Lankamuslim.org

One World One Ummah

”கருப்பு ஒக்டோபர்- 25”: யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்

leave a comment »

jaffnamuslimsdemo25yearsofevictionவடமாகாணத்தில் இருந்து விடுதலைப்புலிகளினால் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 25 ஆண்டுகள் ( கருப்பு ஒக்டோபர்- 25 ) இன்று ( வெள்ளிக்கிழமை) நிறைவடைகையில், யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்கள், அந்தச் சம்பவத்தைக் கண்டித்தும், தங்களுக்கு நியாயம் வழங்குவதற்கு ஆணைக்குழு நியமிக்க வேண்டும் எனக்கோரியும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியிருக்கின்றார்கள்.

யாழ்ப்பாணம் ஐந்து சந்தியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், கண்டன வாசகங்கள் அடங்கிய அட்டைகளையும், கோரிக்கை வாசகங்கள் எழுதப்பட்ட அட்டைகளையும் ஏந்தியிருந்தனர். இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் சரியான முறையில் மீள்குடியேற்றப்பட வேண்டும் என்றும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்கள் கோரியிருக்கின்றார்கள்.

வடமாகாணத்தில் இருந்து கடந்த 1990 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள், மதவாச்சி, அனுராதபுரம், புத்தளம், கொழும்பு என நாட்டின் பல இடங்களிலும் அவர்கள் சிதறிய நிலையில் வாழ்க்கை நடத்தி வருவதாகக் கூறப்படுகின்றது.

வடமாகாண மாவட்டங்களான வவுனியா, மன்னார், முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களில் கணிசமான முஸ்லிம் குடும்பங்கள் மீள்குடியேறியுள்ள போதிலும், ஒப்பீட்டளவில் யாழ்ப்பாணத்தில் முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் மிகவம் குறைவாகவே இருக்கின்றது.

வடக்கில் இருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்ட 25 ஆம் ஆண்டு நிறைவையொட்டி கொழும்பில் நடைபெற்ற வைபவம் ஒன்றில், முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு தேசிய கொள்கையொன்று உருவாக்கப்பட வேண்டும் என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் கோரியிருக்கின்றார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இலங்கையில் அமைக்கப்படவுள்ள விசாரணை பொறிமுறையில், முஸ்லிம்களின் விவகாரமும் நிச்சயம் உள்வாங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில் மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.-BBC

அதேவேளை வட மாகாணத்திலிருந்து விடுதலைப் புலிகளினால் வெளியேற்றப்பட்டு  புத்தளத்தில் வாழ்ந்து வரும் முஸ்லிம்கள் தங்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தியும் உரிய நடவடிக்கைகளை வலியுறுத்தியும் நஷ்டஈட்டை கூறியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .

புத்தளம் – சிலாபம் பிரதான வீதியின் தில்லையடி ரத்மல்யாய பகுதியில் ஜும்ஆ தொழுகையின் பின்னர் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Written by lankamuslim

ஒக்ரோபர் 30, 2015 இல் 5:23 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: