Lankamuslim.org

One World One Ummah

10 வருடங்களில் 700 ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்: ஐ.நா

leave a comment »

UN 3உலகில் சகல துறைகளிலும் பங்களிப்புச் செய்த 700 ஊடகவியலாளர்கள் கடந்த 10 வருடங்களில் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.ஊடகவியலாளர்களுக்கு எதிராக குற்றங்களை கண்டிக்கும் நோக்கில் பெயரிடப்பட்டுள்ள சர்வதேச வன்முறையை எதிர்க்கும் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில், ஐக்கிய நாடுகள் அமைப்பு இதனை கூறியுள்ளது. இன்று அந்த தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் மக்களுக்கு செய்திகளை கொண்டு சேர்க்கும் செய்தியாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆவர்.

2013 ஆம் ஆண்டு நவம்பர் 2 ஆம் திகதி மாலியில் வைத்து இணர்டு ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டனர். இதனையடுத்தே ஐக்கிய நாடுகள் அமைப்பு இந்த தினத்தை பெயரிட்டது.2014 ஆம் ஆண்டு ஐ.எஸ். ஈராக்கின் மொசூல் நகரை கைப்பற்றிய தினத்தில் இருந்த இதுவரை ஈராக்கில் 13 ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் ஐ.நா அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையில் கடந்த 10 வருடங்களில் மூத்த ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க, பிரகீத் எக்நேலியகொட உட்பட பல ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் எக்நேலியகொட கடத்திச் செல்லப்பட்டு காணாமல் போக செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் தமிழ் ஊடகவியலாளர்களான சிவராம், நிமலராஜன் உட்பட பலர் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஊடகவியலாளர்களின் கொலையுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு இதுவரை தண்டனை வழங்கப்படவில்லை என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.

Written by lankamuslim

நவம்பர் 2, 2015 இல் 11:47 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: