Lankamuslim.org

One World One Ummah

மாட்டிறைச்சி கடைகளுக்கு அனுமதி வழங்க வேண்டாம்! மேர்வின் சில்வா

leave a comment »

min mervin silvaமாட்டிறைச்சி விற்கும் கடைகளுக்கு அனுமதிப் பத்திரம் வழங்க வேண்டாமென முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா, உள்ளூராட்சி சபைகளிடம் நேற்று கோரிக்கை விடுத்துள்ளார்.

மேர்வின் சில்வா தலைமையில், பசு வதையை தடை செய்யும் பொருட்டு மில்லியன் கையழுத்துகளை பெறும் நிகழ்ச்சித் திட்டம், மாத்தறையில் நேற்று ஆரம்பமாகிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

விலங்குகள் பலி பூஜை நடத்தப்பட்ட காரணத்தினாலேயே நேபாளத்தில் 2015 ஏப்ரல் மாதம் பூமியதிர்ச்சி ஏற்பட்டதாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்படுவதற்கு 15 நாட்களுக்கு முன்னர் அங்குள்ள ஆலயம் ஒன்றில் பாரிய விலங்கு பலி பூஜை நடத்தப்பட்டது. இதுவே நேபாளத்தில் பூகம்பம் ஏற்பட காரணமாக அமைந்தது எனவும் மேர்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் அந்த பலி பூஜை சம்பந்தமாக எழுந்த எதிர்ப்பு காரணமாக 2015 ஆம் ஆண்டு நேபாளத்தில் பலி பூஜை நடத்தப்படவில்லை என சர்வதேச ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Written by lankamuslim

ஒக்ரோபர் 28, 2015 இல் 4:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: