Lankamuslim.org

One World One Ummah

வடக்கில் இடம்பெறும் மக்கள் போராட்டங்கள் தவறானவையல்ல : அத்து­ர­லியே ரத்ன தேரர்

leave a comment »

athuraliye_rathana_CI.gifஅரசியல் கைதி­களின் விடு­த­லைக்­காக வடக்கு கிழக்கில் மக்கள் முன்­னெ­டுக்கும் போராட்­டங்­களை மக்களின் குர­லா­கவே கவ­னிக்­கப்­பட வேண்டும். அப்­பாவி தமி­ழர்கள் அநா­வ­சி­ய­மாக தண்­டிக்கப்படாது உட­ன

டி­யாக விடு­தலை செய்­யப்­ப­ட­வேண்டும் என தூய்­மைக்­கான நாளை அமைப்பின் தலைவர் அத்து­ர­லியே ரத்ன தேரர் தெரி­வித்தார். இந்த அர­சாங்­க­மா­வது தமிழ் மக்­களின் விட­யத்தில் கவனம்

செலுத்த வேண்டும் எனவும் தெரி­வித்தார்.

அர­சியல் கைதி­களின் விடு­தலை தொடர்பில் இன்று நாட்டில் பல்­வேறு கருத்­துகள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்ற நிலையில் கைதி­களின் விடு­தலை தொடர்பில் வின­விய போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் மேலும் கூறு­கையில்,

நாம் கடந்த காலங்­களில் பல சிக்­க­லுக்கு முகம் கொடுத்­தி­ருந்தோம். கடந்த முப்­பது ஆண்­டு­கா­ல­மாக இந்த நாடு தவ­றான பாதையில் பய­ணித்து வந்­தது. ஆயுத மோதல்­க­ளிலும் கொள்ளை, கொலை என பல சிக்­கல்­க­ளுக்கு முகம்­கொ­டுத்­துள்ளோம். எனினும் இப்­போது அவ்­வா­றான நிலை­மைகள் எதுவம் நாட்டில் இல்லை. கடந்த காலங்­களில் இலங்­கையின் குழப்­பங்­களும் அச்­சு­றுத்­தலும் ஏற்­பட சிங்­கள தலை­மை­களும் பொறுப்புக் கூற வேண்டும். அவ­சி­ய­மான உரி­மை­களை வடக்கு மக்­க­ளுக்கு அன்று பெற்றுக் கொடுத்­தி­ருந்தால் இவ்­வா­றான இழப்­புகள் எவையும் இடம்­பெற்­றி­ருக்­காது. அதேபோல் கடந்த பத்து ஆண்­டு­களில் இலங்­கையின் அர­சியல் பாதை மிகவும் மோச­மா­ன­தா­கவே அமைந்­தது. நாட்டின் வளங்கள் கொள்­ளை­ய­டிக்­கப்­பட்­டன, மதக்­க­ல­வ­ரங்­க­ளையும் இன முரண்­பா­டு­க­ளையும் தோற்­று­விக்கும் வகையில் அர­சாங்கம் மிகவும் மோச­மாக நடந்­து­கொண்­டது. அபி­வி­ருத்­திகள் என்ற பெயரில் இலங்­கையின் வளங்­களை வெளி­நா­டு­க­ளுக்கு விற்­றனர். அதேபோல் வடக்கில் தமிழ் மக்கள் எதி­ரிகள் என்ற கண்­ணோட்­டத்­தி­லேயே இவர்கள் பார்த்­தார்கள்.

யுத்­தத்தில் காண­மல்­போன பொது­மக்கள், பாதிக்­கப்­பட்ட மக்கள் தொடர்பில் கடந்த அர­சாங்கம் எவ்­வாறு செயற்­பட்­டது என்று கேட்டால் எம்மால் உறு­தி­யாக எதையும் தெரி­விக்க முடி­யாது. அதேபோல் யுத்த கால­கட்­டத்தில் சந்­தே­கத்தின் பெயரில் கைது செய்­யப்­பட்ட பொது­மக்கள் தொடர்­பிலும் முன்­னைய அர­சாங்கம் எந்­த­வித நட­வ­டிக்­கை­க­ளையும் முன்­னெ­டுக்­க­வில்லை.

இப்­போது புதிய அர­சாங்கம் இந்த விட­யங்­களில் அதிக அக்­கறை செலுத்த வேண்டும். இந்த நாட்டில் தமிழ் மக்கள் ஒரு­வி­தத்­திலும் சிங்­கள மக்கள் ஒரு விதத்­திலும் கவ­னிக்­கப்­படக் கூடாது. அனைத்து மக்­க­ளையும் சம உரி­மை­க­ளுக்கு அமை­யவே கவ­னிக்­கப்­பட வேண்டும். உண்­மையில் குற்­ற­வா­ளி­க­ளாக நிரூபிக்­கப்­பட்ட நபர்கள் சட்­ட­திட்­டங்­க­ளுக்கு அமைய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்டும். ஆனால் குற்­ற­வா­ளிகள் இல்­லாத தமிழ் கைதி­களை உட­ன­டி­யாக விடு­விக்­கப்­பட்ட வேண்டும்.

இன்று வடக்­கிலும் கிழக்­கிலும் இடம்­பெற்­று­வரும் மக்கள் போராட்­டங்­களை எக்­கா­ர­ணத்தை கொண்டும் குற்றம் சுமத்தமுடியாது. அவர்களின் உறவுகளை விடுவிக்கக்கோரி கோரிக்கை விடுப்பது நியாயமான ஒன்றாகும். அவர்களின் குரல் தமிழ் மக்களின் குரல்கள் என்ற ரீதியில் கவனிக்கப்படவேண்டும் ஆகவே அரசாங்கம் இந்த விடயங்களை கவனத்தில் கொண்டு செயற்பட வேண்டும் எனக் குறிப்பிட்டார்.-VK

Written by lankamuslim

நவம்பர் 16, 2015 இல் 8:39 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: