Lankamuslim.org

One World One Ummah

துருக்கி: நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது

with one comment

klMazahim Mohamed: துருக்கியில் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஜனாதிபதி அர்துகானின் நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி தனிப்பெரும்பான்மை பலத்தை பெற்று வெற்றியீட்டியுள்ளது

,550 உறுபினர்களை கொண்ட பாராளுமன்றத்தின் சுமார் 316 இடங்களை கைப்பற்றியுள்ளதாக உத்தியோகபூர்வமற்ற முறையில் அறிவிக்கப்பட்டுள்ளது ,

தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குகளில் 49.4 வீதத்தை கைப்பற்றியுள்ள நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி தனிப் பெரும்பான்மையை கைப்பற்றியுள்ளது தனிப் ஆட்சி அமைக்க குறைந்தது 276 ஆசனங்கள் தேவைப்பட்டமை குறிப்பிடத்தக்கது

அதேவேளை இடசாரி மக்கள் குடியரசு கட்சி 25.4 வீத வாக்குகளை கைப்பற்றியுள்ளது , தீவிர வலதுசாரி தேசியவாத நடவடிக்கை கட்சி 11.9 வீத வாக்குகளை கைப்பற்றியுள்ளது குர்திஷ் சார்பு இடதுசாரி மக்கள் ஜனநாயக கட்சி 10.7 வீத வாக்குகளை கைப்பற்றியுள்ளது

கடந்த ஜூன் மாதம் நடந்த தேர்தலில் குர்திஷ் சார்பு இடதுசாரி மக்கள் ஜனநாயக கட்சி கட்சியின் வாக்கு வங்கியில் ஏற்பட்ட கணிசமான அதிகரிப்பு ஜனாதிபதி அர்துகானின் நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சிக்கு பெரும்பான்மை பலம் கிடைக்கும் வாய்ப்புக்கு தடையாக காணப்பட்டது, கூட்டணி அரசாங்கம் அமைப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சியும் வெற்றியளிக்கவில்லை.

அதேவேளை குர்திஷ் சார்பு இடதுசாரி மக்கள் ஜனநாயக கட்சி கட்சியின் பிரபலம் அதிகரித்துவருகின்றது என தெரிவிக்கப்பட்ட சூழ்நிலையில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காத சூழ்நிலையே மீண்டும் ஏற்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த வெற்றி மீண்டும் நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சியின் பலத்தை நிரூபித்துள்ளது இந்த வெற்றி நாட்டின் மற்றும் பிராந்தியத்தின் இஸ்திரத் தன்மைக்கு ஏற்படவிருந்த அச்சுறுத்தலை ஓரளவு தனித்துள்ளது என கூறலாம் இது பிராந்தியத்தில் ஏற்பட்டுவரும் இஸ்திரமற்ற ஆபத்தான நிலைக்கு சவாலை ஏற்படுத்தும் வெற்றியாகவே பார்க்கப்படல் வேண்டும்.  ஒருவேளை துருக்கியில் இக்கட்சி ஒருவேளை தோல்வி கண்டிருந்தால் சிரியாவை சூழ ஏற்பட்டுவரும் ஆபத்தான நிலை மேலும் மோசமாகக்க காரணமாக அமைத்திருக்கும்

Written by lankamuslim

நவம்பர் 2, 2015 இல் 8:04 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஒரு பதில்

Subscribe to comments with RSS.

  1. Mashaa Allah! Allah Akbar!

    Now, Arthurkaan has more burden and more responsibilities! let Allah put his mercy on him to march bravely against the anti-islam politicians.

    Risniy

    நவம்பர் 2, 2015 at 2:53 பிப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: