Lankamuslim.org

One World One Ummah

வெள்ளைவான் கடத்தல்களுடன் தொடர்பு கிடையாது: கோதபாய

leave a comment »

gotaவெள்ளைவான் கடத்தல்களுடன் தொடர்பு கிடையாது என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 1986 – 1989ம் ஆண்டுகளில் கலர் வேன்களில் பெரும் எண்ணிக்கையிலான இளைஞர் யுவதிகள் தெற்கில் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டதாகவும் இந்த வரலாற்றை அமைச்சர் மேர்வின் சில்வா மறந்து விட்டு கருத்து வெளியிட்டு வருவதாகவும் இவர் தம்மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் எஸ்.புலித்தேவனுடன் தாம் எவ்வித தொடர்புகளையும் பேணவில்லை. புலித்தேவன் மட்டுமன்றி பிரபாகரன் கூட சரணடைந்திருந்தால் மீட்டு புனர்வாழ்வு அளித்திருப்போம் என தெரிவித்துள்ளார்.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போதான பொது மக்கள் உயிர்ச் சேத விபரங்கள் தொடர்பில் அப்போதைய அரசாங்கம் வழங்கிய புள்ளி விபரத் தகவல்கள் மற்றும் பரணகம அறிக்கை ஆகியனவற்றை சர்வதேச சமூகம் நிராகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்வதும் அல்லது புதிய சட்டங்களை அமுல்படுத்துவதும் குறித்து தற்போதைய அரசாங்கமே தீர்மானிக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

யுத்த நிறைவின் போது 5000 பேர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் தாம் பதவியை விட்டு ஓய்வு பெற்றுக்கொண்ட போது கடுமையான பயங்கரவாத குற்றச் செயல்களில் ஈடுபட்ட  270 பேர்  தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Advertisements

Written by lankamuslim

நவம்பர் 2, 2015 இல் 1:15 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: