Lankamuslim.org

One World One Ummah

அல்குர்ஆன் அவமதிப்பு: ஞான­சார தேர­ருக்கு எதி­ராக குற்றப் பத்­தி­ரிகை தாக்கல்

leave a comment »

boபொது­ ப­ல ­சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேர­ருக்கு எதி­ராக குற்றப் பத்­தி­ரிகை தாக்கல்ச் செய்­யப்­பட்­டுள்­ளது. கோட்டை நீதிவான் நீதி­மன்றில் இந்த குற்றப் பத்­தி­ரிகை  கொழும்பு குற்றத் தடுப்புப் பொலி­ஸா­ரினால் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது.

குற்­ற­வியல் தண்­டணை சட்டக் கோவையின் 291 ஏ மற்றும் 291 பீ ஆகிய பிரி­வு­களின் கீழ் கல­கொட அத்தே ஞான­சார தேர­ருக்கு எதி­ராக இந்த குற்றப் பத்­தி­ரிகை தாக்கல்ச் செய்­யப்­பட்­டுள்­ளது.

கொம்­பனித் தெரு பொலிஸ் நிலையம் முன்­பாக வைத்து ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்கும் போது இஸ்லாம் மதத்­தையும் முஸ்­லிம்­க­ளையும் நிந்­திக்கும் வகையில் புனித அல் குர் ஆனை அவ­ம­தித்து பேசி­ய­தாக பொலி­ஸா­ருக்கு கிடைக்கப் பெற்ற முறைப்­பாட்டை விசா­ரணை செய்தே இந்த வழக்கு தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது.

நேற்று கோட்டை நீதிவான் நீதி­மன்­றத்தில் இது தொடர்­பி­லான வழக்கு விசா­ர­ணைக்­கு எடுத்துக் கொள்­ளப்­பட்ட போது பொது­ ப­ல ­சே­னாவின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் நீதி­மன்றில் ஆஜ­ரா­கி­யி­ருந்தார். குற்றப் பத்­தி­ரிகை தாக்கல் செய்­யப்­பட்­ட­தை­ய­டுத்து குறித்த குற்­றங்கள் தொடர்பில் குற்­ற­வா­ளியா சுற்ற­வா­ளியா என நீதிவான் அவ­ரிடம் வின­வினார். அதற்கு தான் குற்­ற­வா­ளி­யல்ல என குற்­றத்தை மறுத்து தான் சுற்றவாளி என ஞான­சார தேரர் மன்றில் தெரி­வித்தார்.

இத­னை­ய­டுத்து வழக்கை தொடர்ந்து விசா­ரணை செய்ய தீர்­மா­னித்த நீதிவான் பிரி­யந்த லிய­னகே விசா­ர­ணையை எதிர்­வரும் ஜன­வரி 12 ஆம் திக­திக்கு ஒத்­தி­வைத்தார்.

முறைப்­பாட்­டாளர் சார்பில் சட்­டத்­த­ர­ணிக­ளான மைத்­திரி குண­ரத்ன, சரத் சிறி­வர்த்­தன ஆகியோர் மன்றில் ஆஜ­ரா­கி­யி­ருந்­தனர்.

Written by lankamuslim

நவம்பர் 9, 2015 இல் 12:25 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: