Lankamuslim.org

One World One Ummah

கராத்தே வீரர் கொலை: 8 பேர் கைது

leave a comment »

wasantha-soysaகராத்தே வீரர் வசந்த சொய்சா கொலை தொடர்பில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் 15 பேர் தேடப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அனுராதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முதிதா மாவத்தை பகுதியில் உள்ள இரவு நேர களியாட்ட விடுதிக்கு நேற்று முன்தினம் இரவு 11.45 அளவில் சென்ற முகத்தை மூடிய நபர்களை கொண்ட குழுவினர், அதன் உரிமையாளர் மற்றும் ஊழியர்களை கூரிய ஆயுதங்களினால் தாக்கியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த விடுதியின் உரிமையாளரான வசந்த சொய்சா என்பவர் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.கொலை சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டுள்ளவர்களிடமிருந்து கிடைத்த தகவலுக்கமைய இரத்தம் படிந்த நான்கு தடிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும்,

இந்த நபர்கள் தஹய்யாகம, மஸ்மடுவ, விஜயபுர மற்றும் பாலன்குளம் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்வதற்காக தடுத்து வைப்பதற்கான நீதிமன்ற உத்தரவு பெற்றுகொள்வதற்கு அதிக வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

karaththey_veerar_004 karaththey_veerar_002

Written by lankamuslim

ஒக்ரோபர் 26, 2015 இல் 10:10 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: