Lankamuslim.org

One World One Ummah

எவன்கார்ட் விசாரணையை நான் பொறுப்பேற்று நடத்த போகின்றேன் : ஜனாதிபதி

with one comment

mi3 n RWஎவன்கார்ட் மிதக்கும் ஆயுதக் கப்பல்  தொடர்பான அனைத்து விசாரணைகளையும்  தான் பொறுப்பேற்று நடத்த தீர்மானித்திருப்பதாக  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தின் போது  அறிவித்துள்ளார்.

அனைத்து விசாரணைகளும் தனது மேற்பார்வையிலேயே இடம்பெறும் என்றும் அறிவித்துள்ள ஜனாதிபதி சட்டம்  ஒழுங்கு  மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சரான திலக் மாரப்பனவின் இராஜினாமாவை ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

பரபரப்பான சூழ்நிலையில் இன்று  திங்கட்கிழமை  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  தலைமையில்  ஜனாதிபதி செயலகத்தில் விசேட அமைச்சரவைக் கூட்டம்  இடம்பெற்றுள்ளது. இதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Written by lankamuslim

நவம்பர் 9, 2015 இல் 4:07 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஒரு பதில்

Subscribe to comments with RSS.

  1. சர்ச்சைக்குறிய எவன் கார்ட் நிறுவனம் சம்பந்தமான பிரச்சினையை மறக்கடிக்க செய்வதற்கு வேறொரு விடயத்தை முன்னிலைப்படுத்த முயற்சிப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

    இந்தவிடயத்தில் சம்பந்தப்பட்டிருப்பது திலக் மாரப்பன மாத்திரம் அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    தற்போது திலக் மாரப்பன அமைச்சுப் பதவியை இராஜனாமா செய்துள்ளார்.

    திலக் மாரப்பனவிற்கு இருப்பது போன்ற குற்றச்சாட்டு நீதியமைச்சருக்கும் இருப்பதாக தெரிவித்தார்.

    அந்தக் கட்சியின் தலைமையகத்தில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் பேதே அநுர குமார திஸாநாயக்க இதனைக் குறிப்பிட்டார்.

    இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

    கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற அனைத்து கடத்தல்கள் மற்றும் கொலைகளுக்கும் பொறுப்புக் கூற வேண்டியவர் கோட்டாபய ராஜபக்ஷ என தெரிவித்தார்.

    ஆகவே இந்த சம்பவங்கள் குறித்து முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

    அவருக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றார்.

    கடந்த காலங்களில் இடம்பெற்ற அனைத்து குற்றச் செயல்களுடனும் கோட்டாபய ராஜபக்‌ஷ தொடர்புபட்டிருப்பது தற்போது தௌிவாகியுள்ளது.

    குமார் குணரட்னத்தை கடத்துவதற்கு மக்கள் விடுதலை முன்னணி தகவல் வழங்கியதாக கோட்டாபய ராஜபக்ஷ கூறுகின்றார்.

    நாங்கள் அதனை முற்றாக மறுக்கின்றோம். எங்களுக்கு அவ்வாறானதொரு தேவை இல்லை எனவும் தெரிவித்தார்.

    cm

    நவம்பர் 9, 2015 at 8:53 பிப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: