Lankamuslim.org

One World One Ummah

சமந்தா பவர் 23 ஆம் திகதி இலங்கை வருகிறார்

leave a comment »

USAஐக்கிய நாடுகள் சபைக்­கான அமெ­ரிக்­காவின் பிர­தி­நிதி சமந்தா பவர் எதிர்­வரும் 23 ஆம் திகதி இலங்­கைக்கு வருகை தர­வுள்ளார். இந்த விஜ­யத்தின் போது ஜனா­தி­பதி மைத்திரிபால சிறி­சேன , பிர­தமர் ரணில் விக்கிர­ம­சிங்க , வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர, மற்றும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் பிரதிநி­திகள் உள்­ளிட்ட பல்­வேறு தரப்­பி­ன­ரையும் அமெ­ரிக்கப் பிர­தி­நிதி சமந்தா பவர் சந்­தித்து பேச்­சுவார்த்தை நடத்­த­வுள்ளார்.

அடுத்­த­வாரம் இந்­தி­யாவின் புது­டில்­லியில் நடை­பெ­ற­வுள்ள சர்­வ­தேச மாநா­டொன்றில் கலந்து கொள்ள வருகை தரும் சமந்தா பவர் அங்­கி­ருந்­த­வாறு இலங்­கைக்கு வருகை தர­வி­ருக்­கிறார்.

இலங்­கைக்­கான விஜ­யத்தின் போது ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ரணை தொடர்­பா­கவும் அது தொடர்பில் இலங்கை அர­சாங்­கத்­தினால் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்ள செய ற்­பா­டுகள் குறித்தும் விரி­வாக கலந்­து­ரை­யா­டப்­ப­ட­வுள்­ளது.

குறிப்­பாக இலங்கை அர­சாங்­கத்­தினால் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்ள உள்­ளக விசா­ரணை பொறி­முறை தொடர்­பா­கவும், சம­பந்தா பவரும் இலங்கை அர­சாங்­கத்தின் பிர­தி­நி­தி­களும் பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்­ளனர்.

இலங்­கையில் புதிய அர­சாங்கம் அமைக்­கப்­பட்ட பின்னர் அமெ­ரிக்­கா­வி­லி­ருந்து வருகை தரு­கின்ற இரண்­டா­வது உயர் மட்ட அதி­காரி சமந்தா பவ­ராக காணப்­ப­டு­கின்றார்.

கடந்த பாரா­ளு­மன்ற தேர்தல் முடி­வ­டைந்­ததும் தெற்கு மற்றும் ஆசிய விவ­கா­ரங்­க­ளுக்­கான அமெ­ரிக்க உதவி இரா­ஜாங்க செயலர் நிஷா பிஷ்வால் இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்­டி­ருந்­தமை விசேட அம்­ச­மாகும். அந்த கையில் மிகவும் குறு­கிய காலத்தில் மற்­று­மொரு உயர் அதி­காரி இலங்­கைக்கு வருகை தர­வுள்ளார்.

Written by lankamuslim

நவம்பர் 16, 2015 இல் 7:46 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: