Lankamuslim.org

One World One Ummah

சகல சமூ­கங்­களும் திருப்­திப்­படும் வகை­யி­லான அர­சியல் தீர்வு : SLMC தீர்மானம்

leave a comment »

slmcஇலங்கை வாழ் சகல பிர­ஜை­களும் சமூ­கங்­களும் திருப்­திப்­படும் வகை­யி­லான அதி­காரப் பகிர்­வி­னையும், கௌர­வ­மான சக­வாழ்­வி­னையும் உறு­திப்­ப­டுத்தக் கூடிய அர­ சியல் தீர்வின் அவ­சி­யத்தை மு.கா.வின் 26 ஆவது பேராளர் மாநாடு வலி­யு­றுத்­து­வ­தோடு, இத்­தீர்வை செயற்­ப­டுத்­து­வ­தற்குத் தேவை­யான அனைத்து அர­சியல் அமைப்புச் சீர்­தி­ருத்­தங்­க­ளையும் வாக்­கு­று­தி­ய­ளிக்­கப்­பட்­ட­வாறு நிறை­வேற்ற வேண்­டு­மென்று அர­சாங்­கத்தை வலி­யு­றுத்­து­கி­றது.

இவ்­வாறு மு.கா.வின் 26ஆவது வரு­டாந்த பேராளர் மாநாடு நேற்று பொல்­கொல்ல மஹிந்த ராஜபக் ஷ மண்­ட­பத்தில் கட்­சியின் தவி­சாளர் பசீர் சேகு­தாவூத் தலை­மையில் நடை­பெற்ற போது தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டது. இதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வ­ராக அமைச்சர் ரவூப் ஹக்கீம் மீண்டும் ஏக­ம­ன­மாக தெரிவு செய்­யப்­பட்டார்.

மலே­சி­யாவின் இலங்­கைக்­கான தூதுவர் விசேட அதி­தி­யாகக் கலந்து கொண்ட இம்­மா­நாட்டில் கட்­சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் விசேட உரை­யாற்­றினார்.

இதன்­போது, பின்­வரும் தெரி­வுகள் ஏக­ம­ன­தாக இடம்­பெற்­றன.

தலைவர் – ரவூப் ஹக்கீம், தவி­சாளர் – பசீர் சேகு­தாவூத், செய­லாளர் – எம்.ரி. ஹஸன்­அலி, பொரு­ளாளர் – எம்.எஸ். அஸ்லம், பிரதித் தலை­வர்­க­ளாக – எம்.ஏ. மஜீத், ஹாபிஸ் நசீர் அஹமட் ஆகியோர் கடந்த முறை வகித்த அதே பத­வி­க­ளுக்­காக மீண்டும் தெரிவு செய்­யப்­பட்­டனர்.

இதே­வேளை, பேராளர் மாநாட்டில் பின்­வரும் தீர்­மா­னங்கள் மேற்­கொள்­ளப்­பட்­டன. தீர்­மா­னங்­களை கட்­சியின் பிரதிப் பொரு­ளா­ளரும், உயர்­பீட உறுப்­பி­னரும், கிழக்கு மாகா­ண­சபை உறுப்­பி­ன­மான கே.எம். ஜவாத் சபையில் அறி­வித்தார்.

இங்கு நிறை­வேற்­றப்­பட்ட இதர தீர்­மா­னங்கள் வரு­மாறு:

1. இலங்கை அர­சி­ய­ல­மைப்புச் சட்­டத்தில் வழங்­கப்­பட்­ட­வாறு சகல மாகா­ண­ச­பை­க­ளுக்கும் உரிய அதி­கா­ரங்­களை முழு­மை­யாக அமுல்­ப­டுத்­து­வ­தற்கு வழி­வ­குக்­கு­மாறு அர­சாங்­கத்­தினை மாநாடு வலி­யு­றுத்­து­கி­றது.

2. யுத்தம் முடிந்து 06 ஆண்­டுகள் கடந்தும் யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்டு, இடம்­பெ­யர்க்­கப்­பட்டு, நீண்ட கால­மாக இடம்­பெ­யர்ந்து அக­தி­க­ளாக வாழு­கின்ற மக்கள் இது­வரை மீள்­கு­டி­யேற்­றப்­ப­டா­மைக்கு எமது விச­னத்தைத் தெரி­விக்­கின்றோம். இது தொடர்பில் 1990ஆம் ஆண்டு இனச்­சுத்­தி­க­ரிப்பு செய்­யப்­பட்டு வட­பு­லத்­தி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்ட முஸ்­லிம்­களை தங்கள் பூர்­வீக இடங்­களில் மீளக்­கு­டி­யேற்­று­வ­தற்கு பொருத்­த­மான தேசிய மீள்­கு­டி­யேற்றக் கொள்­கை­யொன்­றினை உட­ன­டி­யாக நிறை­வேற்றி நடை­மு­றைப்­ப­டுத்­து­மாறு இம்­மா­நாடு அர­சாங்­கத்தை வலி­யு­றுத்­து­கின்­றது. இது­தொ­டர்பில், அழிந்து கிடக்­கின்ற பொது உட்­கட்­ட­மைப்பு வச­தி­களை சீர்­தி­ருத்தி சுய­மான மீள்­கு­டி­யேற்­றத்­தினை ஊக்­கு­விப்­ப­தோடு அவர்­க­ளுக்­கான பொரு­ளா­தார சமூக கலா­சார உரி­மை­களைப் பேணு­வ­தற்­கான உரி­மை­களை உறு­திப்­ப­டுத்­து­மாறு, இம்­மா­நாடு அர­சாங்­கத்தை வலி­யுத்­து­கி­றது.

3. பாரி­ய­ளவில் இடம்­பெ­யர்க்­கப்­பட்டு தங்­களின் பூர்­வீக இடங்­களில் குடி­யேற முடி­யாமல் இலங்­கைக்கு உள்­ளேயும் வெளி­யேயும் அக­தி­க­ளாக வாழு­கின்ற தமிழ் மக்­களின் துய­ரங்­களில் நாமும் பங்கு கொள்­வ­தோடு அவர்­களை உட­ன­டி­யாக சகல வச­தி­க­ளு­டனும் அவர்­க­ளுக்­கு­ரிய பூர்­வீக இடங்­களில் குடி­யேற்ற உட­னடி நட­வ­டிக்கை மேற்­கொள்­ளு­மாறு இம்­மா­நாடு அர­சாங்­கத்தை வலி­யு­றுத்­து­கி­றது.

4. கற்­றுக்­கொண்ட பாடங்கள் மற்றும் நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரை­க­ளையும் அவ் ஆணைக்­கு­ழு­வினால் பரிந்­து­ரைக்­கப்­பட்ட விட­யங்­க­ளையும் அதற்­கான தீர்­வு­க­ளையும் உட­ன­டி­யாக அமுல் நடத்­து­மாறு அர­சாங்­கத்தை இம்­மா­நாடு வலி­யு­றுத்­து­கி­றது.

5. யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி, பொறுப்­புக்­கூறல் சம்­பந்­த­மாக ஏற்றுக் கொள்ளக் கூடி­யதும் சுயா­தீ­ன­மான பொறி­மு­றை­களை அர­சாங்கம் நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தாக வழங்­கப்­பட்ட உறு­தி­மொ­ழி­களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் வர­வேற்­கின்­றது.

6. யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு புலன்­வி­சா­ரணை செய்­வ­தற்கும், நீதி வழங்­கு­வ­தற்கும் உரு­வாக்­கப்­படும் பொறி­மு­றைக்கும் குறைந்­த­பட்சம் 1985 தொடக்கம் 2014 ஆம் ஆண்டு டிசம்பர் வரை­யி­லான காலப்­ப­குதி உள்­ள­டக்­கப்­பட வேண்­டு­மென இம்­மா­நாடு வலி­யு­றுத்­து­கி­றது.

7. வடக்கு கிழக்கில் வாழும் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்­கள மக்­களின் பல­த­ரப்­பட்ட காணி உரித்துப் பிரச்­சி­னையை அவ­ச­ர­மாகத் தீர்த்து வைப்­ப­தற்கு வெளிப்­ப­டைத்­தன்மை கொண்ட பொறி­மு­றை­யொன்­றினை உரு­வாக்க அர­சாங்கம் நட­வ­டிக்கை மேற்­கொள்ள வேண்­டு­மென இம்­மா­நாடு வலி­யு­றுத்­து­கி­றது.

8. கல்­முனை சம்­மாந்­துறை பொத்­துவில் தொகு­திகள் உள்­ள­டக்­கப்­பட்ட தமிழ் பேசும் மக்­க­ளுக்­கான கரை­யோர மாவட்டக் கோரிக்­கையை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் மீண்டும் வலி­யு­றுத்­து­கி­றது.

9. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் என்ற அர­சியல் இயக்­கத்தின் வளர்ச்­சி­யிலும், வெற்­றி­யிலும் ஆரம்­பத்­தி­லி­ருந்தும் தொடர்ந்தும் அளப்­ப­ரிய பங்­கினை ஆற்றி வரு­கின்ற, எங்கள் சகோ­த­ரி­க­ளான முஸ்லிம் பெண்­களின் அர்ப்­ப­ணிப்­பினை இப்­பே­ராளர் மாநாடு நன்­றி­யுடன் நினைவு கூறு­கின்­றது. இருப்­பினும் எமது அர­சியல் செயற்­பாட்டில் பெண்­களின் செயற்­றி­ற­னு­ட­னான பங்­க­ளிப்பு அவர்­களின் ஆத­ர­வுடன் ஒப்­பிட்டு நோக்­கு­கையில் போதா­த­தாக இருப்­பதை இப்­பே­ராளர் மாநாடு ஏற்றுக் கொள்­கி­றது. ஆகவே, இந்த 26 ஆவது பேராளர் மாநாடு பெண்­களின் முழு ஈடு­பாட்­டு­ட­னான பங்­க­ளிப்­பி­னையும், பங்கு பற்­ற­லையும் பகி­ரங்­க­மாக வலி­யு­றுத்­து­கி­றது. அவ்­வா­றான ஈடு­பாட்­டு­ட­னான பங்­க­ளிப்பு அர­சியல் நீரோட்­டத்தில் பெண்­களை வலு­வூட்­டவும் அதற்­கான மாற்­றங்­களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ர­ஸுக்குள் ஏற்­ப­டுத்த உதவும் என்­ப­தையும் இப்­பே­ராளர் மாநாடு வலி­யு­றுத்­து­கி­றது.

10. சுpலா­பத்­துறை, கரு­ம­லை­யூற்றுப் பள்ளி, அஷ்ரப் நகர் பிர­தே­சங்கள் உட்­பட பாது­காப்­புப்­ப­டை­யி­னரால் கைய­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள தனியார் உரித்துக் காணி­க­ளையும் அரச அனு­ம­திப்­பத்­திர உரித்துக் காணி­க­ளையும் இழந்த முஸ்­லிம்­க­ளுக்கு, மீண்டும் அக்­கா­ணி­களின் உரி­மை­களை வழங்­கு­வ­தோடு, அவ்­வு­ட­மைகள் மீள­ளிக்­கப்­பட வேண்­டு­மெ­னவும் இம்­மா­நாடு அர­சாங்­கத்தை வலி­யு­றுத்­து­கி­றது.

11. மதம் சார்ந்த வன்­மு­றைக்­குட்­ப­டுத்­தப்­பட்­ட­வர்­களை சுதந்­தி­ர­மாக தங்­களின் மத அனுஷ்­டா­னங்­களைப் பேணு­வ­தற்கும் பேச்­சு­ரி­மை­களை வழங்­கு­வ­தற்கும், நீதி வழங்­கு­வ­தற்கும் தேவையான சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமென அரசாங்கத்தை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

12. இந் நாட்டில் வாழும் சகல இன மக்களும் அரசியலமைப்புச் சட்டத்தில் பாதுகாக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளவாறு, மத கலாசார மொழி சார்ந்த உரிமைகளை அனுபவிப்பதற்கான சூழ்நிலைகளை உருவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென இம்மாநாடு வலியுறுத்துகிறது.

13. குற்றப்பத்திரிகை வழங்கப்படாமல் தடுப்புக் காவலில் உள்ள சகல தமிழ் பேசும் கைதிகளையும் விடுவிக்க வேண்டுமென இம்மாநாடு அரசாங்கத்தை வலியுறுத்துகிறது.

14. புனித நகரான ஜெருசலத்தில் ஒருதலைப்பட்சமாக இஸ்ரேலியர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சர்வதேச சட்டங்களுக்கு முரணான அனைத்துச் செயற்பாடுகளையும் இப் பேராளர் மாநாடு வன்மையாகக் கண்டிப்பதோடு, அவற்றை உடனடியாக நிறுத்த வேண்டுமெனவும் இப்பேராளர் மாநாடு வலியுறுத்துகிறது.

Advertisements

Written by lankamuslim

நவம்பர் 7, 2015 இல் 8:23 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: