Lankamuslim.org

One World One Ummah

விபரம் : 2016 வரவு செலவுத் திட்டம்

leave a comment »

bu02.00 PM – தேசிய அர­சாங்­கத்தின் 2016 ஆம் நிதி ஆண்டுக்கான முதலாவது வரவு செலவுத் திட்டம் இன்று பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்பிக்­கப்­ப­டு­கின்­றது.

02.02 PM –  சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரிய மன்றுக்கு வருகை

02.03 PM – 2016 ஆம் நிதி ஆண்­டுக்­கான வரவு செலவுத் திட்டத்தை நிதி­ய­மைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க சமர்ப்பிக்கின்றார்.

02.05 PM – தேசிய அர­சாங்­கத்தின் 2016 ஆம் நிதி ஆண்­டுக்­கான முதலாவது வரவு செலவுத் திட்டத்தை சபையில் முன்வைப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன்.

02.07 PM – 2015 ஆம் ஆண்டு 8 ஆம் திகதி ஏற்பட்ட ஆட்சி மாற்றம் இந்நாட்டின் திருப்பு முனையாக அமைந்தது.

02.10 PM – ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து உலக நாடுகள் பலவற்றிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

02.17 PM – பத்து இலட்சம் வேலை வாய்ப்பு வழங்கப்படும்.

02.20 PM – எதிர்காலத்தில் பலமான பொருளாதாரம் அவசியமாகும்.

02.24 PM – கடந்த பத்து மாதங்களில் அரசியல், சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

02.27 PM – 2004 தொடக்கம் 2014 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் நாட்டு மக்களின் முக்கிய தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை.

02.30 PM – கடந்த கால ஆட்சியில் நாட்டின் கடன் மாத்திரமே உயர்ந்துகொண்டிருந்தது.

02.33 PM –  ராஜபக்ஷ யுகம் நாட்டில் மீண்டும் வரக் கூடாது.

02.37 PM – கடந்த ஆட்சியில் வீதி அபிவிருத்திக்காக உலக நாடுகளிடம் கூடுதலாக கடன் பெறப்பட்டுள்ளது.

02.40 PM – 2014 ஆம் ஆண்டில் தேசிய உற்பத்தி நூற்றுக்கு 10 வீதமாக குறைந்துள்ளது.

02.45 PM – எதிர்கால வரவு செலவுத்  திட்டத்தை தற்போது முன்வைக்கின்றேன்.

02.48 PM – கடந்த பத்து மாதங்களில் நாட்டில் இருந்த பொருளாதார பிரச்சினையை கண்டுப்பிடித்துள்ளோம்.

02.53 PM – மஹிந்த ஆட்சியில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டது. இதன் மூலம் நாம் நல்ல பாடத்தை கற்று கொண்டோம்.

03.00 PM – புதிதாக அரசாங்க உத்தியோகத்தில் இணைந்து கொள்பவர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம்.

03.05 PM – பின்தங்கிய பாடசாலை மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

03.10 PM – டெங்கு, சிறுநீரக நோய் மற்றும் புற்றுநோய் ஆகியவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

03.15 PM – வீதி புனரமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

03.15 PM – சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் எரிபொருள் பாவனைக்கு நடவடிக்கை.

03.20 PM – கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் ரயில் மற்றும் வாகன போக்குவரத்தில் எரிபொருளுக்கு பதிலாக சூரிய சக்தியை பயன்படுத்த திட்டம்.

03.22 PM – எமது வாக்குறுதிகள் கட்டாயம் நிறைவேற்றப்படும்.

03.25 PM – சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கு கடன் உதவி- 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

03.30 PM – வன்னி, அம்பாறை பகுதிகளில் சிறிய வணிக நிலையங்களை அமைக்க திட்டம்.

03.33 PM –  தரமான விதையினங்களை உற்பத்தி செய்ய 1000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

03.38 PM – இறக்குமதி செய்யப்படும் அரிசி வகைகள் நம் நாட்டில் உற்பத்தி செய்ய நடவடிக்கை.

03.41 PM – அதிக இரசாயன உரப்பாவனைகளால் சிறுநீரக நோய் ஏற்படுகின்றது. எனவே இரசாயன  உரப்பாவனைகட்டுப்படுத்தப்படும்.

03.43 PM – பழ வகைகள் மற்றும் மரக்கறி விவசாயம் செய்து ஏற்றுமதி செய்யும் தொழிலாளர்கள் வங்கியில் பெறும் கடன் உதவிக்கு வட்டி வீதம் குறைக்கப்படும்.

03.45 PM – பழங்கள் மற்றும் மரக்கறி உற்பத்திக்கு 2000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

03.46 PM – கீரி சம்பா 50 ரூபா, சம்பா 41 ரூபா, நாடு 38 ரூபா ஆகியன நிர்ணய விலை அடிப்படையில் அரசினால் விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்படும்.

03.47 PM – மீனவர்களுக்கு ஒரு மில்லியன் ரூபா காப்புறுதி.

03.48 PM – 400 கிராம் பால் மா பக்கற்றின் விலை 325 ரூபாவிலிருந்து  295 ரூபாவாக குறைப்பு.
03.49 PM – புதிய தொழினுட்பத்தை கொண்ட மீனவ துறைமுகத்தை அமைப்பதற்கு 750 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

03.50 PM – தேயிலை உற்பத்தி துறை எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு விசேட குழு.

03.52 PM – தேங்காய் உற்பத்திக்கு 250 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

03.54 PM – தேயிலை ஏற்றுமதியின் போது ‘சிலோன் டீ” என கட்டாயம் பெயரிட வேண்டும்.

03.56 PM – பாக்கு உற்பத்தியை ஊக்குவிக்க திட்டம்.

03.58 PM – “ பொக்குரு கம்மான ” திட்டத்தின் மூலம் கிராமிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தல் : 21 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

03.59 PM – வவுனியாவில் பொருளாதார வலயம் அமைக்கப்படும்.

04.00 PM – அலங்காரமீன் கைத்தொழிலில் ஈடுப்படுவர்களுக்கு கடன் உதவி.
04.01 PM – சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் போதைபொருள் ஒழிப்புக்காக 2000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

04.02 PM – தங்கம் மற்றும் மாணிக்க கற்கல் ஏற்றுமதி செய்ய விசேட பத்திரம்.

04.03 PM – காட்டு யானைகளின் அச்சுறுத்தலை தடுக்க 4000 மில்லின் ரூபா ஒதுக்கீடு.

04.04 PM – பிரதேச சபை மற்றும் மாகாண சபைகள் இலத்திரனியல் திட்டம் மூலம் இயங்க திட்டம்.

04.05 PM –  அடுத்த வருடம் ஏப்ரல் முதல் இலங்கையில் வருடாந்தம் இரத்தினக் கல் ஏலம்.

04.06 PM – கிராமசேவக பிரிவுகளை அபிவிருத்தி செய்ய  1500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

04.07 PM – 2016 ஜனவரி முதலாம் திகதி முதல் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை அறிமுகம்.

04.09 PM – இந்தியாவில் காணப்படும் ‘ஆதார்” திட்டம் போல் இலங்கையிலும் அமுல்படுத்தப்படும்.

04.13 PM – 500 வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்களை உருவாக்கும் முதலீட்டாளர்களுக்கு 50 வீத வரி.

04.16 PM – புதிய முதலீட்டு சட்டம் அறிமுகம்.

04.18 PM – எந்தவொரு வங்கி மூலமும் நாட்டில் முதலீடு செய்ய வெளிநாட்டவர்களுக்கு வாய்ப்பு.

04.20 PM – இலங்கை பணம் வெளிநாடுகளில் உள்ளது. மீண்டும் நாட்டுக்குள் கொண்டு வரப்படும்.

04.22 PM – வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 15 நாட்களில் அனுமதியைப் பெற்றுக்கொள்ள முடியும்.

04.25 PM – சொகுசு வரி முற்றாக நீக்கப்படும்.

04.26 PM – குறைந்த வருமானம் பெறுபவர்கள் எதிர்வரும் 5 வருடங்களுக்குள் ஒரு இலட்சம் வீடுகள் அமைத்து குடியேற்றப்படுவர்.

04.27 PM – அரச பாவனையற்ற காணிகளில் வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்படும்.

04.27 PM – ஏற்றுமதியை மேம்படுத்த அமைச்சர்கள் அடங்கிய குழு.

04.30 PM –  ஒரு தேர்தல் தொகுதியில் 1000 வீடுகளை அமைக்க 400 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

04.31 PM – வெளிநாட்டு கட்டிட நிபுணர்கள் உள்நாட்டு கட்டிட நிபுணர்களுடன் இணைந்து செயற்படலாம்.

04.31 PM – தொடர் மாடி வீட்டு திட்டத்துக்கு 100க்கு 40 வீதம் கடன் உதவி.

04.33 PM – டயில்ஸ், கொங்ரீட் இறக்குமதி வரி நீக்கம்.

04.35 PM – வீடுகள் அமைப்பதற்கு 7 ஆயிரம் இளைஞர்களுக்கு பயிற்சி வழங்க திட்டம்.

04.37 PM – கட்டத்துறை பயிற்சி பெறுபவர்களுக்கு 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவு.

04.40 PM – சார்க் நாடுகள் இலங்கையில் முதலீடுகளை செய்து நாட்டை வணிக மையமாக மாற்ற அழைப்பு.

04.43 PM – கொழும்பு சர்வதேச நிதி கேந்திர நிலையத்தை டீ.ஆர் விஜேயவர்தன மாவத்தையில் அமைக்க திட்டம்.

04.46 PM – திவிநெகும நிதியத்தை தேசிய சேமிப்பு வங்கியில் சேர்த்தல்

04.48 PM – உள்நாட்டு வங்கி கிளைகள் வெளிநாட்டில் திறக்கும் போது வங்கிகளுக்கு நிவாரணம் வழங்கப்படும்.

04.52 PM – புதிய வாகன பதிவு கட்டணங்கள் :முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிளுக்கு 2000 ரூபா, காருக்கு 15000 ரூபா.

04.56 PM – பாடசாலை மாணவர்களுக்கு  250 ரூபாவில் வங்கி கணக்குகளை ஆரம்பிக்கலாம்.

05.01 PM – ஆடை, பாதணி மற்றும் மின்சார உபகரணங்கள் உட்பட 15 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு.

05.05 PM – தனியார் ஊழியர்களின் வேலை நாட்களை ஐந்து வேலைநாட்களாக குறைக்க தீர்மானம்.

05.08 PM – தனியார் ஊழியர்களுக்கு 2500 ரூபா அதிகரிக்க பரிந்துரை.

05.10 PM – தொழிலாளர்களின் சம்பளம் தொழில் வழங்குனர்களினால் ஆரம்பிக்கப்பட்ட வங்கி கணக்குகள் மூலம் அனுப்பட வேண்டும்.

05.11 PM – ஆசிரியர்களுக்கு விடுதி செலவுக்கு 2 ஆயிரம் ரூபா.

05.12 PM – மின்சாரம் இல்லாத பின்தங்கிய பாடசாலைகளுக்கு சூரிய சக்கதியிலான மின்சாரம்- 2000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

05.11 PM – விஞ்ஞான, கணித பீடங்கள் இல்லாத பாடசாலைகளில் விஞ்ஞான கணித பீடங்களை அமைக்க 450 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

05.11 PM – அனைத்து பாடசாலைகளுக்கும் சிறந்த மலசலக்கூட  வசதி

05.12 PM –  ஒரு வகுப்பில் அதி கூடுதலாக 35 மாணவர்கள் மாத்திரமே இருக்கலாம்.

05.12 PM – உயர்தரப் பரீட்சைக்கு பின்னர் மாணவர்களுக்கு தொழில் பயிற்சி.

05.15 PM – தொழினுட்ப பாடத்தை பல்கலைக்கழகங்களில் கற்க 5 ஆயிரம் மாணவர்களுக்கு அனுமதி.

05.16 PM – கல்விக்கு 90 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

05.17 PM – ஆயுர்வேத கல்வி உட்பட மேலும் புதிய கற்கை நெறிகளை ஆரம்பிக்க திட்டம்.

05.18 PM – மாணவர்களின் சீருடைக்கு வர்த்தக பெறுமதியுடைய வவுச்சர்கள்.

05.20 PM – புதிதாக இணையும் ஆசிரியர்களுக்கு முதல் 5 வருடங்களுக்குள் 2 வருட கட்டாயப் பயிற்சி.

05.20 PM – 2018 இல் அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கும் விடுதிகள் வழங்கப்படும்.

05.21 PM – சிறப்பு கல்வித் திட்டங்களை ஆரம்பிக்க 3 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

05.21 PM – மஹாபொல பல்கலைக்கழகம் மாலபே பகுதியில் அமைக்கப்படும்.

05.23 PM – பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலகு கொடுப்பனவு முறையில் மடிக் கணனி மற்றும் இலவச வைய் -பை முறை.

05.25 PM –  சிறுநீரக நோயாளிகளுக்கு மின்னேரியாவில் வைத்தியசாலை அமைக்கப்படும்.

05.27 PM – குருநாகல், அநுராதபுரம் வைத்தியசாலைகளை புனரமைக்க 3 ஆயிரம் மில்லியன் ரூபா.

05.30 PM – பொலிஸ் பயிற்சி நிலையத்துக்கு 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

05.32 PM – நல்லூர் மற்றும் கண்டியில் புற்றுநோய் வைத்தியசாலைகள் அமைக்கப்படும்.

05.34 PM – கேஸ் விலை 150 ரூபாவாலும் மண்ணெண்ணெய் 10 ரூபாவாலும் குறைப்பு.

05.35 PM – நாட்டில் இலவச வைய்- பை வலயங்களை அமைக்க 3000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

05.35 PM – பொலிஸாரின் சம்பள பிரச்சினைக்கு 2 வருடத்தில் தீர்வு.

05.37 PM – பொலிஸ் நிலையங்களின் எண்ணிக்கை 600 ஆக அதிகரிப்பு.

05.39 PM – திகன, பதுளையில் விமான நிலையங்களை அமைக்க திட்டம்.

05.41 PM – மத்தல விமான நிலையத்தில் விமான தொழில்சார் பயிற்சி நிலையம் ஆரம்பிக்க திட்டம்.

05.43 PM – நெடுஞ்சாலைகளை பராமரிப்பதற்கு விசேட குழு நியமனம்.

05.46 PM – ஸ்ரீ லங்கா எயார் லைன் சேவையில் அரசாங்க இடையூறுகள் இருக்காது.

05.49 PM – தனியார் பஸ்கள் , முச்சக்கர வண்டிகள் மற்றும் பாடசாலை சேவையில் ஈடுபடும் வாகனங்களுக்கு புதிய சட்ட ஒழுங்கு.

05.52 PM – ரயில் பாதைகளை புனரமைக்க 1500 மில்லியன் ரூபா.

05.55 PM – வெளிநாட்டில் தொழில் புரிபவர்களுக்கு நிர்ணய சம்பளம்.

05.59 PM -11 அத்தியாவசிய பொருட்களின் விலை   100க்கு 20 வீதமாக குறைக்கப்படும்.

06.05 PM – பெரிய வெங்காயம் அதி கூடிய சில்லறை விலை 85- 95 ரூபா.

06.07 PM – 425 கிராம் ரின் மீன் 125 ரூபாவால் குறைப்பு.

06.08 PM –  சிறுவர்களுக்கான பால் மா 100 ரூபாவால் குறைப்பு .

06.09 PM –  நெத்தலி 418 ரூபாவாக குறைப்பு.

06.10 PM – பருப்பு 169 ரூபாவாக குறைப்பு.

06.11 PM – கட்டா கருவாடு 120 ரூபாவால் குறைப்பு.

06.11 PM – கடலை கிலோ 169 ரூபாவாக குறைப்பு.

06.12 PM – கெசினோ, புகையிலை ஆகியவற்றுக்கு 25 வீதமாக வரி அதிகரிப்பு.

06.12 PM – வரி விலக்குகளை மறுபரிசீலனை செய்ய திட்டம்.

06.25 PM – 2016 ஆம் ஆண்டில் அஸ்பெஸ்டோஸ் சீட் பாவனையை முற்றாக நீக்க திட்டம்.

06.27 PM – ஆங்கில தொலைகாட்சி நாடகங்கள் மற்றும் திரைப்படங்களுக்கான வரி நீக்கம்.- வீரகேசரி

Advertisements

Written by lankamuslim

நவம்பர் 20, 2015 இல் 4:14 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: