Lankamuslim.org

One World One Ummah

அரசியல் கட்சி எனும் அந்தஸ்தினை ரத்துச் செய்வேன்: தேர்தல் ஆணையாளர்

leave a comment »

ACMCஅமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், அரசியல் கட்சி எனும் அந்தஸ்தினை ரத்துச் செய்வேன் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசபிரிய இன்று தெரிவித்தார்.கடந்த பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாத் பதியுதீனுக்கும் அக்கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீதிற்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டன. இதனையடுத்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் பதவியிலிருந்து வை.எல்.எஸ்.ஹமீத் நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின்  தலைவரான அமைச்சர் றிசாத் பதியுதீன் பகிரங்கமாக அறிவித்தார்.

இந்த நீக்கம் தொடர்பில் அமைச்சர் றிசாத் பதியுதீன், தேர்தல் ஆணையாளருக்கு அறிவித்திருந்தார். இந்த விடயம் தொடர்பில் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசபிரிய, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிசாத் பதியுதீன் மற்றும் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீத் ஆகிய இரு தரப்பினையும் தேர்தல் செயலகத்தில் இன்று அழைத்து தனித்தானியாக பேச்சு நடத்தினார்.

இதன்போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீதுடன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபையிர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் மற்றும் முசலி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எஹியா பாய் உள்ளிட்ட சிலர் சென்றிருந்தனர்.

அதேவேளை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீனுடன், கட்சியின் தவிசாளர் பிரதி அமைச்சர் எம்.எஸ்.அமீர் அலி உள்ளிட்ட கட்சியின் உயர் பீட உறுப்பினர்கள் சென்றிருந்தனர்.

இதன்போது இரு தரப்பினரும் இணைந்து செயற்படுமாறு தேர்தல் ஆணையாளர் அறிவுறுத்தியுள்ளார். அவ்வாறில்லாமல் இரு தரப்பினருக்கும் இடையில் தொடர்ச்சியாக முரண்பாடு காணப்பட்டால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸினை ரத்துச் செய்வேன் என தேர்தல் ஆணையாளர் இரு தரப்பினரிடமும் எச்சரித்துள்ளார்.

Advertisements

Written by lankamuslim

நவம்பர் 4, 2015 இல் 10:44 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: