத்தை நான் பாராட்­டு­கின்றேன்.

வடக்கு முஸ்­லிம்­களின் விட­யங்­களை நாம் நீண்ட கால­மாக அவ­தா­னித்­து­வ­ரு­கின்றோம். “இனச்­சுத்­தி­க­ரிப்பு” என்ற பதப்­பி­ர­யோகம்  அர­சியல் தளத்தில் அறி­மு­க­மா­வ­தற்கு முன்­னமே வடக்கு முஸ்­லிம்கள் அதனை அனு­ப­வித்­தி­ருக்­கின்­றார்கள்.

இலங்­கையில் அமை­தியும் சமா­தா­னமும் ஏற்­ப­ட­வேண்டும் என்­பது எமது விருப்­ப­மாகும். 2008 ஆம் ஆண்டு முதல் இலங்­கையில் யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­கான உத­வி­களை நாம் நேர­டி­யாக மேற்­கொள்­கின்றோம். அந்­த­வ­கையில் இந்தக் கட்­டி­டமும் அமைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

இங்கே ஆவ­லோடு அமர்ந்­தி­ருக்­கின்ற மாண­வர்­களை நான் காண்­கின்றேன், அவர்­கள்தான் எமது எதிர்­காலம். மாண­வர்­களே!! உங்­க­ளிடம் ஒரு விட­யத்தை நான் எதிர்­பார்க்­கின்றேன். இவ்­வா­றான ஒரு கட்­டி­டத்தை அமைத்துக் கொடுத்­த­மை­யினை நீங்கள் மகிழ்­வோடு ஏற்றுக் கொள்­கின்­றீர்­களா? இதனை முறை­யாகப் பயன்­ப­டுத்­துவோம் என்று உறு­தி­யாக சொல்­கின்­றீர்­களா என்று கேட்க விரும்­பு­கின்றேன். என்று மாண­வர்­களை நோக்கி கேள்வி எழுப்­பினார்.

மாண­வர்­களும் அதற்கு ஆம் என்று உரத்த தொனி­யிலே பதில் தெரி­வித்­தார்கள். இறு­தி­யாக “ஜனா­நா­யகம், நீதி நிலை­நாட்­டப்­ப­டு­கின்ற தேசத்தில் நாம் எல்லோரும் அமைதியான வாழ்வை எதிர்பார்க்கின்றோம் என்றார்.

அதனைத் தொடர்ந்து யாழ் கதீஜா மகளிர் கல்லூரி, மற்றும் புனித கன்னியஸ்திரியர் குடும்ப கல்லூரி மாணவிகளுக்கும் இடையிலான சினேகபூர்வ எல்லே விளையாட்டினையும் அமெரிக்க பிரதிநிதி சமந்தா பவர் ஆரம்பித்து வைத்தார். மேற்படி நிகழ்வுகளை இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.-TC

Written by lankamuslim

நவம்பர் 23, 2015 இல் 3:21 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: