Lankamuslim.org

One World One Ummah

மக்களுக்கு சுமையில்லாத வரவு செலவுத்திட்டம் என்கிறார் ரவி-

leave a comment »

Ravi-karunayakkeஅடிப்படையான விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வரவு செலவு திட்டம் ஒன்றை முன்வைக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தயார் படுத்தப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

மக்கள் மீது சுமையை செலுத்தாத வகையில் அந்த வரவு செலவுத்திட்டம் தயார்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் இன்று குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு – கிங்ஸ்பேரி நட்சத்திர ஹேட்டலில் நடைபெற்ற உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் 15ஆவது வருடாந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

2015ஆம் ஆண்டு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு 516 பில்லியன் இலக்கு வழக்கப்பட்டதாகவும், அவர்கள் 602 பில்லியன் இலக்கை தற்போது எட்டியுள்ளதாகவும் நிதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

சுங்கத் திணைக்களத்திற்கு மேலதிகமாக, நாட்டிற்கு அதிக வருமானத்தை ஈட்டிக் கொடுப்பது உள்நாட்டு இறைவரித் திணைக்களம் எனவும், அது நவீனமயப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் வரவு செலவுத்திட்டத்தை வெற்றிக் கொள்ள 80 வீதமான ஒத்துழைப்புக்களை இந்த திணைக்களமே வழங்கும் என தெரிவித்த அமைச்சர், நாட்டிலுள்ள செல்வந்தர்களிடமிருந்து வரி அறவீடுகளை பெற்று அதனை வெற்றி கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

2000 பில்லியன் ரூபா வரி வருமானத்தை எதிர்பார்ப்பதாக

அடுத்த வருடத்திற்காக 2000 பில்லியன் ரூபா வரி வருமானத்தை எதிர்பார்ப்பதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற உள்நாட்டு இறைவரி ஆணையாளர்களின் வருடாந்த மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்

இதன் போது நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க கருத்து தெரிவிக்கையில்…

நாம் மிகச் சிறந்த வரவுசெலவுத் திட்டமொன்றை முன்வைக்க எதிர்ப்பார்க்கின்றோம் எமது வருடாந்த தேசிய உற்பத்தியுடன் ஒப்பிடுகையில் எமது வருமானம் பாரிய வீழ்ச்சியடைந்துள்ளது .அது இந்த வருடம் 10.8 ஆக காணப்பட்டது.இவ்வாறு சென்றால் நீண்டகாலம் செல்ல முன்னர் எமது அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் ஆகியவற்றை வழங்குவதில் சிக்கல்கள் ஏற்படலாம்,இதனால் இதனை நவீன மயப்படுத்துவது அவசியமாகின்றது.

Written by lankamuslim

நவம்பர் 2, 2015 இல் 4:37 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: