Lankamuslim.org

One World One Ummah

முஸ்­லிம்­களின் மீள் குடி­யேற்­றத்­துக்கு முட்­டுக்­கட்டை போட வேண்டாம்

with one comment

rishathமுஸ்லிம் மக்­களின் மீள்­கு­டி­யேற்­றத்­திற்கு தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு ஆத­ரவு வழங்­கா­விட்­டாலும் பரவா­யில்லை. அதற்கு முட்­டுக்­கட்டை போடாமல் இருந்தால் போது­மா­னதாகும் என அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் தெரி­வித்தார்.

மீள்­கு­டி­யேற்ற அமைச்­ச­ராக நான் பதவி வகித்­த­போது, தமிழ் மக்­களின் மீள்­கு­டி­யேற்­றத்­திற்கு முன்­னு­ரிமை வழங்­கினேன். ஆனால் இன்று முஸ்­லிம்கள் ஓரங்­கட்­டப்­ப­டு­கி­றார்கள் என்றும் அமைச்சர் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று முன்தினம் வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்ற இலங்கை தொடர்­பான ஐ.நா. அறிக்கை மற்றும் அமெ­ரிக்க பிரே­ரணை தொடர்­பான விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே, கைத்­தொழில் வர்த்­தக அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் இவ்­வாறு தெரி­வித்தார். அமைச்சர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில், நாம் தமிழ் மக்­க­ளுக்கு எதி­ரா­ன­வர்கள் அல்லர். தமிழ் பேசும் மக்கள் என்ற ரீதியில் அம்­மக்­களின் மீள் குடி­யேற்­றத்­திற்கு தடை­யாக இருக்க மாட்டோம்.

யுத்தம் முடிந்த பின்னர் இடம்­பெ­யர்ந்த தமிழ் மக்­களின் மீள்­கு­டி­யேற்­றத்தை அப்­போது நான் அவ்­வி­ட­யத்­திற்கு பொறுப்­பான அமைச்­ச­ராக பதவி வகித்த போது சிறந்த முறையில் மேற்­கொண்டேன். தமிழர் பகு­தி­களில் சிங்­கள மக்­க­ளையோ முஸ்லிம் மக்­க­ளையோ நான் குடி­யேற்­ற­வில்லை.

ஆனால் எனக்கு பின்னர் பலர் மீள்­கு­டி­யேற்ற அமைச்சர் பத­வி­களை ஏற்­றனர். ஆனால் வடக்­கி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்ட முஸ்­லிம்­களை மீள்­கு­டி­யேற்ற நட­வ­டிக்­கை­மேற்­கொள்­ள­வில்லை.அதற்கு எதி­ராக பலர் செயற்­பட்­டனர். புத்­த­ளத்தில் குரு­நா­கரில் எமது மக்கள் இடம்­பெ­யர்ந்து வாழ்­கின்­றனர். அவர்கள் கேட்­பது தம்மை சொந்த இடங்­களில் வாழ வைக்க வேண்டும் என்­ப­துதான். தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் தலை­வ­ருக்கு எதிர்க்­கட்சித் தலைவர் பதவி கிடைத்­த­போது முழு­மை­யான ஆத­ரவை வழங்­கினோம்.

சம்­பந்தன், மாவை சேனா­தி­ராஜா ஆகியோர் எமது மக்­களின் மீள்­கு­டி­யேற்ற விட­யத்தில் மித­வா­தத்­தையே கடை­ப்பி­டிக்­கின்­றனர். ஆனால் கூட்­ட­மைப்பின் சிலர் இவ் விட­யத்தில் கடும் போக்கை கடைப்­பி­டிப்­பது கவ­லை­ய­ளிக்­கின்­றது.வில்­பத்தில் முஸ்­லிம்கள் தமது சொந்தக் கிரா­மங்­க­ளி­லேயே மீள்­கு­டி­யேற்­றப்­பட்­டனர். ஆனால் பொது­பல சேனா போன்ற இன­வாத அமைப்­பு­களும் சில ஊட­கங்­களும் இதனை காட­ழிப்­பாக காட்­டினர்.

காடு அழிக்­கப்­பட்டு மக்கள் குடி­யேற்­றப்­ப­டு­வ­தாக குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்­டன. இது தொடர்பில் அமைச்சர் சுவா­மி­நா­தனை சந்­தித்தும் எமது மக்களின் பிரச்சினைகள் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.முஸ்லிம்களின் மீள்குடியேற்றும் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஆதரவு வழங்காவிட்டாலும் அதற்கு தடைபோடாமல் இருந்தால் போதும் என்றும் அமைச்சர் ரிஷாத் தெரிவித்தார்.

Written by lankamuslim

ஒக்ரோபர் 24, 2015 இல் 1:54 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஒரு பதில்

Subscribe to comments with RSS.

  1. வடகிழக்குத்தமிழர்கள் ஒருவேளை இஸ்ரேலிய யூதர்களின் நெருங்கிய பரம்பரையோ என எண்ணத்தோன்றுகிறது முஸ்லிம்கள் மீதான அவர்களது காழ்ப்புணர்வுகளையும், இனவாத நடவடிக்கைகளையும், துவேசத்தின் உச்ச கட்டத்தையும் பார்க்கும்போது…!

    வடகிழக்குத்தமிழர்கள் முன்பும் இலங்கையில் எல்லாப்பகுதிகளிலும் எவ்வளவோ சலுகைகளையும் ஆட்சி,அதிகாரங்களையும் பெற்றிருந்த நிலையிலேயே தாங்கள் மட்டுமே இலங்கையில், அதிலும் குறிப்பாக வடகிழக்கில் வாழவேண்டும் என்ற நோக்கிலே, விடுதலைப்போராட்டம் (?) என்ற பெயரில் மனிதப்படுகொலைகளை புரிந்து வெறியாட்டம் ஆடினர். (உண்மையில் முஸ்லிம்களே அவர்களுக்கு எதிராக போராடியிருக்க வேண்டும். ஏனெனில் அந்தக்காலப்பகுதியில் தமிழர்கள் மாத்திரமே வட,கிழக்கின் ஆட்சி, அதிகாரங்களில் இருந்தனர். முஸ்லிம்களுக்கு எந்த சந்தர்ப்பத்தையும் வழங்கியிருக்கவில்லை)

    ஆனால், அதேநேரம் சிங்கள மக்களுக்கெதிராக… தங்களுக்கு அநியாயம் இழைக்கப்படுவதாக கூக்குரல் இட்டுக்கொண்டே… முஸ்லிம்களுக்கே இந்த வடகிழக்குதமிழர்கள் இன்றுவரை அநியாயம் இழைத்துக்கொண்டிருக்கிறார்கள், என்பதை பார்க்கும்போது, இதைவிட கேவலமான மனித சமூதாயத்தை காண்பது பலஸ்தீனத்தில்தான்…… அதனாலேயே இந்த வடகிழக்குதமிழர்களை இஸ்ரவேல் யூதர்களோடு ஒப்பிடவேண்டியிருந்தது!

    Risniy

    ஒக்ரோபர் 25, 2015 at 11:56 பிப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: